சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கடி
கடி     கடிமலர்க்     கடிசூத்     கடியரவர்     கடிதணைந்து     கடிதுவந்     கடிது     கடிய     கடிபடு     கடிமதிக்கண்ணியினானைக்     கடியவன்     கடிக்கும்(ம்)     கடியேன்,     கடியார்    
1.041   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடி படு கமலத்து அயனொடு மாலும், காதலோடு அடிமுடி தேட,
செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீவணர்; எம்முடைச் செல்வர்;
முடி உடை அமரர் முனிகணத்தவர்கள் முறை முறை அடி பணிந்து ஏத்த,
படி அது ஆகப் பாவையும் தாமும் பாம்புர நன்நகராரே.

1.064   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடி ஆர் அலங்கல் கொன்றை சூடி, காதில் ஓர் வார்குழையன்,
கொடி ஆர் வெள்ளை ஏறு உகந்த கோவணவன், இடம் ஆம்
படியார் கூடி, நீடி ஓங்கும் பல்புகழால் பரவ,
செடி ஆர் வைகை சூழ நின்ற தென்திருப்பூவணமே.

1.067   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடி ஆர் கொன்றைச் சுரும்பின் மாலை கமழ் புன் சடையார்; விண்
முடியாப் படி மூ அடியால் உலகம் முழுதும் தாவிய
நெடியான், நீள் தாமரைமேல் அயனும், நேடிக் காணாத
படியார்; பொடி ஆடு அகலம் உடையார் பழன நகராரே.

2.025   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடி கொள் கூவிளம் மத்தம் வைத்தவன்,
படி கொள் பாரிடம் பேசும் பான்மையன்,
பொடி கொள் மேனியன், பூம் புகலியுள
அடிகளை அடைந்து அன்பு செய்யுமே!

2.069   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடைமேல் உடையாரும்,
பொடிபட முப்புரம் செற்ற பொருசிலை ஒன்று உடையாரும்,
வடிவு உடை மங்கை தன்னோடு மணம் படு
கொள்கையினாரும்,
படி படு கோலத்தினாரும் பாண்டிக்கொடு முடியாரே.

2.089   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடி கொள் கூவிளம் மத்தம் கமழ் சடை நெடு முடிக்கு
அணிவர்;
பொடிகள் பூசிய மார்பின் புனைவர்; நல் மங்கை ஒர்பங்கர்
கடி கொள் நீடு ஒலி, சங்கின் ஒலியொடு, கலை ஒலி,
துதைந்து,
கொடிகள் ஓங்கிய மாடக் கொச்சைவயம் அமர்ந்தாரே.

2.108   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடிய ஏற்றினர், கனல் அன மேனியர், அனல் எழ ஊர்
மூன்றும்
இடிய மால்வரை கால் வளைத்தான், தனது அடியவர்மேல்
உள்
வெடிய வல்வினை வீட்டுவிப்பான், உறை விற்குடி வீரட்டம்
படியது ஆகவே பரவுமின்! பரவினால், பற்று அறும்,
அருநோயே.

2.111   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடிபடு கொன்றை நன்மலர் திகழும் கண்ணியர்; விண்ணவர்
கன மணி சேர்
முடி பில்கும் இறையவர்; மறுகில் நல்லார் முறை முறை பலி
பெய, முறுவல் செய்வார்;
பொடி அணி வடிவொடு, திரு அகலம் பொன் என
மிளிர்வது ஒர் அரவினொடும்,
வடி நுனை மழுவினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

3.034   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடிய ஆயின குரல் களிற்றினைப் பிளிற, ஓர்
இடிய வெங்குரலினோடு ஆளி சென்றிடு நெறி,
வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்வு இடம்
செடி அது ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.

3.054   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடி சேர்ந்த போது மலர் ஆன கைக் கொண்டு, நல்ல
படி சேர்ந்த பால்கொண்டு, அங்கு ஆட்டிட, தாதை பண்டு
முடி சேர்ந்த காலை அற வெட்டிட, முக்கண் மூர்த்தி
அடி சேர்ந்த வண்ணம்(ம்) அறிவார் சொலக் கேட்டும் அன்றே!

3.123   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடிது என வந்த கரிதனை உரித்து அவ் உரி மேனிமேல் போர்ப்பர்
பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை பிறைநுதலவளொடும் உடன் ஆய
கொடிது எனக் கதறும் குரைகடல் சூழ்ந்து கொள்ள, முன் நித்திலம் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கம் ஆய்த் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே.

4.003   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கடிமதிக்கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி,
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்,
அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்ற போது,
இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

4.047   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கடியவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி,
வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும், மருவ நோக்கிச்
செடி படத் திருவிர(ல்)லால் ஊன்றலும், சிதைந்து வீழ்ந்தான்;
வடிவு உற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!

4.051   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கடி கமழ் கொன்றையானே! கபாலம் கை ஏந்தினானே!
வடிவு உடை மங்கை தன்னை மார்பில் ஓர் பாகத்தானே!
அடி இணை பரவ நாளும் அடியவர்க்கு அருள் செய்வானே!
கொடி அணி விழவு அது ஓவாக் கோடிகா உடைய கோவே!

6.021   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கடி ஆர் தளிர் கலந்த கொன்றைமாலை, கதிர்   போது, தாது அணிந்த கண்ணி போலும்;
நெடியானும் சது முகனும் நேட நின்ற, நீல நல் கண்டத்து, இறையார் போலும்;
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன்மேனி மணிவண்ணம், தம் வண்ணம் ஆவார் போலும்;
அடியார் புகல் இடம் அது ஆனார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

6.045   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கடிய விடை ஏறி, காளகண்டர் கலையோடு மழுவாள் ஓர் கையில் ஏந்தி,
இடிய பலி கொள்ளார்; போவார் அல்லர்; எல்லாம் தான் இவ் அடிகள் யார்? என்பாரே;
வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம்; மயிலாப்புள்ளே
செடி படு வெண்தலை ஒன்று ஏந்தி வந்து, திரு ஒற்றியூர் புக்கார், தீய ஆறே!.

6.081   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கடி மலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்; கண் அப்ப விண் அப்புக் கொடுத்தான் கண்டாய்;
படி மலிந்த பல்பிறவி அறுப்பான் கண்டாய்; பற்று அற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்;
அடி மலிந்த சிலம்பு அலம்பத் திரிவான் கண்டாய்; அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய்;
கொடி மலிந்த மதில்-தில்லைக் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

7.009   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கடிக்கும்(ம்) அரவால் மலையால் அமரர் கடலைக் கடைய, எழு காளகூடம்
ஒடிக்கும்(ம்), உலகங்களை என்று அதனை உமக்கே அமுது ஆக உண்டீர்; உமிழீர்
இடிக்கும் மழை வீழ்த்து இழித்திட்டு, அருவி இருபாலும் ஓடி, இரைக்கும் திரைக் கை
அடிக்கும் புனல் சேர் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே!

7.026   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கடியேன், காதன்மையால் கழல் போது அறியாத என் உள்
குடியாக் கோயில் கொண்ட குளிர் வார் சடை எம் குழகா!
முடியால் வானவர்கள் முயங்கும் திருக்காளத்தியாய்!
அடியேன் உன்னை அல்லால் அறியேன், மற்று ஒருவரையே .

7.032   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கடிது ஆய்க் கடல் காற்று வந்து எற்ற, கரைமேல்
குடி தான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ?
கொடியேன் கண்கள் கண்டன, கோடிக் குழகீர்!
அடிகேள்! உமக்கு ஆர் துணை ஆக இருந்தீரே?

9.019   9 st/nd Thirumurai   Song # 2   பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா  
கடியார் கணம்புல்லர்
   கண்ணப்பர் என்றுன்
அடியார் அமருலகம்
   ஆளநீ ஆளாதே
முடியாமுத் தீவேள்வி
   மூவாயி ரவரொடும்
குடிவாழ்க்கை கொண்டுநீ
   குலாவிக் கூத் தாடினையே.
11.006   11 st/nd Thirumurai   Song # 63   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
கடிமலர்க் கொன்றை தரினும்புல்
லேன்கலை சாரலொட்டேன்
முடிமலர் தீண்டின் முனிவன்
முலைதொடு மேற்கெடுவன்
அடிமலர் வானவர் ஏத்தநின்
றாய்க் கழ கல்லவென்பேன்
தொடிமலர்த் தோள்தொடு மேல்திரு
வாணை தொடங்குவனே.

11.007   11 st/nd Thirumurai   Song # 18   சேரமான் பெருமாள் நாயனார்   திருவாரூர் மும்மணிக்கோவை  
கடிமலர்க் கொன்றையுஞ் திங்களுஞ்
செங்கண் அரவும்அங்கண்
முடிமலர் ஆக்கிய முக்கணக்
கன்மிக்க செக்கரொக்கும்
படிமலர் மேனிப் பரமன்
அடிபர வாதவர்போல்
அடிமலர் நோவ நடந்தோ
கடந்ததெம் அம்மனையே.

11.008   11 st/nd Thirumurai   Song # 21   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
கடிசூத் திரம்புனைந்து கங்கணம்கைப் பெய்து
வடிவுடைய கோலம் புனைந்தாங்கு அடிநிலைமேல்

11.022   11 st/nd Thirumurai   Song # 12   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
கடியரவர் அக்கர் இனிதாடு கோயில்
கடியரவர் கையதுமோர் சூலம் கடியரவ
ஆனேற்றார்க் காட்பட்ட நெஞ்சமே அஞ்சல்நீ
ஆனேற்றார்க் காட்பட்டேம் யாம்.

12.250   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கடிதணைந்து வாகீசர்
கழல்பணிய மற்றவர்தம்
அடிபணியா முன்பணியும்
அரசின்எதிர் அந்தணனார்
முடிவில்தவஞ் செய்தேன்கொல்
முன்பொழியுங் கருணைபுரி
வடிவுடையீர் என்மனையில்
வந்தருளிற் றென்என்றார்.
12.250   12 st/nd Thirumurai   Song # 30   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கடிதுவந் தமுது செய்யக்
காலந்தாழ்க் கின்ற தென்றே
அடிசிலும் கறியும் எல்லாம்
அழகுற அணைய வைத்துப்
படியில்சீர்த் தொண்ட னார்முன்
பணிந்தெழுந் தமுது செய்தெங்
குடிமுழு துய்யக் கொள்வீர்
என்றவர் கூறக் கேட்டு.
12.550   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
கடிது முட்டி மற்றவள்தன்
கருமென் கூந்தல் பிடித்தீர்த்துப்
படியில் வீழ்த்தி மணிமூக்கைப்
பற்றிப் பரமர் செய்யசடை
முடியில் ஏறுந் திருப்பூமண்
டபத்து மலர்மோந் திடும்மூக்கைத்
தடிவ னென்று கருவியினால்
அரிந்தார் தலைமைத் தனித்தொண்டர்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000