சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அருள்
அருள்பெற்     அருள்எங்கு     அருள்பெற்ற     அருள்தரும்     அருள்நம்பாற்     அருள்சேரா     அருள்பழுத்     அருள்தரு     அருள்செய்த     அருள்கொண்ட     அருள்நயந்     அருள்வெள்ளத்     அருள்பொழியுந்     அருள்     அருள்திரள்     அருள்செய்(து)     அருள்பெறின்    
8.132   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அருள் ஆர் அமுதப் பெரும் கடல்வாய், அடியார் எல்லாம் புக்கு அழுந்த,
இருள் ஆர் ஆக்கை இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய்; எம்மானே!
மருள் ஆர் மனத்து ஓர் உன்மத்தன் வருமால்' என்று, இங்கு, எனைக் கண்டார்
வெருளாவண்ணம், மெய் அன்பை, உடையாய்! பெற நான் வேண்டுமே!

8.137   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அருள் உடைச் சுடரே! அளிந்தது ஓர் கனியே! பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே!
பொருள் உடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த போகமே! யோகத்தின் பொலிவே!
தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே! சிவபெருமானே!
இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

9.004   9 st/nd Thirumurai   Song # 3   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
அருள்திரள் செம்பொன் சோதி
    அம்பலத் தாடுகின்ற
இருள்திரள் கண்டத் தெம்மான்
    இன்பருக்(கு) அன்பு செய்யா
அரட்டரை அரட்டுப் பேசும்
    அழுக்கரைக் கழுக்க ளாய
பிரட்டரைக் காணா கண்வாய் பேசா(து)
    அப் பேய்க ளோடே.
9.023   9 st/nd Thirumurai   Song # 4   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
அருள்செய்(து) ஆடுநல் அம்பலக்
   கூத்தனே ! அணிதில்லை நகராளீ
மருள்செய்(து) என்றனை வனமுலை
   பொன்பயப் பிப்பது வழக்கமோ
திரளும் நீள்மணிக் கங்கையைத்
   திருச்சடைச் சேர்த்திஅச் செய்யாளுக்(கு)
உருவம் பாகமும் ஈந்துநல்
   அந்தியை ஒண்ணுதல் வைத்தோனே.
9.026   9 st/nd Thirumurai   Song # 10   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா  
அருள்பெறின் அகலிடத்(து) இருக்கலா மென்று
   அமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
இருவரும் அறிவுடையாரின் மிக்கார்
   ஏத்துகின் றார் இன்னம் எங்கள்கூத்தை
மருள்படு மழலைமென் மொழியுமையாள்
   கணவனை வல்வினை யாட்டி யேனான்
அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா
   ஆசையை அளவறுத் தார்இங் காரே.
10.405   10 st/nd Thirumurai   Song # 27   திருமூலர்   திருமந்திரம்  
அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே.

10.709   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
அருள்எங்கு மான அளவை அறியார்
அருளை நுகரமு தானதுந் தேரார்
அருள்ஐங் கருமத் ததிசூக்க முன்னார்
அருள்எங்கும் கண்ணான தார்அறி வாரே.

10.838   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்
இருளற்ற சிந்தை இறைவனை நாடி
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே.

10.907   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவர் உள்ளுறை மாயை
திரிமலம் நீங்கச் `சிவாய` என்(று)ஓதும்
அருவினை தீர்ப்பதுவும் அவ்வெழுந் தாமே.

11.022   11 st/nd Thirumurai   Song # 70   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
அருள்நம்பாற் செஞ்சடையன் ஆமாத்தூர் அம்மான்
அருள்நம்பால் நல்கும் அமுதம் அருள்நம்பால்
ஓராழித் தேரான் எயிறட்ட உத்தமனை
ஓராழி நெஞ்சே உவ.

11.023   11 st/nd Thirumurai   Song # 8   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
அருள்சேரா தார்ஊர்தீ ஆறாமல் எய்தாய்
அருள்சேரோ தாரூர்தீ யாடி அருள்சேரப்
பிச்சையேற்று உண்டு பிறர்கடையிற் கால்நிமிர்த்துப்
பிச்சையேற்று உண்டுழல்வாய் பேச்சு.

11.027   11 st/nd Thirumurai   Song # 7   பட்டினத்துப் பிள்ளையார்   திருக்கழுமல மும்மணிக் கோவை  
அருள்பழுத் தளிந்த கருணை வான்கனி
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க் கமிர்த வாரி நெடுநிலை
மாடக் கோபுரத் தாடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாணநின்

வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி
யானொன் றுணர்த்துவான் எந்தை மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமுந் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாய ராகியுந் தந்தைய ராகியும்
வந்தி லாதவர் இல்லை யான் அவர்
தந்தைய ராகியுந் தாய ராகியும்
வந்தி ராததும் இல்லை முந்து
பிறவா நிலனும் இல்லை அவ்வயின்
இறவா நிலனும் இல்லை பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை
யான் அவை

தம்மைத் தின்னா தொழிந்ததும் இல்லை
அனைத்தே காலமும் சென்றது யான்இதன்
மேல்இனி
இளைக்குமா றிலனே நாயேன்
நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலுந்

தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும்
இயன்றஓர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னது மந்திர மாக என்னையும்
இடர்ப்பிறப் பிறப்பெனும் இரண்டின்

கடற்ப டாவகை காத்தல்நின் கடனே.

11.032   11 st/nd Thirumurai   Song # 23   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
அருள்தரு சீர்த்தில்லை யம்பலத்
தான்தன் அருளினன்றிப்
பொருள்தரு வானத் தரசாத
லிற்புழு வாதல்நன்றாம்
சுருள்தரு செஞ்சடை யோனரு
ளேல்துற விக்குநன்றாம்
இருள்தரு கீழேழ் நரகத்து
வீழும் இருஞ்சிறையே.

12.120   12 st/nd Thirumurai   Song # 30   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அருள்செய்த மொழிகேளா
அடற்சுரிகை தனையுருவிப்
பொருள்செய்தா மெனப்பெற்றேன்
எனக்கொண்டு பூங்கொடிதன்
இருள்செய்த கருங்கூந்தல்
அடியிலரிந் தெதிர்நின்ற
மருள்செய்த பிறப்பறுப்பார்
மலர்க்கரத்தி னிடைநீட்ட.
12.210   12 st/nd Thirumurai   Song # 90   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அருள்கொண்ட உணர்வின்றி
நெறிகோடி அறிவென்று
மருள்கொண்ட மன்னவனும்
மந்திரிகள் தமைநோக்கித்
தெருள்கொண்டோர் இவர்சொன்ன
தீயோனைச் செறுவதற்குப்
பொருள்கொண்டு விடாதென்பால்
கொடுவாரும் எனப்புகன்றான்.
12.210   12 st/nd Thirumurai   Song # 130   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அருள்நயந் தஞ்செழுத்
தேத்தப் பெற்றஅக்
கருணைநா வரசினைத்
திரைக்க ரங்களால்
தெருள்நெறி நீர்மையின்
சிரத்தில் தாங்கிட
வருணனுஞ் செய்தனன்
முன்பு மாதவம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 398   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அருள்வெள்ளத் திறம்பரவி
அளப்பரிய ஆனந்தப்
பெருவெள்ளத் திடைமூழ்கிப்
பேராத பெருங்காதல்
திருவுள்ளப் பரிவுடனே
செம்பொன்மலை வல்லியார்
தருவள்ளத் தமுதுண்ட
சம்பந்தர் புறத்தணைந்தார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 35   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
அருள்பொழியுந் திருமுகத்தில்
அணிமுறுவல் நிலவெறிப்ப
மருள்மொழிமும் மலஞ்சிதைக்கும்
வடிச்சூலம் வெயிலெறிப்பப்
பொருள்பொழியும் பெருகன்பு
தழைத்தோங்கிப் புவியேத்தத்
தெருள்பொழிவண் தமிழ்நாட்டுச்
செங்காட்டங் குடிசேர்ந்தார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D