சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஆமா
ஆமா     ஆமாக்கள்     ஆமாண்பொன்    
10.217   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
ஆமா றறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசர்க்குந் தூய குரவற்குங்
காமாதி விட்டோர்க்குந் தூடணம் கற்பிப்போன்
போமா நரகில் புகான்போதங் கற்கவே.

10.519   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப்
போமாறு தானில்லை புண்ணிய மல்லதுஅங்
காமாம் வழிஆக்கும் அவ்வே றுயிர்கட்கும்
போமாறவ் வாதாரப் பூங்கொடி யாளே.

10.734   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
ஆமா றறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமாறச் சத்தறி விப்போன் அறிவிலோன்
கோமான் அலன்அசத் தாகுங் குரவனே.

10.919   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
ஆமா றறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
போமா றறிந்தேன் புகுமாறும் ஈதென்றே
ஏமாப்ப தில்லை இனிஓர் இடமில்லை
நாமாம் முதல்வனும் நாமென லாமே. 20,

10.924   10 st/nd Thirumurai   Song # 19   திருமூலர்   திருமந்திரம்  
ஆமாக்கள் ஐந்தும் அரிஒன்றும் முப்பதும்
தேமா இரண்டொடு தீப்புலி ஒன்பதும்
தாமாக் குரம்கொளின் தம்மனத் துள்ளன
மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே.

11.004   11 st/nd Thirumurai   Song # 34   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே
நாம் ஆளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமா
றொருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி
அருகணையா தாரை யடும்.

11.038   11 st/nd Thirumurai   Song # 45   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
ஆமாண்பொன் கூட்டகத்த
  அஞ்சொலிளம் பைங்கிளியே
பாமாலை யாழ்முரியப்
  பாணழியப் பண்டருள்செய்
மாமான சுந்தரன்வண்
  சம்பந்த மாமுனியெம்
கோமான்தன் புகழொருகால்
  இன்புறநீ கூறாயே
கொச்சையர்கோன் தன்புகழ்யான்
  இன்புறநீ கூறாயே. 26
  பதிக வகை: எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%86%E0%AE%AE%E0%AE%BE