| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
நாடித் தேடித் ...... தொழுவார்பால் நாடித் தேடித் தொழுவார்பால் 363 - நாடித் தேடி (திருவானைக்கா) Songs from this thalam திருவானைக்கா
363 திருவானைக்கா திருப்புகழ் ( குருஜி இராகவன் # 444 - வாரியார் # 501 )
நாடித் தேடி
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தானத் தானத் ...... தனதான
தானத் தானத் ...... தனதான
நானத் தாகத் ...... திரிவேனோ
மாடக் கூடற் ...... பதிஞான
வாழ்வைச் சேரத் ...... தருவாயே
பாடற் காதற் ...... புரிவோனே
பாலைத் தேனொத் ...... தருள்வோனே
ஆடற் றோகைக் ...... கினியோனே
ஆனைக் காவிற் ...... பெருமாளே.
நான் நத்தாகத் திரிவேனோ
மாடக் கூடற் பதி ஞான
வாழ்வைச் சேர தருவாயே
பாடற் காதற் புரிவோனே
பாலைத் தேனொத்து அருள்வோனே
ஆடற் றோகைக்கு இனியோனே
ஆனைக் காவிற் பெருமாளே.
உன்னை விரும்பித் தேடித் தொழும் அடியார்களிடம் நான்விருப்பம் உள்ளவனாகத் திரியமாட்டேனோ? நான்மாடற்கூடல் என்ற மதுரையம்பதியில் உள்ள (துவாதசாந்த நிலையில் கூடும்) ஞானவாழ்வை அடையும்படி அருள் புரிவாயாக. தமிழிசையில் பாடினால் ஆசையோடு கேட்பவனே, பாலையும் தேனையும் போல் இனிமையாக அருள்பவனே, நடனமாடும் மயிலுக்கு இன்பம் அளிப்பவனே, திருவானைக்கா தலத்தின் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: நாடித் தேடித் தொழுவார்பால் ... உன்னை விரும்பித் தேடித்
தொழும் அடியார்களிடம்
நான் நத்தாகத் திரிவேனோ ... நான்விருப்பம் உள்ளவனாகத்
திரியமாட்டேனோ?
மாடக் கூடற் பதி ... நான்மாடற்கூடல் என்ற மதுரையம்பதியில் உள்ள
ஞான வாழ்வைச் சேர ... (துவாதசாந்த நிலையில் கூடும்)
ஞானவாழ்வை அடையும்படி
தருவாயே ... அருள் புரிவாயாக.
பாடற் காதற் புரிவோனே ... தமிழிசையில் பாடினால் ஆசையோடு
கேட்பவனே,
பாலைத் தேனொத்து அருள்வோனே ... பாலையும் தேனையும்
போல் இனிமையாக அருள்பவனே,
ஆடற் றோகைக்கு இனியோனே ... நடனமாடும் மயிலுக்கு இன்பம்
அளிப்பவனே,
ஆனைக் காவிற் பெருமாளே. ... திருவானைக்கா தலத்தின்
பெருமாளே.
தானத் தானத் ...... தனதான
தானத் தானத் ...... தனதான
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000