சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அரக்கன்
அரக்கன்    
1.029   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால்
நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர்,
பரக்கும் கீர்த்தி உடையார், நறையூரில்
திருக்கொள் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

1.034   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரக்கன் வலி ஒல்க அடர்த்து,
வரைக்கு மகளோடு மகிழ்ந்தான்,
சுரக்கும் புனல் சூழ்தரு, காழி
நிரக்கும் மலர் தூவும், நினைந்தே!

1.091   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர்
கரத்தினால்-தொழ, திருத்தம் ஆகுமே.

1.092   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்!
பரக்கும் மிழலையீர்! கரக்கை தவிர்மினே!

2.059   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான், அடியார்க்குக்
கரக்ககில்லாது அருள்செய் பெருமான், கலிக் காழிப்
பரக்கும், புகழான் தன்னை ஏத்திப் பணிவார்மேல்,
பெருக்கும், இன்பம்; துன்பம் ஆன பிணி போமே.

3.047   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரக்கன் தான் கிரி ஏற்றவன் தன் முடிச்
செருக்கினைத் தவிர்த்தாய்! திரு ஆலவாய்
பரக்கும் மாண்பு உடையாய்! அமண்பாவரை,
கரக்க, வாதுசெயத் திரு உள்ளமே?

5.030   5 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை,
பரக்கும் நீர்ப் பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை, ஏத்துமின்!
பொருக்க, நும்வினை போய் அறும்; காண்மினே!

5.048   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரக்கன் தன் வலி உன்னி, கயிலையை
நெருக்கிச் சென்று, எடுத்தான் முடிதோள் நெரித்து
இரக்க இன் இசை கேட்டவன் ஏகம்பம்,
தருக்கு அது ஆக நாம் சார்ந்து, தொழுதுமே.

5.057   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரக்கன் ஆய இலங்கையர் மன்னனை
நெருக்கி அம் முடிபத்து இறுத்தான், அவற்கு
இரக்கம் ஆகியவன், திருக்கோளிலி
அருத்தி ஆய் அடியே தொழுது உய்ம்மினே!

5.062   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாடல் கேட்டு
இரக்கம் ஆகி அருள் புரி ஈசனை,
திரைக் கொள் நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
இருக்கும் நாதனை, காணப்பெற்று உய்ந்தெனே.

5.092   5 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரக்கன் ஈர்-ஐந்தலையும் ஓர் தாளினால்
நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும்,
சுருக்கெனாது, அங்குப் பேர்மின்கள்! மற்று நீர்
சுருக்கெனில், சுடரான் கழல் சூடுமே.

5.100   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து, ஆர் அருள்
பெருக்கச் செய்த பிரான் பெருந்தன்மையை
அருத்தி செய்து அறியப் பெறுகின்றிலர்-
கருத்து இலாக் கயக்கவணத்தோர்களே.

7.020   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அரக்கன் முடி கரங்கள்(ள்) அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்!
பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள்;
குரக்கு இனங்கள் குதி கொள் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
இரக்கம் அது ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .

7.062   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அரக்கன் ஆற்றலை அழித்து அவன் பாட்டுக்கு அன்று இரங்கிய வென்றியினானை,
பரக்கும் பார் அளித்து உண்டு உகந்தவர்கள் பரவியும் பணிதற்கு அரியானை,
சிரக் கண் வாய் செவி மூக்கு உயர் காயம்-ஆகித் தீவினை தீர்த்த எம்மானை,
குரக்கு இனம் குதி கொண்டு உகள் வயல் சூழ் கோலக் காவினில் கண்டு கொண்டேனே.


This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D