| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
காரணம தாக வந்து ...... புவிமீதே காரணமதாக வந்து புவிமீதே 1309 - காரணமதாக (பழமுதிர்ச்சோலை) Songs from this thalam பழமுதிர்ச்சோலை
1309 பழமுதிர்ச்சோலை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 497 - வாரியார் # 443 )
காரணமதாக
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தானதன தான தந்த ...... தனதான
காலனணு காதி சைந்து ...... கதிகாண
நாரணனும் வேதன் முன்பு ...... தெரியாத
ஞானநட மேபு ரிந்து ...... வருவாயே
ஆரமுத மான தந்தி ...... மணவாளா
ஆறுமுக மாறி ரண்டு ...... விழியோனே
சூரர்கிளை மாள வென்ற ...... கதிர்வேலா
சோலைமலை மேவி நின்ற ...... பெருமாளே.
காலனணுகாது இசைந்து கதிகாண
நாரணனும் வேதன் முன்பு தெரியாத
ஞானநடமே புரிந்து வருவாயே
ஆரமுத மான தந்தி மணவாளா
ஆறுமுக மாறி ரண்டு விழியோனே
சூரர்கிளை மாள வென்ற கதிர்வேலா
சோலைமலை மேவி நின்ற பெருமாளே. ஊழ்வினையின் காரணமாக வந்து இந்த பூமியில் பிறந்து, காலன் என்னை நெருங்காதபடிக்கு நீ மனம் பொருந்தி நான் நற்கதியை அடைய, திருமாலும் பிரம்மாவும் முன்பு கண்டறியாத ஞான நடனத்தை ஆடி வருவாயாக. நிறைந்த அமுது போல் இனிய தேவயானையின் மணவாளனே, ஆறு திருமுகங்களையும், பன்னிரண்டு கண்களையும் உடையவனே, சூரர் கூட்டங்கள் இறக்கும்படியாக வெற்றி கொண்ட ஒளிமிக்க வேலனே, பழமுதிர்ச்சோலை மலையில் மேவி விளங்கும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: காரணமதாக வந்து ... ஊழ்வினையின் காரணமாக வந்து
புவிமீதே ... இந்த பூமியில் பிறந்து,
காலனணுகாது ... காலன் என்னை நெருங்காதபடிக்கு
இசைந்து கதிகாண ... நீ மனம் பொருந்தி நான் நற்கதியை அடைய,
நாரணனும் வேதன் முன்பு தெரியாத ... திருமாலும் பிரம்மாவும்
முன்பு கண்டறியாத
ஞானநடமே புரிந்து வருவாயே ... ஞான நடனத்தை ஆடி
வருவாயாக.
ஆரமுத மான தந்தி மணவாளா ... நிறைந்த அமுது போல் இனிய
தேவயானையின் மணவாளனே,
ஆறுமுக மாறி ரண்டு விழியோனே ... ஆறு திருமுகங்களையும்,
பன்னிரண்டு கண்களையும் உடையவனே,
சூரர்கிளை மாள ... சூரர் கூட்டங்கள் இறக்கும்படியாக
வென்ற கதிர்வேலா ... வெற்றி கொண்ட ஒளிமிக்க வேலனே,
சோலைமலை மேவி நின்ற பெருமாளே. ... பழமுதிர்ச்சோலை
மலையில் மேவி விளங்கும் பெருமாளே.
தானதன தான தந்த ...... தனதான