சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் எங்கே
எங்கே     எங்கேனும்    
2.040   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எங்கேனும் யாது ஆகிப் பிறந்திடினும், தன் அடியார்க்கு
இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான், எருது ஏறி,
கொங்கு ஏயும் மலர்ச்சோலைக் குளிர் பிரமபுரத்து உறையும்
சங்கே ஒத்து ஒளிர் மேனிச் சங்கரன், தன் தன்மைகளே

5.050   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எங்கே என்ன, இருந்த இடம் தேடிக்கொண்டு,
அங்கே வந்து, அடையாளம் அருளினார்;
தெங்கே தோன்றும் திரு வாய்மூர்ச் செல்வனார்
அங்கே வா! என்று போனார்; அது என்கொலோ?

7.023   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்,
அங்கே வந்து என்னொடும் உடன் ஆகி நின்று அருளி,
இங்கே என் வினையை அறுத்திட்டு, எனை ஆளும்
கங்கா நாயகனே! கழிப்பாலை மேயானே! .

7.077   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
எங்கே போவேன் ஆயிடினும், அங்கே வந்து என் மனத்தீராய்,
சங்கை ஒன்றும் இன்றியே தலை நாள் கடை நாள் ஒக்கவே;
கங்கை சடை மேல் கரந்தானே! கலை மான் மறியும் கனல் மழுவும்
தங்கும், திரைக் காவிரிக் கோட்டத்து, ஐயாறு உடைய அடிகளோ!

7.092   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
எங்கேனும் போகினும், எம்பெருமானை, நினைந்தக்கால்,
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை;
பொங்கு ஆடு அரவா! புக்கொளியூர் அவிநாசியே!
எம் கோனே! உனை வேண்டிக்கொள்வேன், பிறவாமையே.

10.305   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனு மாமே. 


This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87