சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கண்ட
கண்டேன்     கண்டிருந்     கண்டுகண்     கண்டனுங்     கண்டெழுந்     கண்ட     கண்டெண்     கண்டிடு     கண்டிடும்     கண்டுகொள்     கண்டஇச்     கண்டங்கள்     கண்டுகொண்     கண்டகன     கண்டறி     கண்டார்க்     கண்டெந்தை     கண்டங்     கண்டால்     கண்டுகேட்     கண்டம்     கண்டிறந்து     கண்டதோர்     கண்டனர்     கண்டுசென்     கண்டவர்     கண்டபொழு     கண்டத்திடை     கண்டபின்     கண்டார்கள்     கண்டு     கண்டியூர்     கண்டெதிர்     கண்டஅப்     கண்டவர்கள்     கண்டருளும்     கண்டசடைச்     கண்டார்     கண்டகங்காள்!     கண்டவா     கண்டராய்,     கண்டியில்     கண்டம்தான்     கண்டி     கண்டமும்     கண்டது    
2.062   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கண்டார் நாணும் படியார், கலிங்கம் முடை பட்டை
கொண்டார், சொல்லைக் குறுகார், உயர்ந்த
கொள்கையார்;
பெண்தான் பாகம் உடையார், பெரிய வரை வில்லா
விண்டார் புரம் மூன்று எரித்தார், மீயச்சூராரே.

4.012   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கண்டகங்காள்! முண்டகங்காள்! கைதைகாள்! நெய்தல்காள
பண்டரங்க வேடத்தான், பாட்டு ஓவாப் பழனத்தான்,
வண்டு உலா(அ)ம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர்வண்ணம்
கொண்ட(ந்)நாள் தான் அறிவான், குறிக் கொள்ளா தொழிவானோ?

4.023   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்தன் பாதம்
கொண்டிருந்து ஆடிப் பாடிக் கூடுவன், குறிப்பினாலே;
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
எண் திசையோரும் ஏத்த, இறைவ! நீ ஆடும் ஆறே!

4.036   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கண்டராய், முண்டர் ஆகி, கையில் ஓர் கபாலம் ஏந்தி,
தொண்டர்கள் பாடி ஆடித் தொழு கழல் பரமனார்தாம்
விண்டவர் புரங்கள் எய்த வேதியர்; வேத நாவர்
பண்டை என் வினைகள் தீர்ப்பார்-பழனத்து எம் பரமனாரே

4.095   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கண்டியில் பட்ட கழுத்து உடையீர்! கரிகாட்டில் இட்ட
பண்டியில் பட்ட பரிகலத்தீர்! பதிவீழி கொண்டீர்
உண்டியில், பட்டினி, நோயில், உறக்கத்தில்,-உம்மை, ஐவர்
கொண்டியில் பட்டு மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

5.005   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கண்டம்தான் கறுத்தான், காலன் ஆர் உயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்,
அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ
விண்டு போகும், நம் மேலைவினைகளே.

5.070   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பால்
மண்டி ஏச்சுணும் மாதரைச் சேராதே,
சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அக்
கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே!

5.092   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்,
கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்-
கொண்ட தொண்டரைத் துன்னிலும் சூழலே!

5.095   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கண்டி பூண்டு கபாலம் கைக் கொண்டிலர்;
விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர்;
அண்டமூர்த்தி, அழல்நிற-வண்ணனைக்
கெண்டிக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

7.056   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கண்டமும் கறுத்திட்ட பிரானை, காணப் பேணுமவர்க்கு எளியானை,
தொண்டரைப் பெரிதும்(ம்) உகப்பானை, துன்பமும் துறந்து இன்பு இனியானை,
பண்டை வல்வினைகள் கெடுப்பானை, பாகம் மாமதி ஆயவன் தன்னை,
கெண்டை வாளை கிளர் புனல் நீடூர்க் கேண்மையால் பணியா விடல் ஆமே?

8.106   8 st/nd Thirumurai   Song # 33   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கண்டது செய்து, கருணை மட்டுப் பருகிக் களித்து,
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய்? நின் விரை மலர்த் தாள்
பண்டு தந்தால் போல் பணித்து, பணிசெயக் கூவித்து, என்னைக்
கொண்டு, என் எந்தாய், களையாய் களை ஆய குதுகுதுப்பே.

10.122   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்றன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே. 

10.216   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
கண்டிருந் தார்உயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தார்உயிர் கொள்ளுங் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.

10.306   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.

10.319   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வான்நீர் உருட்டிடத்
தண்டொரு காலுந் தளராது அங்கமே.

10.402   10 st/nd Thirumurai   Song # 79   திருமூலர்   திருமந்திரம்  
கண்டெழுந் தேன்கம லம்மல ருள்ளிடைக்
கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப்
பண்பழி யாத பதிவழி யேசென்று
நண்பழி யாமே நமஎன லாமே.

10.406   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசத்தி
அண்டமொ டெண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுட் பூசனை யாளே.

10.408   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
கண்டெண் டிசையும் கலந்து வருங்கன்னி
பண்டெண் டிசையும் பராசத்தி யாய்நிற்கும்
விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டெண் டிசையும் தொழநின்ற கன்னியே.

10.409   10 st/nd Thirumurai   Song # 19   திருமூலர்   திருமந்திரம்  
கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம்
கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக்
கண்டிடு வன்னிக் கொழுந்தள வொத்தபின்
கண்டிடும் அப்புறங் காரொளி யானதே.

10.413   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
கண்டிடும் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கு மளவே.

10.413   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
கண்டுகொள் ளும்தனி நாயகி தன்னையும்
மொண்டுகொள் ளும்முக வச்சியம தாயிடும்
பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்
நின்றுகொ ளும்நிலை பேறுடை யாளையே.

10.413   10 st/nd Thirumurai   Song # 18   திருமூலர்   திருமந்திரம்  
கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில்
கொண்டஇம் மந்திரம் கூத்தன் குறியதாம்
மன்றினுள் வித்தையும் மானுடர் கையதா
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே.

10.413   10 st/nd Thirumurai   Song # 73   திருமூலர்   திருமந்திரம்  
கண்டஇச் சத்தி இருதய பங்கயம்
கொண்டஇத் தத்துவ நாயகி யானவள்
பண்டை அவாவுப் பகையை யறுத்திட
இன்றென் மனத்தில் இனிதிருந்தாளே.

10.502   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டமா
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.

10.516   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
கண்டுகொண் டோம்இரண் டுந்தொடர்ந்தாங்கொளி
பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண் டாடும் மலர்வார் சடைஅண்ணல்
நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே.

10.803   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
கண்டகன வைந்தும் கலந்தன தாம்ஐந்தும்
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டைய னாகிப் பரந்த வச்சாக்கிரத்
தண்டமுந் தானாய் அமர்ந்துநின் றானே.

10.925   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
கண்டறி வார் இல்லைக் கயத்தின் நந்தியை
எண்டிசை யோரும் `இறைவன்`என் றேத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தம்
தொண்டர் முகந்த துறைஅறி யோமே.

10.925   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
கண்டார்க் கழகிது காஞ்சிரத் தின்பழம்
தின்றார்க் கறியலாம் அப்பழத் தின்சுவை
பெண்டான் நிரம்பி மடவிய ளானால்
கொண்டான் அறிவன் குணம்பல தானே.

11.004   11 st/nd Thirumurai   Song # 72   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர்
விண்ணாறுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்குங்
கண்ணாளா ஈதென் கருத்து.

11.006   11 st/nd Thirumurai   Song # 29   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
கண்டங் கரியன் கரிஈர்
உரியன் விரிதருசீர்
அண்டங் கடந்த பெருமான்
சிறுமான் தரித்தபிரான்
பண்டன் பரம சிவனோர்
பிரமன் சிரமரிந்த
புண்தங் கயிலன் பயிலார
மார்பனெம் புண்ணியனே.

11.008   11 st/nd Thirumurai   Song # 171   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து
வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் ஒண்டாங்கு

11.008   11 st/nd Thirumurai   Song # 173   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே வுளவென்று பண்டையோர்

11.010   11 st/nd Thirumurai   Song # 19   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
கண்ட கனிநுகர்ந்த மந்தி கருஞ்சுனைநீர்
உண்டு குளிர்ந்திலவென் றூடிப்போய்க் கொண்டல்
இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே நான்கு
மறைக்கீறு கண்டான் மலை.

11.021   11 st/nd Thirumurai   Song # 35   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக் கருங்கடல்நஞ்
சுண்டல் புரிந்துகந்த உத்தமற்குத் தொண்டடைந்தார்
கூசுவரே கூற்றைக் குறுகு வரேதீக்கொடுமை
பேசுவரே மற்றொருவர் பேச்சு.

11.022   11 st/nd Thirumurai   Song # 8   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
கண்டங் கரியன் உமைபாலுந் தன்பாலும்
கண்டங் கரியன் கரிகாடன் கண்டங்கள்
பாடியாட் டாடும் பரஞ்சோதிக் கென்னுள்ளம்
பாடியாக் கொண்ட பதி.

11.023   11 st/nd Thirumurai   Song # 20   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
கண்டிறந்து காயெரியின் வீழ்ந்து கடிதோடிக்
கண்டிறந்து காமன் பொடியாகக் கண்டிறந்து
கானின் உகந்தாடும் கருத்தர்க்குக் காட்டினான்
கானின்உகந் தாடுங் கருத்து.

12.000   12 st/nd Thirumurai   Song # 177   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
கண்டதோர் வடிவா லுள்ளங்
காதல்செய் துருகா நிற்குங்
கொண்டதோர் பித்த வார்த்தை 
கோபமு முடனே யாக்கும்
உண்டொராள் ஓலை யென்னும்
அதனுண்மை யறிவே னென்று
தொண்டனா ரோலை காட்டு
கென்றனர் துணைவ னாரை.
12.020   12 st/nd Thirumurai   Song # 41   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
கண்டனர் கைக ளாரத்
தொழுதனர் கலந்த காதல்
அண்டரும் ஏத்தி னார்கள்
அன்பர்தம் பெருமை நோக்கி
விண்டரும் பொலிவு காட்டி
விடையின்மேல் வருவார் தம்மைத்
தொண்டரும் மனைவி யாருந்
தொழுதுடன் போற்றி நின்றார்.
12.050   12 st/nd Thirumurai   Song # 11   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
கண்டுசென் றணையும் போது
கதுமென எழுந்து தேவி
வண்டலர் மாலை யானை
எழுப்பிட உணர்ந்து மன்னன்
அண்டர்நா யகனார் தொண்ட
ராம்எனக் குவித்த செங்கை
கொண்டு எழுந்து எதிரே சென்று 
கொள்கையின் வணங்கி நின்று.
12.070   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
கண்ட வர்க்குறு காதலின் மனங்கரைந் துருகத்
தொண்டர் அன்பெனுந் தூநெறி வெளிப்படுப் பாராய்த்
தண்டின் மீதிரு கோவண நீற்றுப்பை தருப்பை
கொண்டு வந்தமர் நீதியார் திருமடங் குறுக.
12.080   12 st/nd Thirumurai   Song # 23   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
கண்டவர் இதுமுன்பு அண்ணல்
உரித்தஅக் களிறே போலும்
அண்டரும் மண்ணு ளோரும்
தடுக்கினு மடர்த்துச் சிந்தத்
துண்டித்துக் கொல்வே னென்று
சுடர்மழு வலத்தில் வீசிக்
கொண்டெழுந் தார்த்துச் சென்று
காலினாற் குலுங்கப் பாய்ந்தார்.
12.090   12 st/nd Thirumurai   Song # 38   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
கண்டபொழு தேகெட்டேன்
முன்பிவர்மேற் காணாத
வெண்திருநீற் றின்பொலிவு
மேற்கண்டேன் வேறினியென்
அண்டர்பிரான் சீரடியார்
ஆயினார் என்றுமனங்
கொண்டிவர்தங் கொள்கைக்
குறிவழிநிற் பேனென்று.
12.100   12 st/nd Thirumurai   Song # 59   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
கண்டத்திடை வெண்கவ டிக்கதிர் மாலை சேரக்
கொண்டக்கொடு பன்மணி கோத்திடை ஏனக் கோடு
துண் டப்பிறை போல்வன தூங்கிட வேங்கை வன்தோல்
தண்டைச்செயல் பொங்கிய சன்னவீ ரந்த யங்க.

12.100   12 st/nd Thirumurai   Song # 176   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
கண்டபின் கெட்டேன் எங்கள்
காளத்தி யார்கண் ணொன்று
புண்தரு குருதி நிற்க
மற்றைக்கண் குருதி பொங்கி
மண்டும்மற் றிதனுக் கஞ்சேன்
மருந்துகைக் கண்டே னின்னும்
உண்டொரு கண்அக் கண்ணை
இடந்தப்பி யொழிப்பே னென்று.
12.190   12 st/nd Thirumurai   Song # 58   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
கண்ட போதிலப் பெருந்தவப் பயனாம்
கம்பம் மேவிய தம்பெரு மானை
வண்டு லாங்குழற் கற்றைமுன் தாழ
வணங்கி வந்தெழும் ஆசைமுன் பொங்கக்
கொண்ட காதலின் விருப்பள வின்றிக்
குறித்த பூசனை கொள்கைமேற் கொண்டு
தொண்டை யங்கனி வாயுமை நங்கை
தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள்.
12.200   12 st/nd Thirumurai   Song # 49   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
கண்ட போதே விரைந்திழிந்து
கடிது சென்று கைத்தண்டு
கொண்டு மகனார் திருமுதுகில்
புடைத்துக் கொடிதாம் மொழிகூறத்
தொண்டு புரியுஞ் சிறியபெருந்
தோன்ற லார்தம் பெருமான்மேல்
மண்டு காதல் அருச்சனையில்
வைத்தார் மற்றொன் றறிந்திலரால்.
12.210   12 st/nd Thirumurai   Song # 141   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கண்டார்கள் கைதலை மேற்குவித்
திந்தக் கருணைகண்டால்
மிண்டாய செய்கை அமண்கையர்
தீங்கு விளைக்கச்செற்றம்
உண்டா யினவண்ணம் எவ்வண்ணம்
என்றுரைப் பார்கள்பின்னுந்
தொண்டாண்டு கொண்ட பிரானைத்
தொழுது துதித்தனரே.
12.210   12 st/nd Thirumurai   Song # 222   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கண்டு தொழுது விழுந்து
கரசர ணாதிஅங்கங்
கொண்ட புளகங்க ளாக
எழுந்தன்பு கூரக்கண்கள்
தண்டுளி மாரி பொழியத்
திருமூலட் டானர்தம்மைப்
புண்டரி கக்கழல் போற்றித்
திருத்தாண் டகம்புனைந்து.
12.210   12 st/nd Thirumurai   Song # 298   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கண்ட வியப்பு மந்திரிகட்
கியம்பிக் கூடக் கடிதெய்தி
அண்டர் பெருமான் அருள்செய்த
அடையா ளத்தின் வழிகண்டு
குண்டர் செய்த வஞ்சனையைக்
குறித்து வேந்தன் குலவுபெருந்
தொண்டர் தம்மை அடிவணங்கித்
தொக்க அமணர் தூர்அறுத்தான்.
12.210   12 st/nd Thirumurai   Song # 380   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கண்ட ஆனந்தக் கடலினைக்
கண்களால் முகந்து
கொண்டு கைகுவித் தெதிர்விழுந்
தெழுந்துமெய் குலைய
அண்டர் முன்புநின் றாடினார்
பாடினார் அழுதார்
தொண்ட னார்க்கங்கு நிகழ்ந்தன
யார்சொல வல்லார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 385   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கண்டு தொழுது வணங்கிக்
கண்ணுத லார்தமைப் போற்றிக்
கொண்ட திருத்தாண் டகங்கள்
குறுந்தொகை நேரிசை அன்பின்
மண்டு விருத்தங்கள் பாடி
வணங்கித் திருத்தொண்டு செய்தே
அண்டர் பிரான்திரு வையா
றமர்ந்தனர் நாவுக் கரசர்.

12.240   12 st/nd Thirumurai   Song # 54   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கண்டவர் வியப்புற் றஞ்சிக்
கையகன் றோடு வார்கள்
கொண்டதோர் வேடத் தன்மை
உள்ளவா கூறக் கேட்டே
அண்டர்நா யகனார் என்னை
அறிவரேல் அறியா வாய்மை
எண்டிசை மாக்க ளுக்கியான்
எவ்வுரு வாயென் என்பார்.
12.260   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கண்ட அப்பெருங் கனவினை
நனவெனக் கருதிக்
கொண்ட அச்சமோ டஞ்சலி
குவித்துடன் விழித்துத்
தொண்ட னார்தொழு தாடினார்
பாடினார் துதித்தார்
அண்டர் நாயகர் கருணையைப்
போற்றிநின் றழுதார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 202   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்ட பின்னவர் கைதலை மேற்குவித்
தெண்டி சைக்கும் விளக்கிவை யாம்எனத்
தொண்ட ரோடும் மறையவர் சூழ்ந்தெழுந்
தண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 259   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்டபொழு தேகைகள் தலைமேற் கொண்டு
கண்களிப்ப மனங்களிப்பக் காதல் பொங்கித்
தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து
சொல்லிறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை
எண்திசையும் நிறைவித்தார் ஆடை வீசி
இருவிசும்பின் வெளிதூர்த்தார் ஏறு சீர்த்தி
வண்டமிழ்நா யகரும்இழிந் தெதிரே சென்று
வணங்கியவ ருடன்கூடி மகிழ்ந்து புக்கார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 271   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்ட கவுணியக் கன்றும்
கருத்திற் பரவுமெய்க் காதல்
தொண்டர் திருவேடம் நேரே
தோன்றிய தென்று தொழுதே
அண்டரும் போற்ற அணைந்தங்
கரசும் எதிர்வந் திறைஞ்ச
மண்டிய ஆர்வம் பெருக
மதுர மொழியருள் செய்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 352   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்டியூர் வீரட்டர் கோயிவெய்திக்
கலந்தடி யாருடன் காதல்பொங்கக்
கொண்ட விருப்புடன் தாழ்ந்திறைஞ்சிக்
குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால்
தொண்டர் குழாத்தினை நோக்கிநின்று
தொடுத்த இசைத்தமிழ் மாலைதன்னில்
அண்டர் பிரான்தன் அருளின்வண்ணம்
அடியார் பெருமையிற் கேட்டருளி.
12.280   12 st/nd Thirumurai   Song # 487   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்டெதிர் போற்றி வினவிப் பாடிக்
கணபதி ஈச்சரங் காத லித்த
அண்டர் பிரானை வணங்கி வைகும்
அப்பதி யிற்சில நாள்கள் போற்றித்
தொண்ட ருடனருள் பெற்று மற்றத்
தொல்லைத் திருப்பதி யெல்லை நீங்கிப்
புண்டரி கத்தடஞ் சூழ் பழனப்
பூம்புக லூர்தொழப் போது கின்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 594   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்டஅப் போதே கைகள்
குவித்துடன் கடிது செல்வார்
மண்டிய காத லோடு
மருவுவார் போன்றுங் காணார்
எண்டிசை நோக்கு வாருக்
கெய்துவார் போல எய்தா
அண்டர்தம் பிரானார் தம்பின்
போயினார் ஆர்வத் தோடும்.
12.280   12 st/nd Thirumurai   Song # 729   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்டபொழு தமண்கொடியோர்
செய்தகடுந் தொழில்நினைந்தே
மண்டியகண் ணருவிநீர்
பாயமலர்க் கைகுவித்துப்
புண்டரிகச் சேவடிக்கீழ்ப்
பொருந்தநில முறவிழுந்தார்
கொண்டகுறிப் போடுநெடி
துயிர்த்தழிந்த கொள்கையராய்.
12.280   12 st/nd Thirumurai   Song # 752   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்டஅப் பொழுதே வேந்தன்
கையெடுத் தெய்த நோக்கித்
தண்துணர் முடியின் பாங்கர்த்
தமனியப் பீடங் காட்ட
வண்டமிழ் விரகர் மேவி
அதன்மிசை இருந்தார் மாயை
கொண்டவல் லமணர் எல்லாம்
குறிப்பினுள் அச்சங் கொண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1127   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்டபொழு தேகலந்த
காதலால் கைதலைமேல்
கொண்டுதலம் உறவிழுந்து
குலவுபெரு மகிழ்ச்சியுடன்
மண்டியபே ரன்புருகி
மயிர்முகிழ்ப்ப வணங்கிஎழுந்
தண்டர்பிரான் திருமேனி
வண்ணங்கண்டு அதிசயித்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1188   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்ட மாந்தர்கள் கடிமணம்
காணவந் தணைவார்
கொண்ட வல்வினை யாப்பவிழ்
கொள்கைய வான
தொண்டர் சிந்தையும் வதனமும்
மலர்ந்தன சுருதி
மண்டு மாமறைக் குலம்எழுந்
தார்த்தன மகிழ்ந்தே.
12.290   12 st/nd Thirumurai   Song # 84   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்டவர் கண்கள் காதல்நீர் வெள்ளம்
பொழிதரக் கைகுவித் திறைஞ்சி
வண்டறை குழலார் மனங்கவர் பலிக்கு
வருந்திரு வடிவுகண் டவர்கள்
கொண்டதோர் மயலால் வினவுகூற் றாகக்
குலவுசொற் காருலா வியவென்று
அண்டர்நா யகரைப் பரவிஆ ரணிய
விடங்கராம் அருந்தமிழ் புனைந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 103   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்டவர் கைகள் கூப்பித்
தொழுதுபின் தொடர்வார்க் காணார்
வண்டலர் கொன்றை யாரை
வடிவுடை மழுவென் றேத்தி
அண்டர்தம் பெருமான் போந்த
அதிசயம் அறியே னென்று
கொண்டெழு விருப்பி னோடும்
கூடலை யாற்றூர் புக்கார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 300   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்டவர்கள் அதிசயிப்பக்
கரையேறி உடைபுனைந்து
மண்டுபெருங் காதலினால்
கோயிலினை வந்தடைந்து
தொண்டரெதிர் மின்னுமா
மேகம்எனுஞ் சொற்பதிகம்
எண்திசையு மறிந்துய்ய
ஏழிசையால் எடுத்திசைத்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 114   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
கண்டருளும் படிகழறிற்
12.410   12 st/nd Thirumurai   Song # 39   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
கண்டசடைச் சிரத்தினையோர்
கனகமணிக் கலத்தேந்திக்
கொண்டுதிரு முடிதாங்கிக்
குலவும்எரி வலங்கொள்வார்
அண்டர்பிரான் திருநாமத்
தஞ்செழுத்து மெடுத்தோதி
மண்டுதழற் பிழம்பினிடை
மகிழ்ந்தருளி யுள்புக்கார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F