சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் உம்
உம்பராலும்     உம்பரில்     உம்பர்     உம்பர்நா     உம்பர்தங்     உம்பருல     உம்பருய்ய     உம்முடைய     உம்ப     உம்மைப்     உம்பரானை,     உம்பரார்     உம்பரான்,     உம்     உம்பரும்     உம்பர்கட்கு     உம்பர்நா(டு)    
1.029   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உம்பராலும் உலகின் அவராலும்
தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர்,
நண்பு உலாவும் மறையோர், நறையூரில்
செம்பொன் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

5.062   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உம்பரானை, உருத்திர மூர்த்தியை,
அம்பரானை, அமலனை, ஆதியை,
கம்பு நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
எம்பிரானை, கண்டு இன்பம் அது ஆயிற்றே.

7.017   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
உம்பரார் கோனைத் திண்தோள் முரித்தார்; உரித்தார், களிற்றை;
செம்பொன் ஆர் தீவண்ணர்; தூ வண்ண நீற்றர்; ஓர் ஆவணத்தால்,
எம்பிரானார், வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நம்பிரானார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .

7.018   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
உம்பரான், ஊழியான், ஆழியான், ஓங்கி மலர் உறைவான்,
தம் பரம் அல்லவர்; சிந்திப்பவர் தடுமாற்று அறுப்பார்;
எம் பரம் அல்லவர்; என் நெஞ்சத் துள்ளும் இருப்பது ஆகில்,
அம்பரம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .

7.022   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தித் தொழுமின், தொண்டீர்!
மங்கை ஒர் கூறு உடையான், வானோர் முதல் ஆய பிரான்,
அம் கையில் வெண் மழுவன்(ன்), அலை ஆர் கதிர் மூவிலைய
பங்கய பாதன், இடம் பழமண்ணிப் படிக் கரையே .

7.025   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
உம்பரும் வானவரும்(ம்) உடனே நிற்கவே, எனக்குச்
செம்பொனைத் தந்து அருளி, திகழும் முதுகுன்று அமர்ந்தீர்;
வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள்;
எம்பெருமான்! அருளீர், அடியேன் இட்டளம் கெடவே! .

8.137   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
உம்பர்கட்கு அரசே! ஒழிவு அற நிறைந்த யோகமே! ஊத்தையேன் தனக்கு
வம்பு எனப் பழுத்து, என் குடி முழுது ஆண்டு, வாழ்வு அற வாழ்வித்த மருந்தே!
செம் பொருள் துணிவே! சீர் உடைக் கழலே! செல்வமே! சிவபெருமானே!
எம்பொருட்டு, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

9.008   9 st/nd Thirumurai   Song # 10   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
உம்பர்நா(டு) இம்பர் விளங்கியாங்(கு) எங்கும்
    ஒளிவளர் திருமணிச் சுடர்கான்(று)
எம்பிரான் நடஞ்செய் சூழல்அங் கெல்லாம்
    இருட் பிழம்(பு) அறஎறி கோயில்
வம்புலாம் கோயில் கோபுரம் கூடம்
    வளர்நிலை மாடமா ளிகைகள்
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
10.913   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனை
செம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனை
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்புறு நாடிஎன் அன்பில்வைத் தேனே.

12.000   12 st/nd Thirumurai   Song # 286   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
உம்பர் நாயகர் தங்கழல் அல்லது
நம்பு மாறறி யேனை நடுக்குற
வம்பு மால்செய்து வல்லியின் ஒல்கியின்று
எம்பி ரானரு ளெந்நெறிச் சென்றதே.
12.000   12 st/nd Thirumurai   Song # 332   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
உம்பர்நா யகர்அடியார்
பேருவகை தாமெய்த
நம்பியா ரூரர்திருக்
கூட்டத்தின் நடுவணைந்தார்
தம்பிரான் தோழரவர்
தாமொழிந்த தமிழ்முறையே
எம்பிரான் தமர்கள்திருத்
தொண்டேத்தல் உறுகின்றேன். ]"
12.190   12 st/nd Thirumurai   Song # 59   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
உம்பர் நாயகர் பூசனைக் கவர்தாம்
உரைத்த ஆகமத் துண்மையே  தலைநின்
றெம்பி ராட்டிஅர்ச் சனைபுரி வதனுக்
கியல்பில் வாழ்திருச் சேடிய ரான
கொம்ப னார்கள்பூம் பிடகைகொண் டணையக்
குலவு மென்தளி ரடியிணை யொதுங்கி
அம்பி காவன மாந்திரு வனத்தி
லான தூநறும் புதுமலர் கொய்தாள்.
12.210   12 st/nd Thirumurai   Song # 143   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
உம்பர்தங் கோனை உடைய
பிரானைஉள் புக்கிறைஞ்சி
நம்புறும் அன்பின் நயப்புறு
காதலி னால்திளைத்தே
எம்பெரு மான்தனை ஏழையேன்
நான்பண் டிகழ்ந்ததென்று
தம்பரி வால்திருத் தாண்டகச்
செந்தமிழ் சாற்றிவாழ்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 105   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
உம்பருல கதிசயிப்ப ஓங்கியநா
தத்தளவின் உண்மை நோக்கித்
தும்புருநா ரதர்முதலாம் சுருதியிசைத்
துறையுள்ளோர் துதித்து மண்மேல்
வம்பலர்மா மழைபொழிந்தார் மறைவாழ
வந்தருளும் மதலை யாரும்
தம்பெருமான் அருள்போற்றி மீண்டருளிச்
சண்பைநகர் சாரச் செல்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 899   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
உம்பருய்ய நஞ்சுண்டார் அருளால் ஓடம்
செலச்செல்ல உந்துதலால் ஊடு சென்று
செம்பொனேர் சடையார்தங் கொள்ளம் பூதூர்
தனைச்சேர அக்கரையிற் சேர்ந்த பின்பு
நம்பரவர் தமைவணங்க ஞான முண்ட
பிள்ளையார் நற்றொண்ட ருடனி ழிந்து
வம்பலரும் நறுங்கொன்றை நயந்தார் கோயில்
வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1167   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
உம்முடைய பெருந்தவத்தால்
உலகனைத்தும் ஈன்றளித்த
அம்மைதிரு முலைப்பாலில்
குழைத்தஆ ரமுதுண்டார்க்
கெம்முடைய குலக்கொழுந்தை
யாமுய்யத் தருகின்றோம்
வம்மின்என உரைசெய்து
மனமகிழ்ந்து செலவிடுத்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 235   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
உம்ப ருய்ய உலகுய்ய
ஓல வேலை விடமுண்ட
தம்பி ரானார் வன்தொண்டர்
தம்பா லெய்திச் சங்கிலியை
இம்ப ருலகில் யாவருக்கும்
எய்த வொண்ணா இருந்தவத்துக்
கொம்பை உனக்குத் தருகின்றோம்
கொண்ட கவலை ஒழிகென்ன.
12.360   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
உம்முடைய நிலைமையினை
அறியாமை கொண்டுய்த்தீர்
எம்முடைய மனக்கருத்துக்
கினிதாக விசைந்துஉமது

மெய்ம்மைபுரி செயல்விளங்க வேண்டியவா றேசரித்துச்
செம்மைநெறித் திருத்தொண்டு
செய்யுமென விடைகொடுத்தான்.
12.360   12 st/nd Thirumurai   Song # 78   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
உம்மைப் போல நீறிட்டார்
உளரோ வுண்பீர் நீரென்று
செம்மைக் கற்பில் திருவெண்காட்
டம்மை தம்மைக் கலந்திருத்தி
வெம்மை இறைச்சி சோறிதனின்
மீட்டுப் படையு மெனப்படைத்தார்
தம்மை யூட்ட வேண்டியவர்
உண்ணப் புகலுந் தடுத்தருளி.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D