சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கறை
கறை     கறைவி     கறையணி     கறையும்     கறைப்     கறையராய்க்     கறைக்    
1.016   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கறை ஆர் மிடறு உடையான், கமழ் கொன்றைச் சடை முடி மேல்
பொறை ஆர் தரு கங்கைப்புனல் உடையான், புளமங்கைச்
சிறை ஆர்தரு களி வண்டு அறை பொழில் சூழ் திரு ஆலந்
துறையான் அவன், நறை ஆர் கழல் தொழுமின், துதி செய்தே!

1.022   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கறை மலி திரிசிகை படை, அடல் கனல் மழு, எழுதர வெறி மறி,
முறை முறை ஒலி தமருகம், முடைதலை, முகிழ் மலி கணி, வட முகம்,
உறைதரு கரன்-உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர்
மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே.

1.061   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கறை இலங்கு மலர்க்குவளை கண் காட்டக் கடிபொழிலின்
நறை இலங்கு வயல் காழித் தமிழ் ஞானசம்பந்தன்,
சிறை இலங்கு புனல் படப்பைச் செங்காட்டங்குடி சேர்த்தும்
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே.

2.046   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கறை ஆர் மணிமிடற்றான், காபாலி, கட்டங்கன்,
பிறை ஆர் வளர்சடையான், பெண்பாகன் நண்பு ஆய
நறை ஆர் பொழில் புடை சூழ் நாலூர்மயானத்து எம்
இறையான் என்று ஏத்துவார்க்கு எய்தும் ஆம், இன்பமே.

2.065   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கறை அணி வேல் இலர்போலும்; கபாலம் தரித்திலர்
போலும்;
மறையும் நவின்றிலர் போலும்; மாசுணம் ஆர்த்திலர் போலும்;
பறையும் கரத்து இலர்போலும்; பாசம் பிடித்திலர் போலும்;
பிறையும் சடைக்கு இலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.

2.106   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கறை கொள் கண்டத்தர்; காய்கதிர் நிறத்தினர்; அறத்திறம் முனிவர்க்கு அன்று
இறைவர் ஆல் இடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள் பெருமானார்;
மறைகள் ஓதுவர்; வருபுனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து, அருங்கானத்து,
அறை கழல் சிலம்பு ஆர்க்க, நின்று ஆடிய அற்புதம் அறியோமே!

3.028   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கறை அணி மிடறு உடைக் கண்ணுதல், நண்ணிய
பிறை அணி செஞ்சடைப் பிஞ்ஞகன், பேணும் ஊர்
துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே,
மறை அணி நாவினான் மா மழபாடியே.

3.052   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கறை இலங்கு கண்டனே! கருத்து இலாக் கருங்கடல்-
துறை இலங்கை மன்னனைத் தோள் அடர ஊன்றினாய்!
மறை இலங்கு பாடலாய்! மதுரை ஆலவாயிலாய்!
நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே.

3.060   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கறை அணி மா மிடற்றான், கரிகாடு அரங்கா உடையான்,
பிறை அணி கொன்றையினான், ஒருபாகமும் பெண் அமர்ந்தான்,
மறையவன் தன் தலையில் பலி கொள்பவன்-வக்கரையில்
உறைபவன், எங்கள் பிரான்; ஒலி ஆர் கழல் உள்குதுமே.

4.024   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கறையும் கொப்பளித்த கண்டர்; காமவேள் உருவம் மங்க
இறையும் கொப்பளித்த கண்ணார்; ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
மறையும் கொப்பளித்த நாவர்-வண்டு பண் பாடும் கொன்றை
அறையும் கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே.

4.028   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கறைப் பெருங் கண்டத்தானே! காய் கதிர் நமனை அஞ்சி
நிறைப் பெருங்கடலைக் கண்டேன்! நீள்வரை உச்சி கண்டேன்!
பிறைப் பெருஞ் சென்னியானே! பிஞ்ஞகா! இவை அனைத்தும்
அறுப்பது ஓர் உபாயம் காணேன் அதிகைவீரட்டனீரே!

4.041   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கறையராய்க் கண்டம், நெற்றிக் கண்ணராய், பெண் ஓர் பாகம்
இறையராய், இனியர் ஆகி, தனியராய், பனி வெண் திங்கள்-
பிறையராய், செய்த எல்லாம் பீடராய், கேடு இல் சோற்றுத்-
துறையராய், புகுந்து என் உள்ளச் சோர்வு கண்டு அருளினாரே.

4.079   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கறை அணி கண்டன் தன்னைக் காமரம் கற்றும் இல்லேன்;
பிறை நுதல் பேதை மாதர் பெய் வளையார்க்கும் அல்லேன்;
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும்
இறையேயும் ஏத்த மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!

5.048   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கறை கொள் கண்டத்து எண்தோள் இறை முக்கணன்,
மறை கொள் நாவினன், வானவர்க்கு ஆதியான்,
உறையும் பூம்பொழில் சூழ் கச்சி ஏகம்பம்
முறைமையால் சென்று முந்தித் தொழுதுமே.

7.039   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கறைக் கண்டன் கழல் அடியே காப்புக் கொண்டிருந்த
கணம் புல்ல நம்பிக்கும், காரிக்கும், அடியேன்;
நிறைக் கொண்ட சிந்தையான், நெல்வேலி வென்ற
நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும்  அடியேன்;
துறைக் கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித்
தொல் மயிலை வாயிலான்   அடியார்க்கும் அடியேன்;
அறைக் கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில்அம்மானுக்கு ஆளே .

7.080   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கறை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நன் நகருள்
சிறை ஆர் பொழில் வண்டு யாழ் செயும் கேதீச்சுரத்தானை
மறை ஆர் புகழ் ஊரன்(ந்)-அடித் தொண்டன்(ந்)-உரை செய்த
குறையாத் தமிழ்பத்தும் சொலக் கூடா, கொடுவினையே.

12.190   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
கறைவி ளங்கிய கண்டர்பால் காதல்செய்ம் முறைமை
நிறைபு ரிந்திட நேரிழை அறம்புரிந் ததனால்
பிறையு ரிஞ்செயிற் பதிபயில் பெருந்தொண்டை நாடு
முறைமை யாமென உலகினில் மிகுமொழி உடைத்தால்.

12.280   12 st/nd Thirumurai   Song # 120   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கறையணி கண்டர் கோயில்
காதலால் பணிந்து பாடி
மறையவர் போற்ற வந்து
திருவலம் புரத்து மன்னும்
இறைவரைத் தொழுது பாடும்
கொடியுடை ஏத்திப் போந்து
நிறைபுனல் திருச்சாய்க் காடு
தொழுதற்கு நினைந்து செல்வார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000