சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கூட
கூடங்     கூடம்     கூடிய     கூடமுக்     கூடித்     கூடும்     கூடவல்     கூடியும்     கூட     கூடு     கூடி     கூடுவ     கூட்டமொன்     கூடத்தைக்     கூடுமா     கூடலை     கூட்டின்     கூடல்     கூட்டம்     கூடினார்,     கூடினான்,     கூடிக்கூடித்     கூடா     கூடலர்     கூடினாய்,     கூடலையாற்றூரில்     கூடிக்     கூடார்    
3.039   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கூட்டின் ஆர் கிளியின் விருத்தம், உரைத்தது ஓர் எலியின் தொழில்,
பாட்டு மெய் சொலி, பக்கமே செலும் எக்கர்தங்களை, பல் அறம்
காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை, கசிவு ஒன்று இலாச்
சேட்டை கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

3.082   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கூடு அரவம் மொந்தை, குழல், யாழ், முழவினோடும் இசை செய்ய,
பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து, பேர் இடபமோடும்,
காடு அரவம் ஆகு கனல் கொண்டு, இரவில் நின்று, நடம் ஆடி,
ஆடு அரவம் ஆர்த்த பெருமான் உறைவது
அவளிவணலூரே.

3.108   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கூடல் ஆலவாய்க்கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட,
மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப்
பாடல் வல்லவர் பாக்கியவாளரே.

4.017   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கூடு அரவத்தர்; குரல் கிண்கிணி அடி
நீடு அரவத்தர்; முன் மாலை இடை இருள்
பாடு அரவத்தர்; பணம் அஞ்சுபை விரித்து
ஆடு அரவத்தர் -அரநெறியாரே.

4.017   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கூட வல்லார், குறிப்பில்(ல்), உமையாளொடும்;
பாட வல்லார்; பயின்று அந்தியும் சந்தியும்
ஆட வல்லார்; திரு ஆரூர் அரநெறி
நாட வல்லார்; வினை வீட வல்லாரே.

4.067   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கூட்டம் ஆய் ஐவர் வந்து கொடுந் தொழில் குணத்தர் ஆகி
ஆட்டுவார்க்கு ஆற்றகில்லேன் ஆடு அரவு அசைத்த கோவே!
காட்டு இடை அரங்கம் ஆக ஆடிய கடவுளேயோ!
சேட்டு இரும் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!

4.068   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கூடினார், உமை தன்னோடே குறிப்பு உடை வேடம் கொண்டு
சூடினார், கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும்;
பாடினார், சாம வேதம்; பைம்பொழில் பழனை மேயார்
ஆடினார், காளி காண; ஆலங்காட்டு அடிகளாரே.

5.049   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கூடினான், உமையாள் ஒருபாகம் ஆய்;
வேடனாய் விசயற்கு அருள் செய்தவன்;
சேடனார்; சிவனார்; சிந்தை மேய வெண்-
காடனார்; அடியே அடை, நெஞ்சமே!

5.099   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கூட வேடத்தர் ஆகிக் குழுவில் என்?
வாடி ஊனை வருத்தித் திரியில் என்?
ஆடல் வேடத்தன் அம்பலக்கூத்தனைப்
பாடலாளர்க்கு அல்லால், பயன் இல்லையே.

7.005   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கூடிக்கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே,
ஆடிப் பாடி, அழுது, நெக்கு, அங்கு அன்பு உடையவர்க்கு இன்பம் ஓரீர்;
தேடித்தேடித் திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர்;
ஓடிப் போகீர்; பற்றும் தாரீர் ஓணகாந்தன் தளி உளீரே!

7.015   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன், கோட்புலி, சென்னி
நாடு ஆர் தொல்புகழ் நாட்டியத்தான் குடி நம்பியை நாளும் மறவா,
சேடு ஆர் பூங்குழல் சிங்கடி அப்பன்-திரு ஆரூரன்-உரைத்த,
பாடீர் ஆகிலும், பாடுமின், தொண்டீர்! பாட, நும் பாவம் பற்று அறுமே.

7.018   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கூடலர் மன்னன், குல நாவலூர்க் கோன், நலத் தமிழைப்
பாட வல்ல(ப்) பரமன்(ன்) அடியார்க்கு அடிமை வழுவா
நாட வல்ல(த்) தொண்டன், ஆரூரன், ஆட்படும் ஆறு சொல்லிப்
பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே.

7.037   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கூடும் அன்னப் பெடைகாள்! குயில்! வண்டுகாள்!
ஆடும் அம் பொன்கழல் அடிகள் ஆரூரரைப்
பாடும் ஆறும், பணிந்து ஏத்தும் ஆறும், கூடி
ஊடும் ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .

7.054   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கூடினாய், மலை மங்கையை; நினையாய்; கங்கை ஆயிரமுகம் உடையாளை
சூடினாய் என்று சொல்லிய புக்கால், தொழும்பனேனுக்கும் சொல்லலும் ஆமே;
வாடி நீ இருந்து என் செய்தி? மனனே! வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி,
ஊடினால், இனி ஆவது ஒன்று உண்டே? ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!.

7.069   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கூடிய இலயம் சதி பிழையாமை, கொடி இடை உமை அவள் காண,
ஆடிய அழகா! அருமறைப் பொருளே! அங்கணா! எங்கு உற்றாய்? என்று
தேடிய வானோர் சேர் திரு முல்லை-வாயிலாய்! திருப் புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே!.

7.074   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கூடும் ஆறு உள்ளன கூடியும், கோத்தும், கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி,
மாடு மா கோங்கமே மருதமே பொருது, மலை எனக் குலைகளை மறிக்கும் ஆறு உந்தி,
ஓடு மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன்
பாடும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, பழவினை உள்ளன பற்று அறுத்தானை.

7.077   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கூடி அடியார் இருந்தாலும், குணம் ஒன்று இல்லீர்; குறிப்பு இல்லீர்;
ஊடி இருந்தும் உணர்கிலேன், உம்மை, தொண்டன், ஊரனேன்,
தேடி எங்கும் காண்கிலேன்; திரு ஆரூரே சிந்திப்பன்-
ஆடும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

7.085   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கூடலையாற்றூரில் கொடி இடையவளோடும்
ஆடல் உகந்தானை, அதிசயம் இது என்று
நாடிய இன்தமிழால் நாவல ஊரன் சொல்
பாடல்கள் பத்தும் வல்லார் தம் வினை பற்று அறுமே.

8.104   8 st/nd Thirumurai   Song # 19   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கூடல் இலங்கு குருமணி, போற்றி!
தென் தில்லை மன்றினுள் ஆடி, போற்றி!
இன்று, எனக்கு ஆர் அமுது ஆனாய், போற்றி!
மூவா நான்மறை முதல்வா, போற்றி!
சே ஆர் வெல் கொடிச் சிவனே, போற்றி!

8.132   8 st/nd Thirumurai   Song # 11   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கூடிக் கூடி, உன் அடியார் குனிப்பார், சிரிப்பார், களிப்பாராய்;
வாடி வாடி, வழி அற்றே, வற்றல் மரம் போல் நிற்பேனோ?
ஊடி ஊடி, உடையாயொடு கலந்து, உள் உருகி, பெருகி, நெக்கு,
ஆடி ஆடி, ஆனந்தம் அதுவே ஆக, அருள் கலந்தே!

8.214   8 st/nd Thirumurai   Song # 14   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
கூடார் அரண்எரி கூடக்
   கொடுஞ்சிலை கொண்டஅண்டன்
சேடார் மதின்மல்லற் றில்லையன்
   னாய்சிறு கட்பெருவெண்
கோடார் கரிகுரு மாமணி
   யூசலைக் கோப்பழித்துத்
தோடார் மதுமலர் நாகத்தை
   நூக்கும்நஞ் சூழ்பொழிற்கே.

10.105   10 st/nd Thirumurai   Song # 20   திருமூலர்   திருமந்திரம்  
கூடங் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலயமும் அற்ற தறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்களே.

10.305   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோலம் அஞ்செழுத் தாமே. 

10.402   10 st/nd Thirumurai   Song # 72   திருமூலர்   திருமந்திரம்  
கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து
ஆடிய ஐவரும் அங்குற வாவர்கள்
தேடி யதனைத் தெளிந்தறி யீரே.

10.404   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
கூடமுக் கூடத்தி னுள்ளெழு குண்டத்துள்
ஆடிய ஐந்தும் அகம்புற மாய்நிற்கும்
பாடிய பன்னீ ரிராசியும் அங்கெழ
நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே.

10.409   10 st/nd Thirumurai   Song # 33   திருமூலர்   திருமந்திரம்  
கூடிய தம்பனம் மாரணம் வச்சியம்
ஆடியல் பாக அமைந்து செறிந்தடும்
பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்
தேடிஉள் ஆகத் தெளிந்துகொள் வார்க்கே.

10.606   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
கூடித் தவம்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவம்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவம்செய்வ தேதம் இவைகளைந்(து)
ஊடிற் பலஉல கோர்எத் தவரே.

10.704   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழும்
தேடும் முகம்ஐந்தும் செங்கயல் மூவைந்தும்
நாடும் சதாசிவ நல்லொளி முத்தே.

10.708   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
கூடும் உடல்பொருள் ஆவிக் குறிக்கொண்டு
நாடி அடிவைத் தருள்ஞான சத்தியால்
பாடல் உடலினிற் பற்றற நீக்கியே
கூடியே தான்அவ னாம்குறிக் கொண்டே.

10.737   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
கூடவல் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார் நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லார்அவன் வைத்த பரிசறிந்து
ஆடவல் லார் அவர் பேறெது ஆமே.

10.738   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
கூடியும் நின்றும் தொழுதெம் இறைவனைப்
பாடி உளேநின்று பாதம் பணிமின்கள்
ஆடி உளேநின் றறிவுசெய் வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசுவது வாமே.

10.915   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
கூடிய திண்முழ வம்குழல் `ஓம்`என்ன
ஆடிய மானுடர் ஆதிப் பிரான்என்ன
நாடிய நற்கணம் ஆரும்பல் பூதங்கள்
பாடிய வாறொரு பாண்டரங் காமே.

10.915   10 st/nd Thirumurai   Song # 33   திருமூலர்   திருமந்திரம்  
கூட நின்றான் ஒரு காலத்துத் தேவர்கள்
வீட நின்றான் விகிர் தாஎன்னும் நாமத்துத்
தேட நின்றான்திக ழும்சுடர் மூன்றொளி
ஆட நின்றான் என்னை ஆட்கொண்ட வாறே.

10.920   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
வீடு கெடின்மற்றோர் வீடுபுக் காலொக்கும்
பாடது நந்தி பரிசறி வார்கட்கே. 21,

10.924   10 st/nd Thirumurai   Song # 32   திருமூலர்   திருமந்திரம்  
கூடு பறவை இரைகொத்தி மற்றதன்
ஊடுபுக் குண்டி யறுக்குறில் என்னாக்கும்
சூடெறி நெய்யுண்டு மைகான றிடுகின்ற
பாடறி வார்க்குப் பயன்எளி தாமே.

11.006   11 st/nd Thirumurai   Song # 60   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
கூடிய தன்னிடத் தானுமை
யாளிடத் தானைஐயா
றீடிய பல்சடை மேற்றெரி
வண்ணம் எனப்பணிமின்
பாடிய நான்மறை பாய்ந்து
கூற்றைப் படர்புரஞ்சுட்
டாடிய நீறுசெஞ் சாந்திவை
யாமெம் அயனெனவே.

11.009   11 st/nd Thirumurai   Song # 91   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
கூடி யிருந்து பிறர்செய்யுங் குற்றங்கள்
நாடித்தம் குற்றங்கள் நாடாதே - வாடி
வடகயிலை ஏத்தாதே வாழ்ந்திடுவான் வேண்டில்
அடகயில ஆரமுதை விட்டு.

11.032   11 st/nd Thirumurai   Song # 52   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
கூடுவ தம்பலக் கூத்த
னடியார் குழுவுதொறும்
தேடுவ தாங்கவ னாக்கமச்
செவ்வழி யவ்வழியே
ஓடுவ துள்ளத் திருத்துவ
தொண்டசுட ரைப்பிறவி
வீடுவ தாக நினையவல்
லோர்செய்யும் வித்தகமே.

11.033   11 st/nd Thirumurai   Song # 88   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
கூட்டமொன் பானொ டறுபத்து
மூன்று தனிப்பெயரா
ஈட்டும் பெருந்தவத்தோரெழு
பத்திரண் டாம்வினையை
வாட்டுந் தவத்திருத் தொண்டத்
தொகைபதி னொன்றின்வகைப்
பாட்டுந் திகழ்திரு நாவலூ
ராளி பணித்தனனே.

11.037   11 st/nd Thirumurai   Song # 107   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
கூடம் அரண்அழித்துக் கோபுரங்க ளைக்குத்தி
நீடு பொழிலை நிகர் அழித் தோடிப்

12.210   12 st/nd Thirumurai   Song # 110   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கூடத்தைக் குத்தியொரு
குன்றமெனப் புறப்பட்டு
மாடத்தை மறித்திட்டு
மண்டபங்கள் எடுத்தெற்றித்
தாடத்திற் பரிக்காரர்
தலையிடறிக் கடக்களிற்றின்
வேடத்தால் வருங்கூற்றின்
மிக்கதொரு விறல்வேழம்.
12.210   12 st/nd Thirumurai   Song # 309   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கூட வந்து மறையவனார்
திருப்பைஞ் ஞீலி குறுகியிட
வேடம் அவர்முன் மறைத்தலுமே
மெய்ம்மைத் தவத்து மேலவர்தாம்
ஆடல் உகந்தார் அடியேனைப்
பொருளா அளித்த கருணைஎனப்
பாடல் புரிந்து விழுந்தெழுந்து
கண்ணீர் மாரி பயில்வித்தார்.
12.240   12 st/nd Thirumurai   Song # 61   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கூடுமா றருள்கொ டுத்துக்
குலவுதென் திசையில் என்றும்
நீடுவாழ் பழன மூதூர்
நிலவிய ஆலங் காட்டில்
ஆடுமா நடமும் நீகண்
டானந்தஞ் சேர்ந்தெப் போதும்
பாடுவாய் நம்மை என்றான்
பரவுவார் பற்றாய் நின்றான்.
12.290   12 st/nd Thirumurai   Song # 104   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கூடலை யாற்றூர் மேவும்
கொன்றைவார் சடையி னார்தம்
பீடுயர் கோயில் புக்குப்
பெருகிய ஆர்வம் பொங்க
ஆடகப் பொதுவி லாடும்
அறைகழல் வணங்கிப் போற்றி
நீடருள் பெற்றுப் போந்து
திருமுது குன்றி னேர்ந்தார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%95%E0%AF%82%E0%AE%9F