This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
தான தத்தனா தானா தனாதன தான தத்தனா தானா தனாதன தான தத்தனா தானா தனாதன ...... தந்ததான
வேத வித்தகா சாமீ நமோநம வேல்மி குத்தமா சூரா நமோநம வீம சக்ரயூ காளா நமோநம ...... விந்துநாத வீர பத்மசீர் பாதா நமோநம நீல மிக்ககூ தாளா நமோநம மேக மொத்தமா யூரா நமோநம ...... விண்டிடாத போத மொத்தபேர் போதா நமோநம பூத மற்றுமே யானாய் நமோநம பூர ணத்துளே வாழ்வாய் நமோநம ...... துங்கமேவும் பூத ரத்தெலாம் வாழ்வாய் நமோநம ஆறி ரட்டிநீள் தோளா நமோநம பூஷ ணத்துமா மார்பா நமோநம ...... புண்டரீக மீதி ருக்குநா மாதோடு சேயிதழ் மீதி ருக்குமே ரார்மாபு லோமசை வீர மிக்கஏழ் பேர்மாதர் நீடினம் ...... நின்றுநாளும் வேத வித்தகீ வீமா விராகிணி வீறு மிக்கமா வீணா கரேமக மேரு வுற்றுவாழ் சீரே சிவாதரெ ...... யங்கராகீ ஆதி சத்திசா மாதேவி பார்வதி நீலி துத்தியார் நீணாக பூஷணி ஆயி நித்தியே கோடீர மாதவி ...... யென்றுதாழும் ஆர்யை பெற்றசீ ராளா நமோநம சூரை யட்டுநீள் பேரா நமோநம ஆர ணத்தினார் வாழ்வே நமோநம ...... தம்பிரானே.
வேத வித்தகா சாமீ நமோநம
வேல் மிகுத்த மாசூரா நமோநம
வீம சக்ரயூ காளா நமோநம
விந்துநாத
வீர பத்மசீர் பாதா நமோநம
நீல மிக்ககூ தாளா நமோநம
மேகம் ஒத்த மாயூரா நமோநம
விண்டிடாத போதம் ஒத்தபேர் போதா நமோநம
பூத மற்றுமே யானாய் நமோநம
பூர ணத்துளே வாழ்வாய் நமோநம
துங்கமேவும் பூதரத்தெலாம் வாழ்வாய் நமோநம
ஆறி ரட்டிநீள் தோளா நமோநம
பூஷணத்துமா மார்பா நமோநம
புண்டரீக மீதிருக்கு நா மாதோடு
வேதங்கள் உணர்ந்த பேரறிவாளனே, ஸ்வாமியே, போற்றி, போற்றி வேலினைச் சிறப்பாக ஏந்தும் மஹா சூரனே, போற்றி, போற்றி அச்சம் தரும் சக்ரவியூகத்தை போரிலே எடுப்பவனே, போற்றி, போற்றி ஆவுடையாகவும் லிங்கமாகவும் சிவசக்தி உருவமாக விளங்குபவனே, வீரனே, தாமரை போன்ற அழகிய திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி நீல நிறத்தில் மிகுந்த கூதளப்பூமாலைகள் அணிந்தவனே, போற்றி, போற்றி மேக நிறம் கொண்டுள்ள மயில் வாகனனே, போற்றி, போற்றி சொல்வதற்கு அரிய ஞான நிலையை அடைந்தவர்களின் ஞானப் பொருளே, போற்றி, போற்றி பஞ்ச பூதங்களாயும் பிறவாயும் ஆனவனே, போற்றி, போற்றி பரிபூரணப் பொருளாக வாழ்பவனே, போற்றி, போற்றி பரிசுத்தமான மலைகளில் எல்லாம் வாழ்பவனே, போற்றி, போற்றி பன்னிரண்டு நீண்ட புஜங்களை உடையவனே, போற்றி, போற்றி ஆபரணங்களை அணிந்த அழகிய மார்பனே, போற்றி, போற்றி வெள்ளைத் தாமரையின் மீது வீற்றிருக்கும்
Audio/Video Link(s) வேத வித்தகா சாமீ நமோநம ... வேதங்கள் உணர்ந்த பேரறிவாளனே, ஸ்வாமியே, போற்றி, போற்றிவேல் மிகுத்த மாசூரா நமோநம ... வேலினைச் சிறப்பாக ஏந்தும் மஹா சூரனே, போற்றி, போற்றிவீம சக்ரயூ காளா நமோநம ... அச்சம் தரும் சக்ரவியூகத்தை போரிலே எடுப்பவனே, போற்றி, போற்றிவிந்துநாத ... ஆவுடையாகவும் லிங்கமாகவும் சிவசக்தி உருவமாக விளங்குபவனே,வீர பத்மசீர் பாதா நமோநம ... வீரனே, தாமரை போன்ற அழகிய திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றிநீல மிக்ககூ தாளா நமோநம ... நீல நிறத்தில் மிகுந்த கூதளப்பூமாலைகள் அணிந்தவனே, போற்றி, போற்றிமேகம் ஒத்த மாயூரா நமோநம ... மேக நிறம் கொண்டுள்ள மயில் வாகனனே, போற்றி, போற்றிவிண்டிடாத போதம் ஒத்தபேர் போதா நமோநம ... சொல்வதற்கு அரிய ஞான நிலையை அடைந்தவர்களின் ஞானப் பொருளே, போற்றி, போற்றிபூத மற்றுமே யானாய் நமோநம ... பஞ்ச பூதங்களாயும் பிறவாயும் ஆனவனே, போற்றி, போற்றிபூர ணத்துளே வாழ்வாய் நமோநம ... பரிபூரணப் பொருளாக வாழ்பவனே, போற்றி, போற்றிதுங்கமேவும் பூதரத்தெலாம் வாழ்வாய் நமோநம ... பரிசுத்தமான மலைகளில் எல்லாம் வாழ்பவனே, போற்றி, போற்றிஆறி ரட்டிநீள் தோளா நமோநம ... பன்னிரண்டு நீண்ட புஜங்களை உடையவனே, போற்றி, போற்றிபூஷணத்துமா மார்பா நமோநம ... ஆபரணங்களை அணிந்த அழகிய மார்பனே, போற்றி, போற்றிபுண்டரீக மீதிருக்கு நா மாதோடு ... வெள்ளைத் தாமரையின் மீது வீற்றிருக்கும்
Similar songs: 994 - வேத வித்தகா (பொதுப்பாடல்கள்)
தான தத்தனா தானா தனாதன தான தத்தனா தானா தனாதன தான தத்தனா தானா தனாதன ...... தந்ததான
Songs from this thalam பொதுப்பாடல்கள்