This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
தனாதன தனாதன தனாதன தனாதன தனாதன தனாதனத் ...... தனதான
நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிகப் ...... ப்ரபையாகி நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய நிராயுத புராரியச் ...... சுதன்வேதா சுராலய தராதல சராசர பிராணிகள் சொரூபமி வராதியைக் ...... குறியாமே துரால்புகழ் பராதின கராவுள பராமுக துரோகரை தராசையுற் ...... றடைவேனோ இராகவ இராமன்முன் இராவண இராவண இராவண இராஜனுட் ...... குடன்மாய்வென் றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை யிராஜசொ லவாரணர்க் ...... கிளையோனே விராகவ சுராதிப பொராதுத விராதடு விராயண பராயணச் ...... செருவூரா விராவிய குராவகில் பராரைமு திராவளர் விராலிம லைராஜதப் ...... பெருமாளே.
நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிகப்.....ப்ரபையாகி நிராச சிவராஜ தவராஜர்கள் பராவிய நிராயுத புர அரி.....அச்சுதன்வேதா சுராலய தராதல சர அசர பிராணிகள் சொரூபமிவர் ஆதியைக்.....குறியாமே துரால்புகழ் பர ஆதின கராவுள பராமுக துரோகரை தராசையுற்று.....அடைவேனோ இராகவ இராமன் முன் இராவண இராவண இராவண இராஜன் உட்குடன்மாய்.....வென்ற இராகன்மலர் ஆள் நிஜ புராணர் குமரா கலை இராஜ சொலவாரணர்க்கு.....இளையோனே விராகவ சுராதிப பொராது தவிராது அடு விராயண பராயண.....செருவூரா விராவிய குராவகில் பராரை முதிராவளர் விராலிமலை ராஜதப்.....பெருமாளே.
நோய் இல்லாததும், பழமையானதும், எல்லாவற்றிற்கும் மேலானதும், வரத்தைத் தருவதும், அழிவற்றதும், கவலை அற்றதும், முதன்மையான பேரொளியாக விளங்கி, ஆசையற்றதும், சிவத்தில் மகிழும் தவசிரேஷ்டர்கள் புகழ்வதுமாகி, ஆயுதமே இல்லாமல் (புன்னகையால்) திரிபுரத்தை எரித்த சிவன், திருமால், பிரமன், தேவலோகம், மண்ணுலகம், இயங்கியும் நிலைத்தும் இருக்கும் உயிர்கள், இந்த எல்லா உருவங்களிலும் கலந்த முழு முதற் பொருளாகிய முருகனைக் குறித்து தியானிக்காமல், பயனற்ற புகழைக் கொண்ட மற்றவருக்கு அடிமைப்பட்டு, முதலை போன்ற உள்ளத்தை உடையவரும் அலட்சிய சுபாவம் கொண்டவருமான பாவிகளை மண்ணாசை கொண்டு நான் சேரலாமோ? ரகுவின் மரபிலே வந்த இராம பிரான் முன்னொருநாளில் அழுகுரலுற்றவனும், இரவின் வண்ணமாகிய கரிய நிறம் படைத்தவனும் ஆகிய இராவணன் என்ற அரசன் அச்சப்பட்டு மாயும்படியாக வெற்றி கொண்ட அன்பு நிறைந்தவனாகிய திருமாலின் கண்ணையே மலராகக் கொண்டருளிய உண்மை வரலாற்றை உடைய சிவபெருமானின் திருக்குமரா, கலைகளுக்கு எல்லாம் தலைவனே, புகழப்படும் அந்த யானைமுகத்தோனுக்குத் தம்பியே, ஆசையே இல்லாதவனே, தேவர்களுக்கு அதிபதியே, போர் செய்யாமலேயே, தவறாமல், வெல்லவல்ல வீர வழியிலே மிக விருப்பம் உடையவனே, திருப்போரூரில் உறைபவனே, கலந்து விளங்கும் குராமரமும், அகில் மரமும் பருத்த அடிமரத்துடன் நன்கு முதிர்ந்து வளர்கின்ற விராலிமலையில் வாழ்கின்ற, அரசகுணம் படைத்த பெருமாளே.
Audio/Video Link(s)
நிராமய புராதன ... நோய் இல்லாததும், பழமையானதும்,பராபர ... எல்லாவற்றிற்கும் மேலானதும்,வராம்ருத ... வரத்தைத் தருவதும், அழிவற்றதும்,நிராகுல ... கவலை அற்றதும்,சிராதிகப் ப்ரபையாகி ... முதன்மையான பேரொளியாக விளங்கி,நிராச ... ஆசையற்றதும்,சிவராஜ தவராஜர்கள் பராவிய ... சிவத்தில் மகிழும் தவசிரேஷ்டர்கள் புகழ்வதுமாகி,நிராயுத புர அரி ... ஆயுதமே இல்லாமல் (புன்னகையால்) திரிபுரத்தை எரித்த சிவன்,அச்சுதன்வேதா ... திருமால், பிரமன்,சுராலய தராதல ... தேவலோகம், மண்ணுலகம்,சர அசர பிராணிகள் ... இயங்கியும் நிலைத்தும் இருக்கும் உயிர்கள்,சொரூபமிவர் ... இந்த எல்லா உருவங்களிலும் கலந்தஆதியைக் குறியாமே ... முழு முதற் பொருளாகிய முருகனைக் குறித்து தியானிக்காமல்,துரால்புகழ் ... பயனற்ற புகழைக் கொண்டபர ஆதின ... மற்றவருக்கு அடிமைப்பட்டு,கராவுள ... முதலை போன்ற உள்ளத்தை உடையவரும்பராமுக துரோகரை ... அலட்சிய சுபாவம் கொண்டவருமான பாவிகளைதராசையுற்று அடைவேனோ ... மண்ணாசை கொண்டு நான் சேரலாமோ?இராகவ இராமன் முன் ... ரகுவின் மரபிலே வந்த இராம பிரான் முன்னொருநாளில்இராவண இராவண இராவண இராஜன் ... அழுகுரலுற்றவனும், இரவின் வண்ணமாகிய கரிய நிறம் படைத்தவனும் ஆகிய இராவணன் என்ற அரசன்உட்குடன்மாய் வென்ற ... அச்சப்பட்டு மாயும்படியாக வெற்றி கொண்டஇராகன்மலர் ஆள் ... அன்பு நிறைந்தவனாகிய திருமாலின் கண்ணையே மலராகக் கொண்டருளியநிஜ புராணர் குமரா ... உண்மை வரலாற்றை உடைய சிவபெருமானின் திருக்குமரா,கலை இராஜ ... கலைகளுக்கு எல்லாம் தலைவனே,சொலவாரணர்க்கு இளையோனே ... புகழப்படும் அந்த யானைமுகத்தோனுக்குத் தம்பியே,விராகவ சுராதிப ... ஆசையே இல்லாதவனே, தேவர்களுக்கு அதிபதியே,பொராது தவிராது அடு ... போர் செய்யாமலேயே, தவறாமல், வெல்லவல்லவிராயண பராயண ... வீர வழியிலே மிக விருப்பம் உடையவனே,செருவூரா ... திருப்போரூரில் உறைபவனே,விராவிய குராவகில் ... கலந்து விளங்கும் குராமரமும், அகில் மரமும்பராரை முதிராவளர் ... பருத்த அடிமரத்துடன் நன்கு முதிர்ந்து வளர்கின்றவிராலிமலை ராஜதப் பெருமாளே. ... விராலிமலையில் வாழ்கின்ற, அரசகுணம் படைத்த பெருமாளே.
Similar songs: 571 - நிராமய புராதன (விராலிமலை)
தனாதன தனாதன தனாதன தனாதன தனாதன தனாதனத் ...... தனதான
Songs from this thalam விராலிமலை
568 - சீரான கோல கால
569 - பாதாள மாதி லோக
570 - இலாபமில்
571 - நிராமய புராதன
572 - இதமுறு விரைபுனல்
573 - உருவேறவே ஜெபித்து
574 - எதிரெதிர் கண்டோடி
575 - ஐந்து பூதமும்
576 - கரதல முங்குறி
577 - கரிபுராரி காமாரி
578 - காம அத்திரமாகி
579 - கொடாதவனை
580 - மாயா சொரூபம்
581 - மாலாசை கோபம்
582 - மேகம் எனும் குழல்
583 - மோதி இறுகி
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000