சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஆங்கு
ஆங்கு     ஆங்குரைக்க     ஆங்குவளர்     ஆங்குவன     ஆங்குடைய     ஆங்குமுன்     ஆங்கு,    
6.018   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி,அன்று,
தன்  முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்;
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி, அன்று,
பலபிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும்;
கோங்கு அணைந்த கூவிளமும் மதமத்த(ம்)மும்
குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும்;
பூங்கணை வேள் உரு அழித்த பொற்புத் தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

8.102   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஆங்கு, அது தன்னில், அடியவட்கு ஆக,
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்;
உத்தரகோசமங்கையுள் இருந்து,
வித்தக வேடம் காட்டிய இயல்பும்;
பூவணம் அதனில் பொலிந்து, இனிது அருளி,

10.402   10 st/nd Thirumurai   Song # 86   திருமூலர்   திருமந்திரம்  
ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பாங்கு படவே பலாசப் பலகையில்
காண்கரு வேட்டில் கடுப்பூசி விந்துவிட்
டோங்காரம் வைத்திடு உச்சா டனத்துக்கே.

11.023   11 st/nd Thirumurai   Song # 17   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
ஆங்குரைக்க லாம்பொன் மலர்ப்பாதம் அஃதன்றே
ஆங்குரைக்க லாம்பொன் அணிதில்லை ஆங்குரைத்த
அம்பலத்தும் அண்டத்தும் அப்பாலு மாய்நின்ற
அம்பரத்தும் அண்டத்தும் ஆம்

12.190   12 st/nd Thirumurai   Song # 88   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
ஆங்குவளர் எயிலினுடன் விளங்கும் வாயில்
அப்பதியில் வாழ்பெரியோர் உள்ளம் போல
ஓங்குநிலைத் தன்மையவாய் அகிலம் உய்ய
உமைபாகர் அருள்செய்த ஒழுக்க மல்லால்
தீங்குநெறி அடையாத தடையு மாகிச்
செந்நெறிக்கண் நிகழ்வாய்மை திருந்து மார்க்கம்
தாங்குலவ நிலவிவளர் ஒளியா லென்றும்
தடநெடுவான் அளப்பனவாந் தகைய வாகும்.
12.200   12 st/nd Thirumurai   Song # 41   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
ஆங்கு மருங்கு நின்றார்கள்
அவ்வந் தணன்தன் திருமனையின்
பாங்கு சென்று மற்றவனை
அழைத்துக் கொண்டு வரப்பகர்ந்த
ஓங்கு சபையோர் அவனைப்பார்த்
தூர்ஆன் நிரைமேய்த் துன்மகன்செய்
தீங்கு தன்னைக் கேளென்று
புகுந்த பரிசு செப்புவார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 13   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆங்குவன முலைகள்சுமந்
தணங்குவன மகளிரிடை
ஏங்குவன நூபுரங்கள்
இரங்குவன மணிக்காஞ்சி
ஓங்குவன மாடநிரை
யொழுகுவன வழுவிலறம்
நீங்குவன தீங்குநெறி
நெருங்குவன பெருங்குடிகள்.
12.210   12 st/nd Thirumurai   Song # 367   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆங்கு மற்றவர் துணிவறிந்
தவர்தமை அறிய
நீங்கு மாதவர் விசும்பிடைக்
கரந்துநீள் மொழியால்
ஓங்கு நாவினுக் கரசனே
எழுந்திர்என் றுரைப்பத்
தீங்கு நீங்கிய யாக்கைகொண்
டெழுந்தொளி திகழ்வார்.
12.260   12 st/nd Thirumurai   Song # 31   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆங்கு வேதியில் அறாதசெந்
தீவலஞ் சுழிவுற்
றோங்கி முன்னையில் ஒருபடித்
தன்றியே ஒளிரத்
தாங்கு நூலவர் மகிழ்வுறச்
சகோடயாழ்த் தலைவர்
பாங்கு பாணியா ருடன்அரு
ளாற்பள்ளி கொண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 184   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆங்கு நாதரைப் பணிந்துபெண்
ணாகடம் அணைந்தரு மறையோசை
ஓங்கு தூங்கானை மாடத்துள்
அமர்கின்ற வொருதனிப் பரஞ்சோதிப்
பாங்க ணைந்துமுன் வலங்கொண்டு
பணிவுற்றுப் பரவுசொல் தமிழ்மாலை
தீங்கு நீங்குவீர் தொழுமின்கள்
எனும்இசைப் பதிகமும் தெரிவித்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 199   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆங்கு மற்ற அருளடி யாருடன்
ஓங்கு கோயிலுள் ளார்க்கும்உண் டாயிட
ஈங்கி தென்ன அதிசயம் என்பவர்
தாங்கள் அம்மறை யோர்கள்முன் சாற்றினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 328   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆங்குடைய பிள்ளையார்
அமர்ந்துறையும் நாளின்கண்
தூங்குதுளி முகிற்குலங்கள்
சுரந்துபெய லொழிகாலை
வீங்கொலிநீர் வைப்பெல்லாம்
வெயில்பெறா விருப்புவரப்
பாங்கர்வரை யுங்குளிரும்
பனிப்பருவ மெய்தியதால்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1228   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆங்குமுன் னிட்ட செம்பொன்
அணிமணிப் பீடந் தன்னில்
ஓங்கிய ஞான வெள்ளம்
உண்ணிறைந் தெழுவ தென்னத்
தாங்கிய முத்தின் பைம்பூண்
தண்ணிலவு எறிப்ப ஏறிப்
பாங்கொளி பரப்பி நின்றார்
பரசம யங்கள் வீழ்த்தார்.
12.430   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
ஆங்கு அன்பர்தாம் நுளையர்தந்
தலைவராய் அவர்கள்
ஏங்கு தெண்டிரைக் கடலிடைப்
பலபட இயக்கிப்
பாங்கு சூழ்வலை வளைத்துமீன்
படுத்துமுன் குவிக்கும்
ஓங்கு பல்குவை யுலப்பில
வுடையராய் உயர்வார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81