சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் குன்ற
குன்றம்அது     குன்றின்     குன்றெடுத்     குன்றம்     குன்றவர்     குன்றியைநிகர்     குன்றநெடுஞ்     குன்றானை,     குன்று     குன்றே     குன்ற     குன்றியூர்,     குன்றுகள்     குன்றாத     குன்ற-மலைக்கு     குன்றங்     குன்றேந்தி    
1.018   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
குன்றம்அது எடுத்தான்உடல் தோளும்நெரிவு ஆக
நின்றுஅங்கு ஒருவிரலால்உற வைத்தான்நின்றி யூரை
நன்றுஆர்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
குன்றாத்தமிழ் சொல்லக்குறைவு இன்றிநிறை புகழே.

1.052   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை,
அன்றி நின்ற, அரக்கர் கோனை அரு வரைக்கீழ் அடர்த்தாய்!
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி, இராப்பகலும்,
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

2.011   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
குன்றானை, குன்று எடுத்தான் புயம்நால் ஐந்தும்
வென்றானை, மென்மலரானொடு மால் தேட
நின்றானை, நேரிழையாளொடும் காழியுள
நன்றானை, நம்பெருமானை, நணுகுமே!

2.012   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
குன்று ஏய்க்கும் நெடுவெண்மாடக் கொடி கூடிப் போய்
மின் தேய்க்கும் முகில்கள் தோயும் வியன்கச்சியுள
மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம்
சென்று ஏய்க்கும் சிந்தையார்மேல் வினை சேராவே.

2.023   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
குன்றே அமர்வாய்! கொலை ஆர் புலியின்
தன் தோல் உடையாய்! சடையாய்! பிறையாய்!
வென்றாய், புரம்மூன்றை! வெண்நாவலுளே
நின்றாய், அருளாய்! எனும் நேரிழையே.

2.050   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
குன்ற வார்சிலை, நாண் அரா, அரி வாளி, கூர் எரி, காற்றின், மும்மதில்
வென்ற ஆறு எங்ஙனே? விடை ஏறும் வேதியனே!
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர்
நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே!

2.051   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
குன்று அடுத்த நல் மாளிகைக் கொடி, மாடம் நீடு உயர் கோபுரங்கள் மேல்
சென்று அடுத்து, உயர் வான்மதி தோயும் திருக்களருள
நின்று அடுத்து உயர்மால்வரை திரள்தோளினால் எடுத்தான் தன் நீள் முடி
அன்று அடர்த்து உகந்தாய்! அடைந்தார்க்கு அருளாயே!

2.106   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
குன்றியூர், குடமூக்கு இடம், வலம்புரம், குலவிய நெய்த்தானம்,
என்று இவ் ஊர்கள் இ(ல்)லோம் என்றும் இயம்புவர்; இமையவர் பணி கேட்பார்;
அன்றி, ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம்; வலஞ்சுழி அரனார்பால்
சென்று, அ(வ்) ஊர்தனில் தலைப்படல் ஆம் என்று சேயிழை தளர்வு ஆமே.

3.105   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
குன்றுகள் போல்-திரை உந்தி, அம் தண் மணி ஆர்தர, மேதி
கன்று உடன் புல்கி, ஆயம் மனை சூழ் கவின் ஆர் கலிக்காமூர்,
என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி
நின்று உணர்வாரை நினையகில்லார், நீசர் நமன் தமரே.

4.061   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
குன்று போல்-தோள் உடைய குணம் இலா அரக்கர் தம்மைக்
கொன்று போர் ஆழி அம் மால் வேட்கையால் செய்த கோயில்-
நன்று போல் நெஞ்சமே! நீ நன்மையை அறிதியாயில்,
சென்று நீ தொழுது உய்கண்டாய்!-திரு இராமேச்சுர(ம்)மே.

6.020   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
குன்றாத மா முனிவன் சாபம் நீங்கக் குரை கழலால் கூற்றுவனைக் குமைத்த கோனை,
அன்றாக அவுணர் புரம் மூன்றும் வேவ ஆர் அழல் வாய் ஓட்டி அடர்வித்தானை,
சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்தன்னை,
சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும்
நன்று ஆகும் நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே!.

7.099   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
குன்ற-மலைக்கு மரீ-கொடி ஏர் இடையாள்-வெருவ,
வென்றி மதகரியின்(ன்) உரி போர்த்ததும் என்னைகொல் ஆம்?-
முன்றில் இளங் கமுகின் முது பாளை மது அளைந்து,
தென்றல் புகுந்து உலவும்-திரு நாகேச்சுரத்து அரனே!

8.218   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
குன்றங் கிடையுங் கடந்துமர்
   கூறும் நிதிகொணர்ந்து
மின்றங் கிடைநும் மையும்வந்து
   மேவுவன் அம்பலஞ்சேர்
மன்றங் கிடைமரு தேகம்பம்
   வாஞ்சியம் அன்னபொன்னைச்
சென்றங் கிடைகொண்டு வாடா
   வகைசெப்பு தேமொழியே.

9.006   9 st/nd Thirumurai   Song # 10   சேந்தனார்   திருவிசைப்பா  
குன்றேந்தி கோகன கத்(து)அயன்
    அறியா நெறிஎன்னைக் கூட்டினாய்
என்றேங்கி ஏங்கி அழைக்கின்றாள்
    இளவல்லி எல்லை கடந்தனள்
அன்றே அலம்பு புனற்பொன்னி
    அணியா வடுதுறை ஆடினாள்
நன்றே இவள் நம் பரமல்லள்
    நவலோக நாயகன் பாலளே.
11.006   11 st/nd Thirumurai   Song # 74   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
குன்றெடுத் தான்செவி கண்வாய்
சிரங்கள் நெரிந்தலற
அன்றடர்த் தற்றுகச் செற்றவன்
அற்றவர்க் கற்றசிவன்
மன்றிடைத் தோன்றிய நெல்லிக்
கனிநிற்ப மானுடர்போய்
ஒன்றெடுத் தோதிப் புகுவர் நரகத்
துறுகுழியே.

11.017   11 st/nd Thirumurai   Song # 2   நக்கீரதேவ நாயனார்   திருமுருகாற்றுப்படை  
குன்றம் எறிந்தாய் குரை கடலில் சூர்தடிந்தாய்
புன்தலைய பூதப் பொருபடையாய் என்றும்
இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே
உளையாய்என் உள்ளத் துறை. 1

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல். 2

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை. 3

இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா - முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும். 4

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ் வே. 5

அஞ்சு முகம்தோன்றில் ஆறு முகம்தோன்றும்
வெஞ்ச மரில்அஞ்சல்என வேல்தோன்றும் நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன். 6

முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான். 7

காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி. 8

பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்தன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல். 9

நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான்நினைத்த எல்லாம் தரும். 10

12.100   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
குன்றவர் அதனில் வாழ்வார்
கொடுஞ்செவி ஞமலி ஆர்த்த
வன்றிரள் விளவின் கோட்டு
வார்வலை மருங்கு தூங்கப்
பன்றியும் புலியும் எண்கும்
கடமையும் மானின் பார்வை
அன்றியும் பாறை முன்றில்
ஐவனம் உணங்கு மெங்கும்.
12.100   12 st/nd Thirumurai   Song # 39   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
குன்றவர் களிகொண் டாடக்
கொடிச்சியர் துணங்கை யாடத்
துன்றிய மகிழ்ச்சி யோடும்
சூரர மகளி ராட
வென்றிவில் விழவி னோடும்
விருப்புடை ஏழாம் நாளின்
அன்றிரு மடங்கு செய்கை 
அழகுற அமைத்த பின்றை.
12.100   12 st/nd Thirumurai   Song # 90   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
குன்றியைநிகர் முன்செறஎரி
கொடுவிழிஇடி குரல்நீள்
பன்றியும்அடல் வன்றிறலொடு
படர்நெறிநெடி தோடித்
துன்றியதொரு குன்றடிவரை
சுலவியநெறி சூழல்
சென்றதனிடை நின்றதுவலி  
தெருமரமரம் நிரையில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1007   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
குன்றநெடுஞ் சிலையாளர்
குலவியபல் பதிபிறவும்
நின்றவிருப் புடனிறைஞ்சி
நீடுதிருத் தொண்டருடன்
பொன்தயங்கு மணிமாடப்
பூந்தராய்ப் புரவலனார்
சென்றணைந்தார் பழையனூர்த்
திருவாலங் காட்டருகு.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1