சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கார
கார்     காரணன்     காரிய     காரண     காரொளி     காரணி     காரியம்     காருருவக்     காரும்     கார்மிக்க     கார்முகம்     கார்விடை     கார்த்தண்     கார்அங்(கு)     கார்முழுக்கம்     கார்வளரும்     கார     காரைகள்     கார்அமண்வெஞ்     கார்கெழு     காரிகை     காரேறுங்     காரணபங்     காரானை,     காரின்     காரியானோடு,     காரைகள்,     கார்வணன்,     காரினார்     கார்க்     காரணத்தர்,     கார்க்குன்ற(ம்)     கார்த்தரங்     காரி    
1.024   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கார் ஆர் வயல் சூழ் காழிக் கோன்தனைச்
சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே.

1.025   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கார் ஆர் வண்ணன், கனகம் அனையானும்,
தேரார் செம்பொன் பள்ளி மேவிய,
நீர் ஆர் நிமிர்புன் சடை, எம் நிமலனை
ஓராதவர்மேல் ஒழியா, ஊனமே.

1.048   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கார் அடைந்த வண்ணனோடு கனகம் அனையானும்,
பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார்,
சீர் அடைந்து வந்து போற்ற, சென்று அருள் செய்தது என்னே
தேர் அடைந்த மா மறுகின் சேய்ஞலூர் மேயவனே?

1.054   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கார் அமண், கலிங்கத் துவர் ஆடையர்
தேரர், சொல் அவை தேறன் மின்!
ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர்ச்
சீரவன், கழல் சேர்மினே!

1.056   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கார் ஆர் கொன்றை கலந்த முடியினர்,
சீர் ஆர் சிந்தை செலச் செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
யார், ஆர் ஆதி முதல்வரே.

1.077   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கார் இருள் உருவ மால்வரை புரையக் களிற்றினது உரிவை
கொண்டு அரிவை மேல் ஓடி,
நீர் உருமகளை நிமிர்சடைத் தாங்கி, நீறு அணிந்து ஏறு உகந்து
ஏறிய நிமலர்;
பேர் அருளாளர்; பிறவியில் சேரார்; பிணி இலர்; கேடு இலர்;
பேய்க்கணம் சூழ
ஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.

1.078   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கார் கொண்ட கடி கமழ் விரிமலர்க் கொன்றைக் கண்ணியர்;
வளர்மதி கதிர்விட, கங்கை-
நீர் கொண்ட சடையினர்; விடை உயர் கொடியர்; நிழல் திகழ்
மழுவினர்; அழல் திகழ் நிறத்தர்;
சீர் கொண்ட மென்சிறைவண்டு பண்செய்யும் செழும் புனல்
அனையன செங்குலை வாழை
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம்
மேவிய இவர் வணம் என்னே?

2.003   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம் கரைப் பெயும்
தேர் உலாம் நெடுவீதிஅது ஆர் தெளிச்சேரியீர்!
ஏர் உலாம் பலிக்கு ஏகிட, வைப்புஇடம் இன்றியே
வார் உலாம் முலையாளை ஒர்பாகத்து வைத்ததே?

2.013   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காரானை, கடி கமழ் கொன்றைஅம்போது அணி
தாரானை, தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கிய
சீரானை, செறி பொழில் கோழம்பம் மேவிய
ஊரானை, ஏத்துமின், நும் இடர் ஒல்கவே!

2.026   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காரின் ஆர் கொன்றைக்கண்ணியார், மல்கு
பேரினார், பிறையோடு இலங்கிய
நீரினார் அ நெல்வாயிலார்; தொழும்
ஏரினார், எமது உச்சியாரே.

2.057   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கார் மருவு பூங்கொன்றை சூடிக் கமழ் புன்சடை தாழ,
வார் மருவு மென்முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர்!
தேர் மருவு நெடுவீத்க் கொடிகள் ஆடும் திரு நல்லூர்,
ஏர் மருவு கோயிலே கோயில் ஆக இருந்தீரே.

6


2.061   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காரியானோடு, கமலமலரான், காணாமை
எரி ஆய் நிமிர்ந்த எங்கள் பெருமான்! என்பார்கட்கு
உரியான், அமரர்க்கு அரியான், வாழும் ஊர்போலும்
விரி ஆர் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே.

2.084   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காரைகள், கூகை, முல்லை, கள, வாகை, ஈகை, படர் தொடரி, கள்ளி, கவினி;
சூரைகள் பம்மி; விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர்தான்
தேரைகள் ஆரை சாய மிதிகொள்ள, வாளை குதிகொள்ள, வள்ளை துவள,
நாரைகள் ஆரல் வார, வயல் மேதி வைகும் நனிபள்ளி போலும்; நமர்காள்

2.096   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கார் கொள் மேனி அவ் அரக்கன் தன் கடுந் திறலினைக்
கருதி,
ஏர் கொள் மங்கையும் அஞ்ச, எழில் மலை எடுத்தவன்
நெரிய,
சீர் கொள் பாதத்து ஒர்விரலால் செறுத்த எம் சிவன் உறை
கோயில்
தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண்வயல் காழி நன்
நகரே.

3.002   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கார் உலாவிய வார்குழலாள், கயல்கண்ணினாள்,புயல் கால் ஒளிமின் இடை,
வார் உலாவிய மென்முலையாள், மலைமாது உடன் ஆய்,
நீர் உலாவிய சென்னியன் மன்னி,நிகரும் நாமம் முந்நான்கும் நிகழ் பதி
போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே.

3.022   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கார்வணன், நான்முகன், காணுதற்கு ஒணாச்
சீர் வணச் சேவடி செவ்வி, நாள்தொறும்,
பேர் வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர் வணம் ஆவன அஞ்சு எழுத்துமே.

3.034   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காரினார் அமர்தரும் கயிலை நல் மலையினை
ஏரின் ஆர் முடி இராவணன், எடுத்தான், இற,
வாரின் ஆர்முலையொடும் மன்னனார் மருவு இடம்
சீரினார் திகழ்தரும் திரு முதுகுன்றமே.

3.060   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கார் மலி கொன்றையொடும் கதிர் மத்தமும் வாள் அரவும்
நீர் மலியும் சடைமேல் நிரம்பா மதி சூடி, நல்ல
வார் மலி மென் முலையாளொடும் வக்கரை மேவியவன்,
பார் மலி வெண்தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே.

3.065   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கார் ஊரும் மணிமிடற்றார், கரிகாடர், உடைதலை கொண்டு
ஊர் ஊரன் பலிக்கு உழல்வார், உழைமானின் உரி-அதளர்
தேர் ஊரும் நெடுவீதிச் செழுங் கச்சி மா நகர் வாய்,
நீர் ஊரும் மலர்ப்பொய்கை நெறிக்காரைக்காட்டாரே.

3.076   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கார் இயல் மெல் ஓதி நதிமாதை முடி வார் சடையில் வைத்து, மலையார்
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடுமாடம் மறுகில்
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம், ஒண் படகம், நாளும் இசையால்,
வேரி மலி வார்குழல் நல் மாதர் இசை பாடல், ஒலி
வேதவனமே.

3.087   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கார் மலி நெறிபுரி சுரிகுழல் மலைமகள் கவின் உறு
சீர் மலிதரும் மணி அணி முலை திகழ்வொடு செறிதலின்,
தார் மலி நகுதலை உடைய நள்ளாறர் தம் நாமமே,
ஏர் மலி எரியினில் இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!

3.106   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கார் அணி வெள்ளை மதியம் சூடி, கமழ் புன்சடை தன்மேல்
தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து,
வார் அணி கொங்கை நல்லாள் தனோடும் வலஞ்சுழி மேவியவர்
ஊர் அணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே!

4.019   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார முது கொன்றை கடி நாறு தண் என்ன
நீர முது கோதையோடு ஆடிய நீள் மார்பன்,
பேர் அமுதம் உண்டார்கள் உய்யப் பெருங் கடல் நஞ்சு
ஆர் அமுதா உண்டானை, -நான் கண்டது ஆரூரே.

4.029   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார் உடைக் கொன்றைமாலை கதிர் மதி அரவினோடும்
நீர் உடைச் சடையுள் வைத்த நீதியார்; நீதி உள்ள
பாரொடு விண்ணும், மண்ணும், பதினெட்டுக் கணங்கள், ஏத்தச்
சீரொடு பாடல் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே.

4.035   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார் உடைக் கொன்றை மாலை கதிர் மணி அரவினோடு
நீர் உடைச் சடையுள் வைத்த நீதியார்; நீதி ஆய
போர் உடை விடை ஒன்று ஏற வல்லவர்-பொன்னித் தென்பால்
ஏர் உடைக் கமலம் ஓங்கும் இடைமருது இடம் கொண்டாரே.

4.057   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார் அழல் கண்டம் மேயாய்; கடி மதில் புரங்கள் மூன்றும்
ஓர் அழல் அம்பினாலே உகைத்துத் தீ எரிய மூட்டி
நீர் அழல் சடை உளானே! நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே!

5.002   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரனை,
வார் உலாம் முலை மங்கை மணாளனை,
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை,
ஆர்கிலா அமுதை, மறந்து உய்வனோ?

5.029   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார்க் கொள் மா முகில் போல்வது ஓர் கண்டத்தன்;
வார்க்கொள் மென்முலை சேர்ந்து இறுமாந்து, இவள்
ஆர்க் கொள் கொன்றையன்; ஆவடுதண்துறைத்
தார்க்கு நின்று இவள் தாழுமா காண்மினே!

5.041   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரினான்,
வார் உலாம் முலைமங்கை ஓர் பங்கினன்,
தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம்
ஆர்கிலா அமுதை, அடைந்து உய்ம்மினே!

5.080   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
காரணத்தர், கருத்தர், கபாலியார்,
வாரணத்து உரி போர்த்த மணாளனார்-
ஆரணப்பொருள், அன்பில் ஆலந்துறை,
நாரணற்கு அரியான் ஒரு நம்பியே.

5.092   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார் கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார்
ஆர்கள் ஆகினும் ஆக; அவர்களை
நீர்கள் சாரப்பெறீர், இங்கு நீங்குமே!

6.001   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார் ஆனை ஈர் உரிவைப் போர்வையானை, காமரு
பூங் கச்சி ஏகம்பன் தன்னை,
ஆரேனும் அடியவர்கட்கு அணியான் தன்னை,
அமரர்களுக்கு அறிவு அரிய அளவு இலானை,
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற
பரஞ்சுடரை, பரனை, எண் இல்
பேரானை, பெரும்பற்றப்புலியூரானை, - பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.

6.001   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார் ஒளிய திருமேனிச் செங்கண் மாலும்,
கடிக்கமலத்து இருந்த (அ)அயனும், காணா வண்ணம்
சீர் ஒளிய தழல் பிழம்பு ஆய் நின்ற தொல்லைத்,
திகழ் ஒளியை; சிந்தை தனை மயக்கம் தீர்க்கும்
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும், ஏழ்
உலகுங் கடந்தண்டத் அப்பால் நின்ற
பேர் ஒளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப், சோத
நாள் எல்லாம் பிறவா நாளே.

6.002   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார் ஆர் கமழ் கொன்றைக் கண்ணி சூடி, கபாலம் கை ஏந்தி, கணங்கள் பாட,
ஊரார் இடு பிச்சை கொண்டு, உழ(ல்)லும் உத்தமராய் நின்ற ஒருவனார்தாம்:
சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர்; திரு ஆரூர்த் திரு மூலட்டானம் மேயார்-
போர் ஆர் விடை ஏறிப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

6.016   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார் ஆர் கமழ் கொன்றைக் கண்ணிபோலும்;
கார் ஆனை ஈர் உரிவை போர்த்தார் போலும்;
பாரார் பரவப்படுவார் போலும்; பத்துப்பல்
ஊழி பரந்தார் போலும்;
சீரால் வணங்கப்படுவார் போலும்; திசைஅனைத்தும்
ஆய், மற்றும் ஆனார் போலும்;
ஏர் ஆர் கமழ் குழலாள் பாகர் போலும்-இடைமருது
மேவிய ஈசனாரே!.

6.024   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார் ஏறு நெடுங்குடுமிக் கயிலாயன்காண்; கறைக்கண்டன்காண்; கண் ஆர் நெற்றியான்காண்;
போர் ஏறு நெடுங்கொடி மேல் உயர்த்தினான்காண்;
புண்ணியன்காண்; எண்ண(அ)ரும் பல் குணத்தினான்காண்;
நீர் ஏறு சுடர்ச் சூலப்படையினான்காண்; நின்மலன்காண்; நிகர் ஏதும் இல்லாதான்காண்;
சீர் ஏறு திருமால் ஓர்பாகத்தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.

6.063   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார் ஆரும் கறை மிடற்று எம் பெருமான் தன்னை, காதில் வெண் குழையானை, கமழ் பூங்கொன்றைத்-
தாரானை, புலி அதளின் ஆடையானை, தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா ஞானப்
பேரானை, மணி ஆரம் மார்பினானை, பிஞ்ஞகனை, தெய்வ நால்மறைகள் பூண்ட
தேரானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

6.066   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார் ஆனை உரி போர்த்த கடவுள் தன்னை; காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்
வாரானை; மதிப்பவர் தம் மனத்து உளானை; மற்று ஒருவர் தன் ஒப்பார், ஒப்பு, இலாத,
ஏரானை; இமையவர் தம் பெருமான் தன்னை; இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க
சீரானை; திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

6.068   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார் ஒளிய கண்டத்து எம் கடவுள் தன்னை,   காபாலி, கட்டங்கம் ஏந்தினானை,
பார் ஒளியை, விண் ஒளியை, பாதாள(ன்)னை, பால் மதியம் சூடி ஓர் பண்பன் தன்னை,
பேரொளியை, பெண் பாகம் வைத்தான் தன்னை, பேணுவார் தம் வினையைப் பேணி வாங்கும்
சீர் ஒளியை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.

6.075   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார் இலங்கு திரு உருவத்தவற்கும், மற்றைக் கமலத்தில் காரணற்கும், காட்சி ஒண்ணாச்
சீர் இலங்கு தழல்பிழம்பின் சிவந்தார் போலும்; சிலை வளைவித்து அவுணர் புரம் சிதைத்தார் போலும்;
பார், இலங்கு புனல், அனல், கால், பரமாகாசம், பருதி, மதி, சுருதியும் ஆய், பரந்தார் போலும்;
கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

6.078   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே; கயிலை மலையை உடையார் தாமே;
ஊர் ஆக ஏகம்பம் உகந்தார் தாமே; ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே;
பாரார் புகழப்படுவார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;
தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

6.082   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார் மல்கு கொன்றை அம்தாரார் போலும்; காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும்;
பார் மல்கி ஏத்தப்படுவார் போலும்; பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும்;
ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும்; ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும்;
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

6.091   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கார் முகில் ஆய்ப் பொழிவானை, பொழிந்த முந்நீர் கரப்பானை, கடிய நடை விடை ஒன்று ஏறி
ஊர் பலவும் திரிவானை, ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு
பேர் எழுத்து ஒன்று உடையானை, பிரமனோடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும்
சீர் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.

7.001   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கார் ஊர் புனல் எய்தி, கரை கல்லித் திரைக் கையால்
பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பல் மா மணி உந்தி,
சீர் ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே? .

7.009   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கார் ஊர் மழை பெய்து(ப்) பொழி அருவிக் கழையோடு அகில் உந்திட்டு இருகரையும்
போர் ஊர் புனல் சேர் அரிசில்-தென்கரைப் பொழில் ஆர் திருப்புத்தூர்ப் புனிதர் தம்மை,
ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடு ஐந்து அழகால் உரைப்பார்களும் கேட்பவரும்,
சீர் ஊர் தரு தேவர் கணங்களொடும் இணங்கி, சிவலோகம் அது எய்துவரே.

7.026   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கார் ஊரும் பொழில் சூழ் கணநாதன் எம் காளத்தியுள்
ஆரா இன்னமுதை, அணி நாவல் ஆரூரன் சொன்ன
சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார், வினை ஆயின போய்ப்
பேரா விண்ணுலகம் பெறுவார்; பிழைப்பு ஒன்று இலரே .

7.028   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கார் ஆரும் பொழில் சூழ் கடவூர்த் திரு வீரட்டத்துள்
ஏர் ஆரும்(ம்) இறையைத் துணையா எழில் நாவலர்கோன்-
ஆரூரன்(ன்) அடியான், அடித்தொண்டன்-உரைத்த தமிழ்
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே.

7.036   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட! வெண் தலை ஓடு கொண்டு,
ஊர் எலாம் திரிந்து, என் செய்வீர்? பலி ஓர் இடத்திலே கொள்ளும், நீர்!
பார் எலாம் பணிந்து உம்மையே பரவிப் பணியும் பைஞ்ஞீலியீர்!
ஆரம் ஆவது நாகமோ? சொலும்! ஆரணீய விடங்கரே!

7.053   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட கண்டர்; கடவூர் உறை வாணர்;
தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார்;
ஊர் தான் ஆவது, உலகு ஏழும் உடையார்க்கு ஒற்றியூர், ஆரூர்;
பேர் ஆயிரவர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

7.059   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கார்க்குன்ற(ம்) மழை ஆய்ப் பொழிவானை, கலைக்கு எலாம் பொருள் ஆய் உடன்கூடிப்
பார்க்கின்ற(வ்) உயிர்க்குப் பரிந்தானை, பகலும் கங்குலும் ஆகி நின்றானை,
ஓர்க்கின்ற(ச்) செவியை, சுவை தன்னை, உணரும் நாவினை, காண்கின்ற கண்ணை,
ஆர்க்கின்ற(க்) கடலை, மலை தன்னை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? .

7.077   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கார்க் கொள் கொன்றை சடைமேல் ஒன்று உடையாய்! விடையாய்! நகையினால்
மூர்க்கர் புரம் மூன்று எரி செய்தாய்! முன் நீ; பின் நீ; முதல்வன் நீ
வார்க் கொள் அருவி பல வாரி, மணியும் முத்தும் பொன்னும் கொண்டு,
ஆர்க்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

7.093   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கார் ஊர் கடலில் விடம் உண்டு அருள்செய்
நீர் ஊர் சடையன் நிலவும் இடம் ஆம்-
வார் ஊர் முலையார் மருவும் மறுகில்
தேர் ஊர்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

7.095   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கார் ஊர் கண்டத்து எண்தோள் முக்கண் கலைகள் பல ஆகி,
ஆரூர்த் திரு மூலட்டானத்தே அடிப்பேர் ஆரூரன்,
பார் ஊர் அறிய, என் கண் கொண்டீர்; நீரே பழிப்பட்டீர்;
வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர்! வாழ்ந்துபோதீரே!

8.106   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கார் உறு கண்ணியர் ஐம் புலன் ஆற்றங்கரை மரமாய்
வேர் உறுவேனை விடுதி கண்டாய்?விளங்கும் திருவா
ரூர் உறைவாய், மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
வார் உறு பூண் முலையாள் பங்க, என்னை வளர்ப்பவனே.

8.118   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கார் உடைப் பொன் திகழ் மேனி, கடி பொழில் வாழும், குயிலே!
சீர் உடைச் செம் கமலத்தில் திகழ் உரு ஆகிய செல்வன்;
பாரிடைப் பாதங்கள் காட்டி, பாசம் அறுத்து, எனை ஆண்ட
ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை; நீ, வரக் கூவாய்!

8.215   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
கார்த்தரங் கந்திரை தோணி
   சுறாக்கடல் மீன்எறிவோர்
போர்த்தரங் கந்துறை மானுந்
   துறைவர்தம் போக்குமிக்க
தீர்த்தரங் கன்தில்லைப் பல்பூம்
   பொழிற்செப்பும் வஞ்சினமும்
ஆர்த்தரங் கஞ்செய்யு மாலுய்யு
   மாறென்கொ லாழ்சுடரே.

8.225   8 st/nd Thirumurai   Song # 49   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
காரணி கற்பகங் கற்றவர்
   நற்றுணை பாணரொக்கல்
சீரணி சிந்தா மணியணி
   தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன் தக்கோர்
   தஞ்சங்க நிதிவிதிசேர்
ஊருணி உற்றவர்க் கூரன்மற்
   றியாவர்க்கும் ஊதியமே.

9.028   9 st/nd Thirumurai   Song # 3   சேதிராயர்   திருவிசைப்பா  
காரி கைக்கரு ளீர்கரு மால்கரி
ஈரு ரித்தெழு போர்வையி னீர்மிகு
சீரியல் தில்லை யாய்சிவ னேஎன்று
வேரி நற்குழ லாள்இவள் விம்முமே. 

10.209   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் என்றும் நடுவுட லாய்நிற்கும்
பாரணல் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாய்உல காயமர்ந் தானே. 

10.310   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரணம் மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.11,

10.406   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
காரண மந்திரம் ஓதும் கமலத்துப்
பூரண கும்ப இரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடு அங் குரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமு மாமே.

10.409   10 st/nd Thirumurai   Song # 20   திருமூலர்   திருமந்திரம்  
காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும்
பாரொளி நீரொளி சாரொளி காலொளி
வானொளி ஒக்க வளர்ந்து கிடந்த பின்
நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே.

10.413   10 st/nd Thirumurai   Song # 71   திருமூலர்   திருமந்திரம்  
காரணி சத்திகள் ஐம்பத் திரண்டெனக்
காரணி கன்னிகள் ஐம்பத் திருவராய்க்
காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்கும்
காரணி தன்னரு ளாகிநின் றாளே.

10.827   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ் விடக்
காரிய காரண வாதனை கண்டறும்
சீர் உப சாந்தம் முப் பாழ்விடத் தீருமே.

10.828   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
காரியம் ஏழில் கரக்கும் கடும்பசு
காரணம் ஏழில் கரக்கும் பரசிவன்
காரிய காரணம் கற்பனை சொற்பதப்
பாரறு பாழில் பராற்பரந் தானே.29,

10.829   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய காரண வாதனைப் பற்றறப்
பாரண வும்உப சாந்தப் பரிசிதே.

11.004   11 st/nd Thirumurai   Song # 54   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய்
ஓருருவாய் நின்னோடு உழிதருவான் - நீருருவ
மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய
பாகத்தான் காணாமே பண்டு.

11.006   11 st/nd Thirumurai   Song # 16   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
காரணன் காமரம் பாடவோர்
காமர்அம் பூடுறத்தன்
தாரணங் காகத் தளர்கின்ற
தையலைத் தாங்குவார்யார்
போரணி வேற்கண் புனற்படம்
போர்த்தன பூஞ்சுணங்கார்
ஏரணி கொங்கையும் பொற்படம்
மூடி இருந்தனவே.

11.007   11 st/nd Thirumurai   Song # 6   சேரமான் பெருமாள் நாயனார்   திருவாரூர் மும்மணிக்கோவை  
காரும் முழக்கொடு மின்னொடு
வந்தது காதலர்தம்
தேருந் தெருவுஞ் சிலம்பப்
புகுந்தது சில்வளைகள்
சோருஞ் சிலபல அங்கே
நெரிந்தன துன்னருநஞ்
சாரும் மிடற்றண்ணல் ஆரூரன்
ஐய அணங்கினுக்கே.

11.029   11 st/nd Thirumurai   Song # 76   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
கார்மிக்க கண்டத் தெழில்திரு
ஏகம்பர் கச்சியின்வாய்
ஏர்மிக்க சேற்றெழில் நெல்நடு
வோரொலி பொன்மலைபோல்
போர்மிக்க செந்நெல் குவிப்போர்
ஒலிகருப் பாலையொலி
நீர்மிக்க மாக்கட லின்னொலி
யேயொக்கும் நேரிழையே.

11.029   11 st/nd Thirumurai   Song # 89   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
கார்முகம் ஆரவண் கைக்கொண்ட
கம்பர் கழல்தொழுது
போர்முக மாப்பகை வெல்லச்சென்
றார்நினை யார்புணரி
நீர்முக மாக இருண்டு
சுரந்தது நேரிழைநாம்
ஆர்முக மாக வினைக்கடல்
நீந்தும் அயர்வுயிர்ப்பே.

11.029   11 st/nd Thirumurai   Song # 91   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
கார்விடை வண்ணத்தன் அன்றேழ்
தழுவினும் இன்றுதனிப்
போர்விடை பெற்றெதிர் மாண்டார்
எனவண்டர் போதவிட்டார்
தார்விடை ஏகம்பர் கச்சிப்
புறவிடைத் தம்பொன்நன்பூண்
மார்விடை வைகல் பெறுவார்
தழுவ மழவிடையே.

11.033   11 st/nd Thirumurai   Song # 61   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
கார்த்தண் முகிற்கைக் கடற்காழி
யர்பெரு மாற்கெதிராய்
ஆர்த்த வமண ரழிந்தது
கண்டுமற் றாங்கவரைக்
கூர்த்த கழுவின் நுதிவைத்த
பஞ்சவ னென்றுரைக்கும்
வார்த்தை யதுபண்டு நெல்வேலி
யில்வென்ற மாறனுக்கே.

11.034   11 st/nd Thirumurai   Song # 60   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
கார்அங்(கு) அணைபொழிற்
காழிக் கவுணியர் தீபன்,நல்லூர்ச்
சீர்அங்(கு) அணைநற் பெருமணந்
தன்னில் சிவபுரத்து,
வார்அங்(கு) அணைகொங்கை
மாதொடும் புக்குறும் போது,வந்தார்
ஆர்அங்(கு) ஒழிந்தனர், பெற்றதல்
லால்,அவ் அரும்பதமே.

11.037   11 st/nd Thirumurai   Song # 52   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
கார்முழுக்கம் மற்றைக் கடல்முழுக்கம் போற்கலந்த
சீர் முழக்கம் எங்கும் செவிடுபடப் பார்விளங்கு

12.210   12 st/nd Thirumurai   Song # 149   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கார்வளரும் மாடங்கள்
கலந்தமறை ஒலிவளர்க்குஞ்
சீருடைஅந் தணர்வாழுஞ்
செழும்பதியின் அகத்தெய்தி
வார்சடையார் மன்னுதிருத்
தூங்கானை மாடத்தைப்
பார்பரவுந் திருமுனிவர்
பணிந்தேத்திப் பரவினார்.
12.220   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கார ணங்கண் ணுதற்கன்பர் என்னவே
வார மாகி மகிழ்ந்தவர் தாள்மிசை
ஆரும் அன்பொடு வீழ்ந்தஞ் சலிமுகிழ்த்
தீர நன்மொழி எய்த இசைத்துளார்.

12.280   12 st/nd Thirumurai   Song # 115   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
காரைகள் கூகை முல்லை
எனநிகழ் கலைசேர் வாய்மைச்
சீரியற் பதிகம் பாடித்
திருக்கடைக் காப்புத் தன்னில்
நாரியோர் பாகர் வைகும்
நனிபள்ளி உள்கு வார்தம்
பேரிடர் கெடுதற் காணை
நமதெனும் பெருமை வைத்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 576   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கார்அமண்வெஞ் சுரமருளாற் கடந்தார் தாமும்
கடற்காழிக் கவுணியர்தந் தலைவர் தாமும்
சேரஎழுந் தருளியஅப் பேறு கேட்டுத்
திருமறைக்காட் டகன்பதியோர் சிறப்பிற் பொங்கி
ஊரடைய அலங்கரித்து விழவு கொள்ள
உயர்கமுகு கதலிநிறை குடந்தீ பங்கள்
வார்முரச மங்கலநா தங்கள் மல்க
எதிர்கொள்ள அடியருடன் மகிழ்ந்து வந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 812   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கார்கெழு பருவம் வாய்ப்பக்
காமுறு மகளிர் உள்ளம்
சீர்கெழு கணவன் தன்பால்
விரைவுறச் செல்லு மாபோல்
நீர்கெழு பௌவம் நோக்கி
நிரைதிரை இரைத்துச் செல்லும்
பார்கெழு புகழின் மிக்க
பண்புடை வைகை யாறு.
12.290   12 st/nd Thirumurai   Song # 385   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
காரிகை தன்பால் செல்லும்
காதலால் ஒருவன் ஏவப்
பாரிடை நடந்து செய்ய
பாததா மரைகள் நோவத்
தேரணி வீதியூடு செல்வது
வருவ தாகி
ஓரிர வெல்லாம் தூதுக்
குழல்வராம் ஒருவ ரென்று.
12.410   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
காரேறுங் கோபுரங்கள்
கதிரேறும் மலர்ச்சோலை
தேரேறும் மணிவீதி
திசையேறும் வசையிலணி
வாரேறு முலைமடவார்
மருங்கேறு மலர்க்கணைஒண்
பாரேறும் புகழ்உறந்தைப்
பதியின்வளம் பகர்வரிதால்.
12.600   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்  
காரணபங் கயம்ஐந்தின் கடவுளர்தம் பதங்கடந்து
பூரணமெய்ப் பரஞ்சோதி பொலிந்திலங்கு நாதாந்தத்
தாரணையால் சிவத்தடைந்த சித்தத்தார் தனிமன்றுள்
ஆரணகா ரணக்கூத்தர் அடித்தொண்டின் வழியடைந்தார்.


This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0