சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் இழை
இழை     இழைத்த     இழையார்     இழைவள     இழைகெழு     இழையணி     இழைக்கும்(ம்)    
1.022   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன்;
முழையினில் மிகு துயில் உறும் அரி முசிவொடும் எழ, முளரியொடு எழு
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன்-இருள் உறும்
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர் தரு பரமனே.

1.069   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இழைத்த இடையாள் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்,
தழைத்த சடையார், விடை ஒன்று ஏறித் தரியார் புரம் எய்தார்
பிழைத்த பிடியைக் காணாது ஓடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்து, அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே.

1.131   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இழை மேவு கலை அல்குல் ஏந்திழையாள் ஒருபால் ஆய், ஒருபால் எள்காது
உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு
கழை மேவு மடமந்தி மழை கண்டு, மகவினொடும் புக, ஒண் கல்லின்
முழை மேவு மால்யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே.

2.058   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இழை ஆர்ந்த கோவணமும் கீளும் எழில் ஆர் உடை
ஆக,
பிழையாத சூலம் பெய்து, ஆடல் பாடல் பேணினீர்!
குழை ஆரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த குடவாயில்,
விழவு ஆர்ந்த கோயிலே கோயில் ஆக மிக்கீரே.

6.031   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால்; இரவினொடு  நண்பகலும் ஏத்தி வாழ்த்தி,
பிழைத்தது எலாம் பொறுத்து அருள் செய் பெரியோய்!  என்றும், பிஞ்ஞகனே! மைஞ் ஞவிலும் கண்டா! என்றும்,
அழைத்து அலறி, அடியேன் உன் அரணம் கண்டாய், அணி ஆரூர் இடம் கொண்ட அழகா! என்றும்,
குழல் சடை எம் கோன்! என்றும், கூறு, நெஞ்சே! குற்றம் இல்லை, என்மேல்; நான் கூறினேனே.

7.004   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
இழைக்கும்(ம்) எழுத்துக்கு உயிரே ஒத்தியால்; இலையே ஒத்தியால்; உளையே ஒத்தியால்;
குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால்; அடியார் தமக்கு ஓர் குடியே ஒத்தியால்
மழைக்கு(ந்) நிகர்-ஒப்பன வன் திரைகள் வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு
அழைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து  அப்பனே! .

7.040   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
இழை தழுவு வெண்நூலும் மேவு திருமார்பின் ஈசன், தன் எண்தோள்கள் வீசி எரி ஆட,
குழை தழுவு திருக்காதில் கோள் அரவம் அசைத்து, கோவணம் கொள் குழகனை, குளிர்சடையினானை,
தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடந் தரள மென் கரும்பின் தாழ்      கிடங்கின் அருகே,
கழை தழுவித் தேன் கொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டு முள்ளூரில் கண்டு      தொழுதேனே .

7.043   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
இழை வளர் நுண் இடை மங்கையொடு இடுகாட்டு இடைக்
குழை வளர் காதுகள் மோத நின்று குனிப்பதே?
மழை வளரும் நெடுங்கோட்டு இடை மதயானைகள்,
முழை வளர் ஆளி, முழக்கு அறா முதுகுன்றரே!

11.006   11 st/nd Thirumurai   Song # 59   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
இழையார் வனமுலை வீங்கி
இடையிறு கின்றதுஇற்றால்
பிழையாள் நமக்கிவை கட்டுண்க
என்பது பேச்சுக்கொலாம்
கழையார் கழுக்குன்ற வாணனைக்
கண்டனைக் காதலித்தாள்
குழையார் செவியொடு கோலக்
கயற்கண்கள் கூடியவே.

11.007   11 st/nd Thirumurai   Song # 8   சேரமான் பெருமாள் நாயனார்   திருவாரூர் மும்மணிக்கோவை  
இழையார் வனமுலை யீர்இத்தண் புனத்தின்
உழையாகப் போந்ததொன் றுண்டோ - பிழையாச்சீர்
அம்மான் அனலாடி ஆரூர்க்கோன் அன்றுரித்த
கைம்மாநேர் அன்ன களிறு.

11.029   11 st/nd Thirumurai   Song # 84   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
இழையார் அரவணி ஏகம்பர்
நெற்றி விழியின்வந்த
பிழையா அருள்நம் பிராட்டிய
தின்ன பிறங்கலுன்னும்
நுழையா வருதிரி சூலத்தள்
நோக்கரும் பொன்கடுக்கைத்
தழையார் பொழில்உது பொன்னே
நமக்குத் தளர்வில்லையே.

11.034   11 st/nd Thirumurai   Song # 48   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
இழைவள ராகத்து ஞான
சம்பந்த னிருஞ்சுருதிக்
கழைவளர் குன்று கடத்தலுங்
காண்பீர் கடைசியர்,நீள்
முழைவளர் நண்டு படத்தடஞ்
சாலிமுத் துக்கிளைக்கும்
மழைவளர் நீள்குடு மிப்பொழில்
சூழ்ந்த வளவளலே.

11.036   11 st/nd Thirumurai   Song # 16   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை  
இழைகெழு மென்முலை யிதழிமென் மலர்கொயத்
தழைவர வொசித்த தடம்பொழி லிதுவே காமர்
கனைகுடைந் தேறித் துகிலது புனையநின்
றெனையுங் கண்டு வெள்கிட மிதுவே தினைதொறும்
பாய்கிளி யிரியப் பையவந் தேறி

ஆயவென் றிருக்கும் அணிப்பரண் இதுவே ஈதே
இன்புறு சிறுசொ லவைபல வியற்றி
அன்பு செய் தென்னை யாட்கொளு மிடமே பொன்புரை
தடமலர்க் கமலக் குடுமியி லிருந்து
நற்றொழில் புரியும் நான்முகன் நாட்டைப்

புற்கடை கழீஇப் பொங்கு சராவத்து
நெய்த்துடுப் பெடுத்த மூத்தீப் புகையால்
நாள்தொறும் மறைக்குஞ் சேடுறு காழி
எண்டிசை நிறைந்த தண்டமிழ் விரகன்
நலங்கலந் தோங்கும் விலங்கலின் மாட்டுப்

பூம்புன மதனிற் காம்பன தோளி
பஞ்சில் திருந்தடி நோவப் போய்எனை
வஞ்சித் திருந்த மணியறை யிதுவே.

12.020   12 st/nd Thirumurai   Song # 23   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
இழையணி முந்நூன் மார்பின்
எந்தைநீர் தந்து போன
விழைதரும் ஓடு வைத்த
வேறிடந் தேடிக் காணேன்
பழையமற் றதனில் நல்ல
பாத்திரந் தருவன் கொண்டிப்
பிழையினைப் பொறுக்க வேண்டும்
பெருமவென் றிறைஞ்சி நின்றார்.
12.070   12 st/nd Thirumurai   Song # 43   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
இழைத்த அன்பினில் இறைதிரு நீற்றுமெய் யடிமை
பிழைத்தி லோமெனிற் பெருந்துலை நேர்நிற்க வென்று
மழைத்த டம்பொழில் திருநல்லூர் இறைவரை வணங்கித்
தழைத்த அஞ்செழுத் தோதினார் ஏறினார் தட்டில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 150   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
இழைத்த டங்கொங்கை இமயமா
மலைக்கொடி இன்னமு தெனஞானம்
குழைத்த ளித்திட அமுதுசெய்
தருளிய குருளையார் வரக்கண்டு
மழைத்த மந்தமா ருதத்தினால்
நறுமலர் வண்ணநுண் துகள்தூவித்
தழைத்த பொங்கெழில் முகஞ்செய்து
வணங்கின தடம்பணை வயற்சாலி.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000