| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கருத்து
கருத்துறு
கருத்துறை
கருத்துறுங்
கருத்துடைய
கருத்துக்குச்
கருத்து
கருத்துத்
கருத்துடைக்
2.074
2 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம், மெய்த்
தோணிபுரம், கனக மாட
உருத் திகழ் வெங்குரு, புகலி, ஓங்கு தராய், உலகு ஆரும்
கொச்சை, காழி,
திருத் திகழும் சிரபுரம், தேவேந்திரன் ஊர், செங்கமலத்து
அயன் ஊர், தெய்வத்
தருத் திகழும் பொழில் புறவம், சண்பை சடைமுடி
அண்ணல் தங்கும் ஊரே.
6.025
6 st/nd Thirumurai
Song # 11
திருநாவுக்கரசர்
தேவாரம்
கருத்துத் திக்கத நாகம் கையில் ஏந்தி, கருவரை போல் களியானை கதறக் கையால்
உரித்து எடுத்துச் சிவந்து, அதன் தோல் பொருந்த மூடி, உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி,
திருத் துருத்தி திருப் பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட, செல்வர்; இந்நாள்
அரிப் பெருத்த வெள் ஏற்றை அடர ஏறி, அப்பனார், இப் பருவம் ஆரூராரே.
8.103
8 st/nd Thirumurai
Song # 4
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கருத்துடைக் கடவுள்; திருத்தகும்
அறுவகைச் சமயத்து அறுவகையோர்க்கும்
வீடு பேறு ஆய், நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையும் கிழவோன்; நாள்தொறும்
அருக்கனில் சோதி அமைத்தோன்; திருத்தகு
10.121
10 st/nd Thirumurai
Song # 8
திருமூலர்
திருமந்திரம்
கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவஎன் றேத்தியும்
அருத்தியுள் ஈசனை ஆரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.
10.202
10 st/nd Thirumurai
Song # 1
திருமூலர்
திருமந்திரம்
கருத்துறை அந்தகன் றன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.
10.408
10 st/nd Thirumurai
Song # 51
திருமூலர்
திருமந்திரம்
கருத்துறுங் காலம் கருது மனமும்
திருத்தி யிருந்தவை சேரும் நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மேன்மேல்
இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆமே.
11.008
11 st/nd Thirumurai
Song # 35
சேரமான் பெருமாள் நாயனார்
திருக்கயிலாய ஞான உலா
கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத்
திருக்கடைகள் ஏழ்கடந்த போதில் செருக்குடைய
11.009
11 st/nd Thirumurai
Song # 15
நக்கீரதேவ நாயனார்
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
கருத்துக்குச் சேயையாய்க் காண்தக்கோர் காண
இருத்தி திருக்கயிலை என்றால் ஒருத்தர்
அறிவான் உறுவார்க் கறியுமா றுண்டோ
நெறிவார் சடையாய் நிலை
11.023
11 st/nd Thirumurai
Song # 21
பரணதேவ நாயனார்
சிவபெருமான் திருவந்தாதி
கருத்துடைய ஆதி கறைமிடற்றெம் ஈசன்
கருத்துடைய கங்காள வேடன் கருத்துடைய
ஆன்ஏற்றான் நீற்றான் அனலாடி ஆமாத்தூர்
ஆனேற்றான் ஏற்றான் எரி.
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000