This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
தய்யதன தானத் ...... தனதான
துள்ளுமத வேள்கைக் ...... கணையாலே தொல்லைநெடு நீலக் ...... கடலாலே மெள்ளவரு சோலைக் ...... குயிலாலே மெய்யுருகு மானைத் ...... தழுவாயே தெள்ளுதமிழ் பாடத் ...... தெளிவோனே செய்யகும ரேசத் ...... திறலோனே வள்ளல்தொழு ஞானக் ...... கழலோனே வள்ளிமண வாளப் ...... பெருமாளே.
துள்ளுமத வேள் கைக் கணையாலே
தொல்லைநெடு நீலக் கடலாலே
மெள்ளவரு சோலைக் குயிலாலே
மெய்யுருகு மானை தழுவாயே
தெள்ளுதமிழ் பாட தெளிவோனே
செய்யகும ரேச திறலோனே
வள்ளல்தொழு ஞானக் கழலோனே
வள்ளிமண வாளப் பெருமாளே.
செருக்குடன் வரும் மன்மத வேளின் கைகளிலிருந்து வரும் மலர்ப் பாணங்களினாலும், நீண்ட துன்பத்தைத் தரும் நீலநிறக் கடலாலும், மெதுவாக வந்து (தன்சோகக் குரலைக் காட்டும்) சோலையிலுள்ள குயிலினாலும், காதலால் உடல் உருகும் மான் போன்ற என் மகளை அணைத்துக் கொள்ள மாட்டாயா? இனிமையான தமிழில் பாடல்களைப் பாடவல்ல தெளிவு கொண்ட சம்பந்தப் பெருமானே, செம்மை வாய்ந்த குமரேசன் எனப் பெயர்பெற்ற பராக்கிரமசாலியே, வள்ளற் பெருமானாம் சிவபிரான் தொழுகின்ற ஞானத் திருவடிகளை உடையவனே, வள்ளிக்கு மணவாளனாம் பெருமாளே.
Audio/Video Link(s)
துள்ளுமத வேள் ... செருக்குடன் வரும் மன்மத வேளின்கைக் கணையாலே ... கைகளிலிருந்து வரும் மலர்ப் பாணங்களினாலும்,தொல்லைநெடு ... நீண்ட துன்பத்தைத் தரும்நீலக் கடலாலே ... நீலநிறக் கடலாலும்,மெள்ளவரு ... மெதுவாக வந்து (தன்சோகக் குரலைக் காட்டும்)சோலைக் குயிலாலே ... சோலையிலுள்ள குயிலினாலும்,மெய்யுருகு மானை ... காதலால் உடல் உருகும் மான் போன்ற என் மகளைதழுவாயே ... அணைத்துக் கொள்ள மாட்டாயா?தெள்ளுதமிழ் பாட ... இனிமையான தமிழில் பாடல்களைப் பாடவல்லதெளிவோனே ... தெளிவு கொண்ட சம்பந்தப் பெருமானே,செய்யகும ரேச ... செம்மை வாய்ந்த குமரேசன் எனப் பெயர்பெற்றதிறலோனே ... பராக்கிரமசாலியே,வள்ளல்தொழு ... வள்ளற் பெருமானாம் சிவபிரான் தொழுகின்றஞானக் கழலோனே ... ஞானத் திருவடிகளை உடையவனே,வள்ளிமண வாளப் பெருமாளே. ... வள்ளிக்கு மணவாளனாம் பெருமாளே.
Similar songs: 1291 - துள்ளு மதவேள் (பொதுப்பாடல்கள்)
தய்யதன தானத் ...... தனதான
Songs from this thalam பொதுப்பாடல்கள்
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000