சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
932   திருப்பாண்டிக்கொடுமுடி திருப்புகழ் ( குருஜி இராகவன் # 251 - வாரியார் # 942 )  

இருவினைப் பிறவி

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதனத் தனனத் ...... தனதான

இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
     இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே
திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே
     திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ
அரியயற் கறிதற் ...... கரியானே
     அடியவர்க் கெளியற் ...... புதநேயா
குருவெனச் சிவனுக் ...... கருள்போதா
     கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே.

இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி
இடர்கள்பட்டு அலையப் புகுதாதே
திருவருட் கருணைப் ப்ரபையாலே
திரமெனக் கதியைப் பெறுவேனோ
அரியயற்கு அறிதற்கு அரியானே
அடியவர்க்கு எளிய அற்புதநேயா
குருவெனச் சிவனுக்கு அருள்போதா
கொடுமுடிக் குமரப் பெருமாளே.

நல்வினை, தீவினை இரண்டின் காரணமாக ஏற்படும் பிறவி என்ற கடலில் மூழ்கி, துயரங்கள் ஏற்பட்டு அலைந்து திரியப் புகாமல், உனது திருவருளாம் கருணையென்னும் ஒளியாலே உறுதியான வகையில் நான் நற்கதியைப் பெறமாட்டேனோ? திருமாலும் பிரம்மாவும் அறிவதற்கு அரியவனே, உன் அடியவர்க்கு எளிதாகக் கிட்டும் அற்புதமான நண்பனே, குருமூர்த்தியாக சிவபிரானுக்கு அருளிய ஞானாசிரியனே, கொடுமுடித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி ... நல்வினை, தீவினை
இரண்டின் காரணமாக ஏற்படும் பிறவி என்ற கடலில் மூழ்கி,
இடர்கள்பட்டு அலையப் புகுதாதே ... துயரங்கள் ஏற்பட்டு
அலைந்து திரியப் புகாமல்,
திருவருட் கருணைப் ப்ரபையாலே ... உனது திருவருளாம்
கருணையென்னும் ஒளியாலே
திரமெனக் கதியைப் பெறுவேனோ ... உறுதியான வகையில்
நான் நற்கதியைப் பெறமாட்டேனோ?
அரியயற்கு அறிதற்கு அரியானே ... திருமாலும் பிரம்மாவும்
அறிவதற்கு அரியவனே,
அடியவர்க்கு எளிய அற்புதநேயா ... உன் அடியவர்க்கு எளிதாகக்
கிட்டும் அற்புதமான நண்பனே,
குருவெனச் சிவனுக்கு அருள்போதா ... குருமூர்த்தியாக
சிவபிரானுக்கு அருளிய ஞானாசிரியனே,
கொடுமுடிக் குமரப் பெருமாளே. ... கொடுமுடித் தலத்தில்
வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs:

932 - இருவினைப் பிறவி (திருப்பாண்டிக்கொடுமுடி)

தனதனத் தனனத் ...... தனதான

Songs from this thalam திருப்பாண்டிக்கொடுமுடி

932 - இருவினைப் பிறவி

933 - காந்தட் கரவளை
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000