சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் இருந்த
இருந்தஅக்     இருந்தேன்இக்     இருந்தார்     இருந்த     இருந்தனள்     இருந்தஇவ்     இருந்தனர்     இருந்தஇச்     இருந்தழு     இருந்து     இருந்தேன்     இருந்தனம்     இருந்தவா     இருந்தண்     இருந்தவத்தோர்     இருந்தஇடைச்     இருந்தவன்     இருந்துதி     இருந்திரைத்    
2.101   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இருந்தவன் கிடந்தவன்(ன்), இடந்து விண் பறந்து, மெய்
வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர்
செருந்தி, ஞாழல், புன்னை, வன்னி, செண்பகம், செழுங்
குரா,
அரும்பு சோலை வாசம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே.

5.060   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
இருந்து சொல்லுவன்; கேண்மின்கள்: ஏழைகாள்!
அருந்தவம் தரும், அஞ்சு எழுத்து ஓதினால்;
பொருந்து நோய் பிணி போகத் துரப்பது ஓர்
மருந்தும் ஆகுவர், மன்னும் மாற்பேறரே.

8.106   8 st/nd Thirumurai   Song # 18   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
இருந்து என்னை ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை;' என்னின் அல்லால்,
விருந்தினனேனை, விடுதி கண்டாய்? மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
மருந்தினனே, பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே.

8.147   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
இருந்து என்னை ஆண்டான் இணை அடியே சிந்தித்து
இருந்து, இரந்துகொள், நெஞ்சே! எல்லாம் தரும் காண்
பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்,
மருந்து உருவாய், என் மனத்தே, வந்து.

8.219   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
இருந்துதி யென்வயிற் கொண்டவன்
   யான்எப் பொழுதுமுன்னும்
மருந்து திசைமுகன் மாற்கரி
   யோன்தில்லை வாழ்த்தினர்போல்
இருந்து திவண்டன வாலெரி
   முன்வலஞ் செய்திடப்பால்
அருந்துதி காணு மளவுஞ்
   சிலம்பன் அருந்தழையே

9.008   9 st/nd Thirumurai   Song # 11   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
இருந்திரைத் தரளப் பரவைசூழ் அகலத்(து)
    எண்ணிலங் கண்ணில்புன் மாக்கள்
திருந்துயிர்ப் பருவத்(து) அறிவுறு கருவூர்த்
    துறைவளர் தீந்தமிழ் மாலை
பொருந்தருங் கருணைப் பரமர்தம் கோயில்
    பொழிலகங் குடைந்துவண்(டு) உறங்கச்
செருந்திநின்(று) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
10.100   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

10.100   10 st/nd Thirumurai   Song # 19   திருமூலர்   திருமந்திரம்  
இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன்என் நந்தி இணையடிக் கீழே.

10.104   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங்
கிருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே. 

10.202   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்திய லிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே. 3,

10.318   10 st/nd Thirumurai   Song # 16   திருமூலர்   திருமந்திரம்  
இருந்தனள் சத்தியும் அக்கலை சூழ
இருந்தனள் கன்னியும் அந்நடு வாக
இருந்தனள் மான்ஏர் முகநில வார
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே. 

10.318   10 st/nd Thirumurai   Song # 19   திருமூலர்   திருமந்திரம்  
இருந்த பிராணனும் உள்ளே எழுமா
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே. 

10.402   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
இருந்தஇவ் வட்டங்கள் ஈரா றிரேகை
இருந்த இரேகைமேல் ஈரா றிருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்
றிருந்த மனையொன்றில் எய்துவன் தானே.

10.402   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
இருந்தஇவ் வட்டம் இருமூன் றிரேகை
இருந்த அதனுள் இரேகைஐந் தாக
இருந்த அறைகள் இருபத்தஞ் சாக
இருந்த அறை ஒன்றில் எய்தும் மகாரமே.

10.406   10 st/nd Thirumurai   Song # 39   திருமூலர்   திருமந்திரம்  
இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்
பொருந்திரு நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.

10.407   10 st/nd Thirumurai   Song # 22   திருமூலர்   திருமந்திரம்  
இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்
பரந்தன வாயு திசைதிசை தோறும்
குவிந்தன முத்தின் முகம்ஒளி நோக்கி
நடந்தது தேறல் அதோமுகம் அம்பே.

10.408   10 st/nd Thirumurai   Song # 31   திருமூலர்   திருமந்திரம்  
இருந்தனள் ஏந்திழை என்னுளம் மேவி
திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னி
நிரந்தர மாகிய நீர்திசை ஓடு
பொருந்த விலக்கில் புணர்ச்சி அதுவே.

10.408   10 st/nd Thirumurai   Song # 36   திருமூலர்   திருமந்திரம்  
இருந்தனள் ஏந்திழை ஈ(று) அதில் ஆகத்
திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற்றிசெய் தேத்தி
வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே.

10.413   10 st/nd Thirumurai   Song # 53   திருமூலர்   திருமந்திரம்  
இருந்தனர் சத்திகள் அறுபத்து நால்வர்
இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர்
இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தே
இருந்த கரம்இரு வில்லம்பு கொண்டே.

10.413   10 st/nd Thirumurai   Song # 74   திருமூலர்   திருமந்திரம்  
இருந்தஇச் சத்தி இருநாலு கையில்
பரந்தஇப் பூக்கிளி பாசம் மழுவாள்
கரந்திடு கேடகம் வில்லம்பு கொண்டங்
குரந்தங் கிருந்தவள் கூத்துகந்தாளே.

10.518   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
இருந்தழு வாரும் இயல்புகெட் டாரும்
அருந்தவம் மேற்கொண்டங் கண்ணலை எண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.

10.605   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
இருந்து வருந்தி எழிற்றவம் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந்திந் திரனே எவரே எனினும்
திருந்தும்தம் சிந்தை சிவனவன் பாலே.

10.737   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
இருந்தேன் மலரளைந் தின்புற வண்டு
பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வருந்தேன் நுகராது வாய்புகு தேனை
அருந்தேனை யாரும் அறியகி லாரே.

11.006   11 st/nd Thirumurai   Song # 17   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
இருந்தனம் எய்தியும் நின்றுந்
திரிந்துங் கிடந்தலைந்தும்
வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு
போகநெஞ் சேமடவாள்
பொருந்திய பாகத்துப் புண்ணியன்
புண்ணியல் சூலத்தெம்மான்
திருந்திய போதவன் றானே
களையுநம் தீவினையே.

11.009   11 st/nd Thirumurai   Song # 53   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
இருந்தவா காணீர் இதுவென்ன மாயம்
அருந்தண் கயிலாயத் தண்ணல் - வருந்திப்போய்த்
தானாளும் பிச்சை புகும்போலும் தன் அடியார்
வானாள மண்ணாள வைத்து.

11.034   11 st/nd Thirumurai   Song # 40   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
இருந்தண் புகலி,கோ லக்கா,
வெழிலா வடுதுறை,சீர்
பொருந்தும் அரத்துறை போனகம்,
தாளம்,நன் பொன், சிவிகை
அருந்திட ஒற்ற,முத் தீச்செய
வேற வரனளித்த
பெருந்தகை சீரினை யெம்பர
மோ!நின்று பேசுவதே.

12.280   12 st/nd Thirumurai   Song # 178   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
இருந்த டங்களும் பழனமும்
கடந்துபோய் எருக்கத்தம் புலியூரின்
மருங்கு சென்றுற நீலகண்
டப்பெரும் பாணனார் வணங்கிக்கார்
நெருங்கு சோலைசூழ் இப்பதி
அடியனேன் பதியென நெடிதின்புற்
றருங்க லைச்சிறு மழஇளங்
களிறனார் அங்கணைந் தருள்செய்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 880   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
இருந்தவத்தோர் அவர்முன்னே
இணைமலர்க்கை குவித்தருளி
அருந்தவத்தீர் எனையறியாப்
பருவத்தே எடுத்தாண்ட
பெருந்தகையெம் பெருமாட்டி
உடனிருந்த தேயென்று
பொருந்துபுகழ்ப் புகலியின்மேல்
திருப்பதிகம் போற்றிசைத்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1128   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
இருந்தஇடைச் சுரம்மேவும்
இவர்வண்ணம் என்னேயென்
றருந்தமிழின் திருப்பதிகத்
தலர்மாலை கொடுபரவித்
திருந்துமனங் கரைந்துருகத்
திருக்கடைக்காப் புச்சாத்திப்
பெருந்தனிவாழ் வினைப்பெற்றார்
பேருலகின் பேறானார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4