சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஆர
ஆரம்     ஆர்அறி     ஆர்த்தெழு     ஆர்க்கும்     ஆர்வம்     ஆரும்     ஆரியன்     ஆரு     ஆருயி     ஆரே     ஆரா     ஆர்வ     ஆராலும்     ஆர்வல்லார்     ஆர்க்கின்ற     ஆரணங்     ஆர்துணையா     ஆரணம்     ஆரணங்கும்     ஆரூயிரை     ஆர்மலி     ஆரங்     ஆர்த்தி     ஆரநறுஞ்     ஆர     ஆர்கொல்     ஆர்தம     ஆருயிரின்     ஆரணமும்     ஆரணங்கள்     ஆரூரன்     ஆரணக்     ஆர்வநிறை     ஆராத     ஆரூரர்     ஆரண     ஆரூர்,     ஆரிடம்     ஆர்     ஆரல்     ஆர்த்து     ஆர்,     ஆராய்ந்து,     ஆரியம்     ஆர்த்த     ஆரணப்     ஆரார்     ஆர்த்தானை,     ஆர்ந்தவனே!     ஆரூர்     ஆர்த்தான்     ஆர்த்தவர்,     ஆர்த்தாய்,     ஆர்க்கோ?     ஆரத்     ஆரணத்தேன்     ஆருயிர்    
1.094   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆரம் நாகம் ஆம் சீரன், ஆலவாய்த்
தேர் அமண் செற்ற வீரன் என்பரே.

2.039   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், நல்லம்,
வடகச்சியும்,அச்சிறுபாக்கம், நல்ல
கூரூர், குடவாயில், குடந்தை, வெண்ணி,
கடல் சூழ் கழிப்பாலை, தென் கோடி, பீடு ஆர்
நீர் ஊர் வயல் நின்றியூர், குன்றியூரும்,
குருகாவையூர், நாரையூர், நீடு கானப்
பேரூர், நல் நீள் வயல் நெய்த்தானமும்,
பிதற்றாய், பிறைசூடிதன் பேர் இடமே!

3.014   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆரிடம் பாடலர், அடிகள், காடு அலால்
ஓர் இடம் குறைவு இலர், உடையர் கோவணம்,
நீர் இடம் சடை, விடை ஊர்தி, நித்தலும்
பாரிடம் பணி செயும், பயில் பைஞ்ஞீலியே.

3.059   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய
நீர் இரி புன்சடை மேல் நிரம்பா மதி சூடி, நல்ல
கூர் எரி ஆகி நீண்ட குழகன்; குடமூக்கு இடமா,
ஈர் உரி கோவணத்தோடு இருந்தான்; அவன் எம் இறையே.

3.063   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆரல் ஆம் சுறவம் மேய்ந்து, அகன் கழனிச் சிறகு
உலர்த்தும்,
பாரல் வாய்ச் சிறு குருகே! பயில் தூவி மடநாராய்!
சீர் உலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை, சென்று, உரையீரே!

3.069   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால்
ஈரும் வகை செய்து, அருள்புரிந்தவன் இருந்த மலைதன்னை வினவில்
ஊரும் அரவம்(ம்) ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால்,
கார் இருள் கடிந்து, கனகம்(ம்) என விளங்கு காளத்திமலையே.

4.016   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர்த்து ஆர் உயிர் அடும் அந்தகன் தன் உடல்
பேர்த்தார், பிறைநுதல் பெண்ணின் நல்லாள் உட்கக்
கூர்த்து ஆர் மருப்பின் கொலைக் களிற்று ஈர் உரி
போர்த்தார்-புகலூர்ப் புரிசடையாரே.

4.048   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை
பேர் ஒளி உருவினானைப் பிரமனும் மாலும் காணாச்
சீர் அவை பரவி ஏத்திச் சென்று அடி வணங்குவார்க்குப்
பேர் அருள் அருளிச் செய்வார், பேணும் ஆப்பாடியாரே.

4.061   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர், வலம் நம்மின் மிக்கார்?’ என்ற அவ் அரக்கர் கூடிப்
போர் வலம் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித்
தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தைச்
சேர்,-மட நெஞ்சமே!-நீ செஞ்சடை எந்தைபாலே!

4.072   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர்த்து எழும் இலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும்;
பார்த்தனோடு அமர் பொரூது படை கொடுத்து அருள்வர் போலும்;
தீர்த்தம் ஆம் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்;
ஏத்த ஏழ் உலகும் வைத்தார்-இன்னம்பர் ஈசனாரே.

4.102   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆராய்ந்து, அடித்தொண்டர் ஆணிப் பொன், ஆரூர் அகத்து அடக்கிப்
பார் ஊர் பரப்பத் தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான்,
நார் ஊர் நறுமலர் நாதன், அடித்தொண்டன் நம்பி நந்தி
நீரால்-திருவிளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே!

4.104   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர் அட்டதேனும் இரந்து, உண்டு, அகம் அகவன் திரிந்து,
வேர் அட்ட, நிற்பித்திடுகின்றதால்-விரிநீர்ப் பரவைச்
சூர் அட்ட வேலவன் தாதையை, சூழ் வயல் ஆர் அதிகை-
வீரட்டத்தானை, விரும்பா அரும்பாவவேதனையே.

5.018   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆரியம் தமிழோடு இசை ஆனவன்,
கூரிய(க்) குணத்தார் குறி நின்றவன்,
காரிகை உடையான், கடம்பந்துறை,
சீர் இயல் பத்தர், சென்று அடைமின்களே!

5.032   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர்த்த தோல் உடை கட்டி ஓர் வேடனாய்ப்
பார்த்தனோடு படை தொடும் ஆகிலும்,
பூத்த நீள் பொழில் பூந்துருத்தி(ந்) நகர்த்
தீர்த்தன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

5.068   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆரணப் பொருள் ஆம் அருளாளனார்
வாரணத்து உரி போர்த்த மணாளனார்-
நாரணன் நண்ணி ஏத்தும் நள்ளாறனார்;
காரணக் கலைஞானக் கடவுளே.

6.018   6 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே
அவ் உரு  ஆய் நிற்கின்ற அருளும் தோன்றும்;
வார் உருவப்பூண் முலை நல் மங்கை தன்னை 
மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும்;
நீர் உருவக் கடல் இலங்கை அரக்கர் கோனை
நெறு நெறு என அடர்த்திட்ட நிலையும் தோன்றும்;
போர் உருவக் கூற்று உதைத்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

6.037   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி! ஆரமுதே! என்றேன், நானே;
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்திக் குறள்   பூதப்பல் படையாய்! என்றேன், நானே;
பேர் ஆயிரம் உடையாய்! என்றேன், நானே; பிறை சூடும் பிஞ்ஞகனே! என்றேன், நானே;
ஆரா அமுதே! என் ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

6.038   6 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆரும் அறியா இடத்தாய், நீயே; ஆகாயம் தேர் ஊர வல்லாய், நீயே;
பேரும் பெரிய இலங்கை வேந்தன் பெரிய முடிபத்து
இறுத்தாய், நீயே;
ஊரும் புரம் மூன்றும் அட்டாய், நீயே; ஒண்
தாமரையானும் மாலும் கூடித்
தேரும் அடி என்மேல் வைத்தாய், நீயே திரு
ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

6.041   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும்,   ஆதிக்கயிலாயன் நீயே என்றும்,
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும், கோடிகா மேய குழகா! என்றும்,
பார்த்தற்கு அருள் செய்தாய் நீயே என்றும்,   பழையனூர் மேவிய பண்பா! என்றும்,
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

6.043   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர்த்தானை, வாசுகியை, அரைக்கு ஓர் கச்சா அசைத்தானை; அழகு ஆய பொன் ஆர் மேனிப்
பூத்தானத்தான் முடியைப் பொருந்தா வண்ணம் புணர்த்தானை; பூங்கணையான் உடலம் வேவப்
பார்த்தானை; பரிந்தானை; பனி நீர்க்கங்கை படர் சடைமேல் பயின்றானை; பதைப்ப யானை
போர்த்தானை; புண்ணியனை; புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.

6.044   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர்ந்தவனே! உலகு எலாம் நீயே ஆகி அமைந்தவனே! அளவு இலாப் பெருமையானே!
கூர்ந்தவனே! குற்றாலம் மேய கூத்தா! கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்திப்
பேர்ந்தவனே! பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான்! என்று எப்போதும் பேசும் நெஞ்சில்
சேர்ந்தவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

6.069   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆராத இன்னமுதை, அம்மான் தன்னை,   அயனொடு மால் அறியாத ஆதியானை,
தார் ஆரும் மலர்க்கொன்றைச் சடையான் தன்னை, சங்கரனை, தன் ஒப்பார் இல்லாதானை,
நீரானை, காற்றானை, தீ ஆனானை, நீள் விசும்பு ஆய், ஆழ்கடல்கள் ஏழும் சூழ்ந்த
பாரானை, பள்ளியின் முக்கூடலானை, பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.

6.070   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆரூர் மூலட்டானம், ஆனைக்காவும், ஆக்கூரில்-தான் தோன்றி மாடம், ஆவூர்,
பேரூர், பிரமபுரம், பேராவூரும், பெருந்துறை,   காம்பீலி, பிடவூர், பேணும்
கூர் ஆர் குறுக்கை வீரட்டான(ம்)மும், கோட்டூர், குடமூக்கு, கோழம்ப(ம்)மும்,
கார் ஆர் கழுக்குன்றும், கானப்பேரும்,   கயிலாய நாதனையே காணல் ஆமே.

6.085   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர்த்தான் காண், அழல் நாகம் அரைக்கு நாணா; அடியவர்கட்கு அன்பன் காண்; ஆனைத்தோலைப்
போர்த்தான் காண்; புரிசடை மேல் புனல் ஏற்றான் காண்; புறங்காட்டில் ஆடல் புரிந்தான் தான் காண்;
காத்தான் காண், உலகு ஏழும் கலங்கா வண்ணம், கனை கடல் வாய் நஞ்சு அதனைக் கண்டத்துள்ளே!
சேர்த்தான் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.

6.088   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை; அலை கடல் நஞ்சு அயின்றானை; அமரர் ஏத்தும்
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை; எழுபிறப்பும் எனை ஆளா உடையான் தன்னை;
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை; உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும்
சீர் ஆரும் வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.

7.019   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஆர்த்தவர், ஆடு அரவம்(ம்) அரைமேல்; புலி ஈர் உரிவை
போர்த்தவர்; ஆனையின் தோல் உடல் வெம் புலால் கை அகலப்
பார்த்தவர்; இன் உயிர், பார், படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றைச்
சேர்த்தவருக்கு உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே .

7.023   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஆர்த்தாய், ஆடுஅரவை அரை ஆர் புலி அதள்மேல்;
போர்த்தாய், ஆனையின் தோல் உரிவை புலால் நாற;
காத்தாய், தொண்டு செய்வார் வினைகள் அவை போக,
பார்த்தானுக்கு இடம் ஆம் பழி இல் கழிப்பாலை அதே .

7.047   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஆரூர் அத்தா! ஐயாற்று அமுதே! அளப்பூர் அம்மானே!
கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே!
பேரூர் உறைவாய்! பட்டிப் பெருமான்! பிறவா நெறியானே!
பார் ஊர் பலரும் பரவப்படுவாய்! பாசூர் அம்மானே!

8.101   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,
சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை,
முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்:

8.107   8 st/nd Thirumurai   Song # 12   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஆர்த்த பிறவித் துயர் கெட, நாம் ஆர்த்து ஆடும்
தீர்த்தன்; நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும்
கூத்தன்; இவ் வானும், குவலயமும், எல்லோமும்,
காத்தும், படைத்தும், கரந்தும், விளையாடி,
வார்த்தையும் பேசி, வளை சிலம்ப, வார் கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய, அணி குழல்மேல் வண்டு ஆர்ப்ப,
பூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொன் பாதம்
ஏத்தி, இரும் சுனை நீர் ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

8.147   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஆர்க்கோ? அரற்றுகோ? ஆடுகோ? பாடுகோ?
பார்க்கோ? பரம்பரனே, என் செய்கேன்? தீர்ப்பு அரிய
ஆனந்த மால் ஏற்றும் அத்தன், பெருந்துறையான்
தான்' என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து?

8.212   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
ஆரத் தழையராப் பூண்டம்
   பலத்தன லாடியன்பர்க்
காரத் தழையன் பருளிநின்
   றோன்சென்ற மாமலயத்
தாரத் தழையண்ணல் தந்தா
   லிவையவ ளல்குற்கண்டால்
ஆரத் தழைகொடு வந்தா
   ரெனவரும் ஐயுறவே.

8.215   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
ஆரம் பரந்து திரைபொரு
   நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி
   தோன்றுந் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன
   ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பர் சுற்றி யெற்றிச்
   சிறந்தார்க்குஞ் செறிகடலே.

9.012   9 st/nd Thirumurai   Song # 11   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
ஆரணத்தேன் பருகிஅருந்
    தமிழ்மாலை கமழவரும்
காரணத்தின் நிலைபெற்ற
    கருவூரன் தமிழ்மாலை
பூரணத்தால் ஈரைந்தும்
    போற்றிசைப்பார் காந்தாரம்
சீரணைத்த பொழிற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
9.026   9 st/nd Thirumurai   Song # 7   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா  
ஆருயிர் காவலிங்(கு) அருமை யாலே
   அந்தணர் மதலைநின் அடிபணியக்
கூர்நுனை வேற்படைக்கூற்றம் சாயக்
   குரைகழல் பணிகொள மலைந்த தென்றால்
ஆரினி அமரர்கள் குறைவி லாதார்
   அவரவர் படுதுயர் களைய நின்ற
சீருயி ரேஎங்கள் தில்லை வாணா !
   சேயிழை யார்க்கினி வாழ்வரிதே.
9.027   9 st/nd Thirumurai   Song # 4   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா  
ஆரே இவைபடுவார்
   ஐயங் கொளவந்து
போரேடி என்று
   புருவம் இடுகின்றார்
தேரார் விழவோவாத்
   தில்லைச்சிற் றம்பலவர்
தீராநோய் செய்வாரை
   ஒக்கின்றார் காணீரே.
9.029   9 st/nd Thirumurai   Song # 12   சேந்தனார்   திருப்பல்லாண்டு  
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
   அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி
   இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
   திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
   பல்லாண்டு கூறுதுமே. 

10.100   10 st/nd Thirumurai   Song # 32   திருமூலர்   திருமந்திரம்  
ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆர்அறி வார்அவ் வகலமும் நீளமும்
பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேர்அறி யாமை விளம்புகின் றேனே.

10.105   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட் டெரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே. 

10.118   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.19,

10.121   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே. 

10.213   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே. 14,

10.305   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஆரியன் அல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.

10.315   10 st/nd Thirumurai   Song # 17   திருமூலர்   திருமந்திரம்  
ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை
ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரு மறியா அறிவறிந் தேனே. 

10.406   10 st/nd Thirumurai   Song # 36   திருமூலர்   திருமந்திரம்  
ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை
காரியல் கோதையள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரிஎன் உள்ளங் குலாவிநின் றாளே.

10.408   10 st/nd Thirumurai   Song # 46   திருமூலர்   திருமந்திரம்  
ஆரே திருவின் திருவடி காண்பர்கள்!
நேரேநின் றோதி நினையவும் வல்லார்க்குக்
காரேய் குழலி கமல மலரன்ன
சீரேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே.

10.411   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
ஆரும் உரைசெய்ய லாம்அஞ் செழுத்தாலே
ஆரும் அறியாத ஆனந்த ரூபம்ஆம்
பாரும் விசும்பும் பகலும் மதியதில்
ஊரும் உயிரும் உணர்வது மாமே. 12,

10.704   10 st/nd Thirumurai   Song # 22   திருமூலர்   திருமந்திரம்  
ஆரும் அறியார் அகாரம் அவன்என்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
ஊறி எழுந்திடும் ஓசைய தாமே.

10.711   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
ஆரா தனையும் அமரர் குழாங்களும்
நீரார் கடலுள் நிலத்துள வாய்நிற்கும்
பேரா யிரமும் பிரான்திரு நாமமே
ஆராய் வுழியெங்கள் ஆதிப் பிரானே.

10.737   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
ஆர்வ மனமும் அளவில் இளமையும்
ஈரமும் நல்லஎன் றின்புறு காலத்துத்
தீர வருவதோர் காமத் தொழில்நின்று
மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே.

10.801   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
ஆரே அறிவார் அடியின் பெருமையை
ஆரே அறிவார் அருந்தவம் நின்றது
ஆரே அறிவார் அறுபத்தெட் டாக்கையை
ஆரே அறிவார் அடிக்காவ லானாதே.

10.927   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
ஆராலும் என்னை அமட்டஒண் ணாதினிச்
சீரார் பிரன்வந்தென் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவதல் லா(து)இனி
யார்பாடுஞ் சாரா அறிவறிந் தேனே.

11.004   11 st/nd Thirumurai   Song # 96   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
ஆர்வல்லார் காண அரன்அவனை அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து.

11.006   11 st/nd Thirumurai   Song # 50   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
ஆர்க்கின்ற நீரும் அனலும்
மதியும்ஐ வாயரவும்
ஓர்க்கின்ற யோகும் உமையும்
உருவும் அருவும்வென்றி
பார்க்கின்ற வேங்கையும் மானும்
பகலும் இரவுமெல்லாம்
கார்க்கொன்றை மாலையி னார்க்குடன்
ஆகிக் கலந்தனவே.
11.006   11 st/nd Thirumurai   Song # 55   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
ஆரணங் கின்முகம் ஐங்கணை
யானகம் அவ்வகத்தில்
தோரணந் தோள்அவன் தேரகல்
அல்குல்தொன் மைக்கண்வந்த
பூரண கும்பம் முலையிவை
காணப் புரிசடையெம்
காரணன் தாள்தொழும் அன்போ
பகையோ கருதியதே.

11.008   11 st/nd Thirumurai   Song # 19   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
ஆரம் அவைபூண் டணிதிக ழும்சன்ன
வீரந் திருமார்பில் வில்இலக ஏருடைய

11.008   11 st/nd Thirumurai   Song # 149   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய
சீரார் தெரிவைப் பிராயத்தாள் ஓரா

11.023   11 st/nd Thirumurai   Song # 45   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
ஆர்துணையா ஆங்கிருப்ப தம்பலவாஅஞ்சொலுமை
ஆர்துணையா ஆனை உரிமூடின் ஆர்துணையாம்
பூவணத்தாய் பூதப் படையாளி பொங்கொளியாய்
பூவணத்தாய் என்னின் புகல்.

11.027   11 st/nd Thirumurai   Song # 3   பட்டினத்துப் பிள்ளையார்   திருக்கழுமல மும்மணிக் கோவை  
ஆரணம் நான்கிற்கும் அப்பா
லவனறி யத்துணிந்த
நாரணன் நான்முக னுக்கரி
யான்நடு வாய்நிறைந்த
பூரணன் எந்தை புகலிப்
பிரான்பொழில் அத்தனைக்கும்
காரணன் அந்தக் கரணங்
கடந்த கருப்பொருளே.

11.037   11 st/nd Thirumurai   Song # 45   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
ஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல்மடவார்
ஏரணங்கு மாடத் தினிதிருந்து சீரணங்கு

11.037   11 st/nd Thirumurai   Song # 138   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
ஆரூயிரை மீட் டன்று றவளை அணிமருகல்
ஊரறிய வைத்த தென உரைப்பார் பேரிடரால்

11.038   11 st/nd Thirumurai   Song # 31   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
ஆர்மலி புகலி நாதன்
  அருளென இரவில் வந்தென்
வார்முலை பயலை தீர
  மணந்தவர் தணந்து போன
தேரதர் அழியல் உம்மைச்
  செய்பிழை எம்ம தில்லை
கார்திரை புரள மோதிக்
  கரைபொருங் கடலி னீரே. 12
  பதிக வகை: கலிவிருத்தம்

12.000   12 st/nd Thirumurai   Song # 133   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
ஆரங் கண்டிகை ஆடையுங் கந்தையே
பார மீசன் பணியல தொன்றிலார்
ஈர அன்பினர் யாதுங் குறைவிலார்
வீர மென்னால் விளம்புந் தகையதோ.
12.000   12 st/nd Thirumurai   Song # 298   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
ஆர்த்தி கண்டும்என் மேல்நின்று அழற்கதிர்
தூர்ப்ப தேயெனைத் தொண்டுகொண் டாண்டவர்
நீர்த்த ரங்கநெடுங் கங்கை நீள்முடிச்
சாத்தும் வெண்மதி போன்றிலை தண்மதி.
12.000   12 st/nd Thirumurai   Song # 306   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
ஆரநறுஞ் சேறாட்டி அரும்பனிநீர்
நறுந்திவலை யருகு வீசி
ஈரவிளந் தளிர்க்குளிரி படுத்துமட
வார்செய்த விவையு மெல்லாம்
பேரழலில் நெய்சொரிந்தால் ஒத்தனமற்
றதன்மீது சமிதை யென்ன
மாரனுந்தன் பெருஞ்சிலையின் வலிகாட்டி
மலர்வாளி சொரிந்தான் வந்து.
,
12.040   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
ஆர மென்புபு னைந்த ஐயர்தம்
அன்பர் என்பதொர் தன்மையால்
நேர வந்தவர் யாவ ராயினும்
நித்த மாகிய பத்திமுன்
கூர வந்தெதிர் கொண்டு கைகள்கு
வித்து நின்றுசெ விப்புலத்
தீர மென்மது ரப்ப தம்பரி
வெய்த முன்னுரை செய்தபின்.
12.090   12 st/nd Thirumurai   Song # 11   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
ஆர்கொல் பொரவழைத்தார்
என்றரியேற் றிற்கிளர்ந்து
சேர்வு பெறக்கச்சில்
செறிந்தவுடை மேல்வீக்கி
வார்கழலுங் கட்டி
வடிவாள் பலகைகொடு
போர்முனையில் ஏனாதி
நாதர் புறப்பட்டார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 113   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
ஆர்தம ராக நீரிங்
கிருப்பதென் றகல மாட்டேன்
நீர்பசித் திருக்க இங்கு  
நிற்கவுங் கில்லேன் என்று
சோர்தரு கண்ணீர் வாரப்  
போய்வரத் துணிந்தா ராகி
வார்சிலை எடுத்துக் கொண்டு  
மலர்க்கையால் தொழுது போந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 415   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆருயிரின் திருவிருத்தம்
தசபுரா ணத்தடைவும்
பார்பரவும் பாவநா
சப்பதிகம் பன்முறையும்
நேர்படநின் றறைகூவுந்
திருப்பதிகம் முதற்பிறவும்
பேரருளின் கடல்அளிக்கும்
பெருமானைப் பாடினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 67   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆரணமும் உலகேழும்
ஈன்றருளி அனைத்தினுக்கும்
காரணமாய் வளம்பெருகு
கருணைதிரு வடிவான
சீரணங்கு சிவபெருமான்
அருளுதலும் சென்றணைந்து
வாரிணங்கு திருமுலைப்பால்
வள்ளத்துக் கறந்தருளி.
12.280   12 st/nd Thirumurai   Song # 258   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆரணங்கள் மதுரவொலி எழுந்து பொங்க
அரசிலையுந் தருப்பையும்பெய் தணிந்த வாசப்
பூரணகும் பங்கள்நிறை கரகம்ஏந்திப்
புதுமலரும் நறுந்துகளும் பொரியுந் தூவி
வாரணங்கு முலைஉமையாள் குழைத்த செம்பொன்
வள்ளத்தில் அமுதுண்ட வள்ள லாரைச்
சீரணங்கு மணிமுத்தின் சிவிகை மீது
செழுந்தரளக் குடைநிழற் கீழ்ச்சென்று கண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1187   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆர்வ மிக்கெழும் அன்பினால்
மலர்அயன் அனைய
சீர்ம றைத்தொழிற் சடங்குசெய்
திருந்துநூல் முனிவர்
பார்வ ழிப்பட வரும்இரு
வினைகளின் பந்தச்
சார்பொ ழிப்பவர் திருக்கையில்
காப்புநாண் சாத்த.
12.290   12 st/nd Thirumurai   Song # 14   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆரூரன் தனக்குன்பால்
நெல்தந்தோம் என்றருளி
நீரூருஞ் சடைமுடியார்
நிதிக்கோமான் தனையேவப்
பேரூர்மற் றதனெல்லை
அடங்கவும்நென் மலைப்பிறங்கல்
காரூரும் நெடுவிசும்புங்
கரக்கநிறைந் தோங்கியதால்.
12.290   12 st/nd Thirumurai   Song # 382   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆரணக் கமலக் கோயின்
மேவிப்புற் றிடங்கொண் டாண்ட
நீரணி வேணி யாரை
.
12.360   12 st/nd Thirumurai   Song # 20   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஆர்வநிறை பெருஞ்சுற்றம்
அகம்மலர வளித்தவர்தாம்
பார்பெருகு மகிழ்ச்சியுடன்
பருவமுறைப் பாராட்டுச்
சீர்பெருகச் செய்யவளர்
திருமகனார் சீரடியில்
தார்வளர்கிண் கிணியசையத்
தளர்நடையின் பதஞ்சார்ந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 56   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஆரா ஆசை ஆனந்தக்
கடலுள் திளைத்தே யமர்ந்தருளால்
சீரார் வண்ணப் பொன்வண்ணத்
திருவந் தாதி திருப்படிக்கீழ்ப்
பார்ஆ தரிக்க எடுத்தேத்திப்
பணிந்தார் பருவ மழைபொழியும்
காரால் நிகர்க்க அரிய கொடைக்
கையார் கழறிற் றறிவார் தாம்.
12.370   12 st/nd Thirumurai   Song # 117   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஆராத காதலுட
னப்பதியிற் பணிந்தேத்திச்
சீராருந் திருத்தொண்டர்
சிலநாளங் கமர்ந்தருளிக்
காராரு மலர்ச்சோலைக்
கானப்பேர் கடந்தணைந்தார்
போரானேற் றார்கயிலைப்
பொருப்பர்திருப் புனவாயில்.
12.370   12 st/nd Thirumurai   Song # 159   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஆரூரர் மொழிந்தருள
அதுகேட்ட அருட்சேரர்
பாரோடு விசும்பாட்சி
எனக்குமது பாதமலர்
தேரூரும் நெடுவீதித்
திருவாரூர்க் கெழுந்தருள
நேரூரு மனக்காதல்
நீக்கவும்அஞ் சுவன்என்றார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 164   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஆரூரர் அவர்தமக்கு
விடையருளி அங்ககன்று
காரூரும் மலைநாடு
கடந்தருளிக் கற்சுரமும்
நீரூருங் கான்யாறு
நெடுங்கானும் பலகழியச்
சீரூருந் திருமுருகன்
பூண்டிவழிச் செல்கின்றார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 168   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஆரூரர் தம்பால்அவ்
வேடுவர்சென் றணையாதே
நீரூருஞ் செஞ்சடையார்
அருளினால் நீங்கஅவர்
சேர்ஊராந் திருமுருகன்
பூண்டியினிற் சென்றெய்திப்
போரூரும் மழவிடையார்
கோயிலைநா டிப்புக்கார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
ஆரம் உரகம் அணிந்தபிரான்
அன்பர் அணுக்க வன்தொண்டர்
ஈர மதுவார் மலர்ச்சோலை
எழிலா ரூரில் இருக்குநாள்
சேரர் பெருமாள் தனைநினைந்து
தெய்வப் பெருமான் கழல்வணங்கிச்
சாரல் மலைநா டணைவதற்குத்
தவிரா விருப்பி னுடன்போந்தார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 23   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
ஆரண மொழிகன் முழங்கிட
ஆடினர் குணலைகள் அந்தணர்
வாரண மதமழை சிந்தின
வாசிகள் கிளரொலி பொங்கின
பூரண கலசம் மலிந்தன
பூமழை மகளிர் பொழிந்திடும்
தோரண மறுகு புகுந்தது
தோழர்கள் நடவிய குஞ்சரம்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%86%E0%AE%B0