சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கலை
கலை     கலைமகள்     கலைத்தலை     கலையொரு     கலைதலைச்     கலைகாமின்     கலைமான்கை     கலையானே!     கலையான்;     கலைமான்மறியும்     கலை,     கலையினான்,     கலையின்     கலைஞானம்     கலையானை,     கலைக்     கலைக்கீ     கலைகள்தம்    
1.036   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலை ஆர் மதியோடு உர நீரும்
நிலை ஆர் சடையார் இடம் ஆகும்
மலை ஆரமும் மா மணி சந்தோடு
அலை ஆர் புனல் சேரும் ஐயாறே.

1.036   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலை ஆர் கலிக்காழியர் மன்னன்-
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன்-
அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றைச்
சொலும் மாலை வல்லார் துயர் வீடே.

1.044   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலை புனை மானுரி-தோல் உடை ஆடை; கனல் சுடரால் இவர் கண்கள்;
தலை அணி சென்னியர்; தார் அணி மார்பர்; தம் அடிகள் இவர் என்ன,
அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
இலை புனை வேலரோ, ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?

1.109   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலை அவன், மறை அவன், காற்றொடு தீ
மலை அவன், விண்ணொடு மண்ணும் அவன்,
கொலைய வன் கொடி மதில் கூட்டு அழித்த
சிலையவன், வள நகர் சிரபுரமே.

1.121   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலை உடை விரி துகில், கமழ்குழல், அகில்புகை,
மலை உடை மடமகள் தனை இடம் உடையோன்;
விலை உடை அணிகலன் இலன் என மழுவினொடு
இலை உடை படையவன்; இடம் இடைமருதே.

1.122   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலை மலி விரலினர், கடியது ஒர் மழுவொடும்
நிலையினர், சலமகள் உலவிய சடையினர்,
மலைமகள் முலை இணை மருவிய வடிவினர்,
இலை மலி படையவர், இடம் இடைமருதே.

1.124   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலைமகள் தலைமகன், இவன் என வருபவர்
அலை மலிதரு புனல், அரவொடு, நகுதலை,
இலை மலி இதழியும், இசைதரு சடையினர்
நிலை மலி மிழலையை நினைய வல்லவரே.

1.125   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலை மலி அகல் அல்குல் அரிவைதன் உருவினன்,
முலை மலிதரு திரு உருவம் அது உடையவன்,
சிலை மலி மதில் பொதி சிவபுரநகர் தொழ,
இலை, நலி வினை; இருமையும் இடர் கெடுமே.

2.015   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலையானே! கலை மலி செம்பொன் கயிலாய
மலையானே! மலைபவர் மும்மதில் மாய்வித்த
சிலையானே! சீர் திகழும் திருக்காறாயில்
நிலையானே! என்பவர்மேல் வினை நில்லாவே.

2.022   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலையான்; மறையான்; கனல் ஏந்து கையான்;
மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான்;
கொலை ஆர் சிலையான் குடவாயில்தனில்
நிலை ஆர் பெருங்கோயில் நிலாயவனே.

2.024   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலைமான்மறியும் கனலும் மழுவும்
நிலைஆகிய கையினனே நிகழும்
நலம் ஆகிய நாகேச்சுரநகருள்
தலைவா! என, வல்வினைதான் அறுமே.

2.058   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலை வாழும் அம் கையீர்! கொங்கை ஆரும் கருங்கூந்தல்
அலை வாழும் செஞ்சடையில், அரவும் பிறையும்
அமர்வித்தீர்!
குலைவாழை கமுகம் பொன்பவளம் பழுக்கும் குடவாயில்,
நிலை வாழும் கோயிலே கோயில் ஆக நின்றீரே.

3.009   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலை, இலங்கும் மழு, கட்டங்கம், கண்டிகை, குண்டலம்,
விலை இலங்கும் மணி மாடத்தர் வீழிமிழலையார்
தலை இலங்கும் பிறை; தாழ்வடம், சூலம், தமருகம்,
அலை இலங்கும் புனல், ஏற்றவர்க்கும்(ம்) அடியார்க்குமே.

3.048   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலையினான், மறையான், கதி ஆகிய
மலையினான், மருவார் புரம் மூன்று எய்த
சிலையினான், சேர் திரு மழபாடியைத்
தலையினால் வணங்க, தவம் ஆகுமே.

3.072   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலையின் ஒலி, மங்கையர்கள் பாடல் ஒலி, ஆடல், கவின் எய்தி, அழகு ஆர்
மலையின் நிகர் மாடம், உயர் நீள்கொடிகள் வீசும் மலி மாகறல் உளான்-
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி, எரிபுன் சடையினுள்
அலை கொள் புனல் ஏந்து பெருமான்-அடியை ஏத்த, வினை அகலும், மிகவே.

4.082   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கலை ஆர் கடல் சூழ் இலங்கையர் கோன் தன் முடி சிதறத்
தொலையா மலர் அடி ஊன்றலும், உள்ளம் விதிர் விதிர்த்துத்
தலை ஆய்க் கிடந்து, உயர்ந்தான் தன் கழுமலம் காண்பதற்கே-
அலையாப் பரிசு இவை நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.

5.003   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கலை ஒப்பானை, கற்றார்க்கு ஓர் அமுதினை,
மலை ஒப்பானை, மணி முடி ஊன்றிய
அலை ஒப்பானை, அரத்துறை மேவிய
நிலை ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

6.011   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கலைஞானம் கல்லாமே கற்பித்தானை, கடு நரகம்
சாராமே காப்பான் தன்னை,
பல ஆய வேடங்கள் தானே ஆகி,
பணிவார்கட்கு அங்கு அங்கே பற்று ஆனானை;
சிலையால் புரம் எரித்த தீஆடி(ய்)யை, திருப்
புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நிலை ஆர் மணி மாட நீடூரானை,-நீதனேன்
என்னே நான் நினையா ஆறே!.

6.063   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கலையானை, பரசு தர பாணியானை, கன வயிரத்திரளானை, மணி மாணிக்க-
மலையானை, என் தலையின் உச்சியானை, வார்தரு புன்சடையானை, மயானம் மன்னும்
நிலையானை, வரி அரவு நாணாக் கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேருச்-
சிலையானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

6.073   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கலைக் கன்று தங்கு கரத்தான் கண்டாய்; கலை பயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்;
அலைக் கங்கை செஞ்சடை மேல் ஏற்றான கண்டாய்; அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய்;
மலைப் பண்டம் கொண்டு வரும் நீர்ப் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய்
குலைத் தெங்கு அம்சோலை சூழ் கொட்டையூரில் கோடிச்சுரத்து உறையும் கோமான் தானே.

6.087   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண்; கலை பயிலும் கருத்தன் காண்; திருத்தம் ஆகி,
மலை ஆகி, மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி, விண் ஆகி, நின்றான் தான் காண்;
தலை ஆய மலை எடுத்த தகவு இலோனைத் தகர்ந்து விழ, ஒரு விரலால் சாதித்து, ஆண்ட
சிலை ஆரும் மடமகள் ஓர் கூறன் தான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.

7.030   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கலை மலிந்த தென்புலவர் கற்றோர் தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர்
குலை மலிந்த கோள்-தெங்கு மட்டு ஒழுகும் பூஞ்சோலை கொகுடிக் கோயில்
இலை மலிந்த மழுவானை, மனத்தினால் அன்பு செய்து, இன்பம் எய்தி,
மலை மலிந்த தோள் ஊரன்-வனப் பகை அப்பன்-உரைத்த வண் தமிழ்களே!.

8.204   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
கலைக்கீ ழகலல்குற் பாரம
   தாரங்கண் ணார்ந்திலங்கு
முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றன்முற்
   றாதன் றிலங்கையர்கோன்
மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம்
   பலவர்வண் பூங்கயிலைச்
சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர்
   எதுநுங்கள் சிற்றிடையே.

9.009   9 st/nd Thirumurai   Song # 1   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
கலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக்
    கற்பினிற் பெற்றெடுத்(து) எனக்கே
முலைகள்தந்(து) அருளும் தாயினும் நல்ல
    முக்கணான் உறைவிடம் போலும்
மலைகுடைந் தனைய நெடுநிலை மாட
    மருங்கெலாம் மறையவர் முறையோத்(து)
அலைகடல் முழங்கும் அந்தணீர்க் களந்தை
    அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
10.406   10 st/nd Thirumurai   Song # 38   திருமூலர்   திருமந்திரம்  
கலைத்தலை நெற்றிஓர் கண்ணுடைக் கண்ணுள்
முலைத்தலை மங்கை முயங்கி யிருக்கும்
சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி
அலைத்தபூங் கொம்பினள் ஆங்கிருந் தாளே.

10.928   10 st/nd Thirumurai   Song # 30   திருமூலர்   திருமந்திரம்  
கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற
தலைவனை நாடுமின் தத்துவ நாதன்
விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப
உரையில்லை உள்ளுறும் உள்அவன் தானே.

11.006   11 st/nd Thirumurai   Song # 88   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
கலைதலைச் சூலம் மழுக்கனல்
கண்டைகட் டங்கம்கொடி
சிலையிவை ஏந்திய எண்டோட்
சிவற்கு மனஞ்சொல்செய்கை
நிலைபிழை யாதுகுற் றேவல்செய்
தார்நின்ற மேருவென்னும்
மலைபிழை யாரென்ப ராலறிந்
தோர் இந்த மாநிலத்தே.

11.022   11 st/nd Thirumurai   Song # 26   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
கலைகாமின் ஏர்காமின் கைவளைகள் காமின்
கலைசேர் நுதலிர்நாண் காமின் கலையாய
பால்மதியன் பண்டரங்கன் பாரோம்பு நான்மறையன்
பால்மதியன் போந்தான் பலிக்கு.

11.023   11 st/nd Thirumurai   Song # 86   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
கலைமான்கை ஏனப்பூண் காண்கயிலை மானின்
கலைமான் கறைகாண் கவாலி கலைமான
ஆடுவதும் பாடுவதும் காலனைப்பொன் அம்பலத்துள்
ஆடுவதும் ஆடான் அரன்.


This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%95%E0%AE%B2%E0%AF%88