| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி 1307 - அகரமுமாகி (பழமுதிர்ச்சோலை) Songs from this thalam பழமுதிர்ச்சோலை
1307 பழமுதிர்ச்சோலை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 494 - வாரியார் # 441 )
அகரமுமாகி
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி.....அவர் மேலாய்
இகரமும் ஆகி எவைகளும்ஆகி இனிமையும் ஆகி வருவோனே
இருனில மீதில் எளியனும் வாழ எனதுமுன் ஓடி.....வரவேணும்
மகபதி ஆகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம்.....உடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமி என ஆடு மயிலோனே
திருமலிவான பழமுதிர்ச்சோலை மலை மிசை மேவு.....பெருமாளே.
எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல எப்பொருளுக்கும் முதன்மையாகி எல்லாவற்றிற்கும் தலைவனாகி எல்லோருக்கும் மேம்பட்டவனாகி யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி பிரமன் என்னும் படைப்பவன் ஆகி திருமால் என்னும் காப்பவன் ஆகி சிவன் என்னும் அழிப்பவனாகி அம்மூவருக்கும்மேலான பொருளாகி இங்குள்ள பொருட்கள் யாவுமாகி எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி இனிமை தரும் பொருளாகி வருபவனே இந்த பெரிய பூமியில் எளியவனாகிய இந்த அடியேனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும் யாகங்களுக்குத் தலைவனாக விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்) மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும் அழகிய வடிவம் கொண்டவனே காட்டில் வசித்த வேடன் (அந்திமான்) செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற கதிர்காமம் (உன் பதியாக) உடையவனே (அதே ஒலி) என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே லக்ஷ்மிகரம் நிறைந்த பழமுதிர்ச்சோலை மலையின்மீது வீற்றிருக்கும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: அகரமும் ஆகி ... எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல
எப்பொருளுக்கும் முதன்மையாகி
அதிபனும் ஆகி ... எல்லாவற்றிற்கும் தலைவனாகி
அதிகமும் ஆகி ... எல்லோருக்கும் மேம்பட்டவனாகி
அகமாகி ... யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி
அயனென வாகி ... பிரமன் என்னும் படைப்பவன் ஆகி
அரியென வாகி ... திருமால் என்னும் காப்பவன் ஆகி
அரனென வாகி ... சிவன் என்னும் அழிப்பவனாகி
அவர் மேலாய் ... அம்மூவருக்கும்மேலான பொருளாகி
இகரமும் ஆகி ... இங்குள்ள பொருட்கள் யாவுமாகி
எவைகளும்ஆகி ... எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி
இனிமையும் ஆகி ... இனிமை தரும் பொருளாகி
வருவோனே ... வருபவனே
இருனில மீதில் ... இந்த பெரிய பூமியில்
எளியனும் வாழ ... எளியவனாகிய இந்த அடியேனும் வாழ
எனதுமுன் ஓடி வரவேணும் ... எனதுமுன் ஓடி வரவேணும்
மகபதி ஆகி ... யாகங்களுக்குத் தலைவனாக
மருவும் வலாரி ... விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்)
மகிழ் களி கூரும் ... மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும்
வடிவோனே ... அழகிய வடிவம் கொண்டவனே
வனமுறை வேடன் ... காட்டில் வசித்த வேடன் (அந்திமான்)
அருளிய பூஜை மகிழ் ... செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற
கதிர்காமம் உடையோனே ... கதிர்காமம் (உன் பதியாக)
உடையவனே
ஜெககண ஜேகு தகுதிமி தோதி திமி ... (அதே ஒலி)
என ஆடு மயிலோனே ... என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே
திருமலிவான ... லக்ஷ்மிகரம் நிறைந்த
பழமுதிர்ச்சோலை மலை மிசை ... பழமுதிர்ச்சோலை மலையின்மீது
மேவு பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000