| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
883 - அஞ்சன வேல்விழி மடமாதர் (தஞ்சை) Songs from this thalam தஞ்சை
883 தஞ்சை திருப்புகழ் ( - வாரியார் # 895 )
அஞ்சன வேல்விழி மடமாதர்
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தந்தன தானன ...... தனதான
அஞ்சன வேல்விழி ...... மடமாதர்
அங்கவர் மாயையி ...... லலைவேனோ
விஞ்சுறு மாவுன ...... தடிசேர
விம்பம தாயரு ...... ளருளாதோ
நஞ்சமு தாவுணு ...... மரனார்தம்
நல்கும ராவுமை ...... யருள்பாலா
தஞ்சென வாமடி ...... யவர்வாழத்
தஞ்சையில் மேவிய ...... பெருமாளே.
அஞ்சனம் வேல் விழி மட மாதர் அங்கு அவர் மாயையில்
அலைவேனோ
விஞ்சுறுமா(று) உனது அடி சேர விம்பம் அதாய் அருள்
அருளாதோ
நஞ்சு அமுதாய் உ(ண்)ணும் அரனார் தம் நல் குமரா உமை
அருள் பாலா
தஞ்ச(ம்) எனவாம் அடியவர் வாழ தஞ்சையில் மேவிய
பெருமாளே. மை பூசிய வேல் போன்ற கண்கள் உள்ள அழகிய விலைமாதர்களிடத்தில் மாயை மயக்கத்தில் அலைச்சல் உறுவேனோ? நான் மேம்பட்டு விளங்குமாறு உனது திருவடியில் சேர்வதற்கு ஒளி உருவமாக உனது திருவருள் எனக்கு அருளக் கூடாதோ? விஷத்தை அமுதமாக உண்ட சிவபெருமானுடைய நல்ல மகனே, உமாதேவி பெற்றருளிய பாலனே, சரணம் நீயே எனக் கொண்டுள்ள அடியார்கள் வாழ தஞ்சையில் வீற்றிருக்கும் பெருமாளே. Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link அஞ்சனம் வேல் விழி மட மாதர் அங்கு அவர் மாயையில்
அலைவேனோ ... மை பூசிய வேல் போன்ற கண்கள் உள்ள அழகிய
விலைமாதர்களிடத்தில் மாயை மயக்கத்தில் அலைச்சல் உறுவேனோ?
விஞ்சுறுமா(று) உனது அடி சேர விம்பம் அதாய் அருள்
அருளாதோ ... நான் மேம்பட்டு விளங்குமாறு உனது திருவடியில்
சேர்வதற்கு ஒளி உருவமாக உனது திருவருள் எனக்கு அருளக்
கூடாதோ?
நஞ்சு அமுதாய் உ(ண்)ணும் அரனார் தம் நல் குமரா உமை
அருள் பாலா ... விஷத்தை அமுதமாக உண்ட சிவபெருமானுடைய
நல்ல மகனே, உமாதேவி பெற்றருளிய பாலனே,
தஞ்ச(ம்) எனவாம் அடியவர் வாழ தஞ்சையில் மேவிய
பெருமாளே. ... சரணம் நீயே எனக் கொண்டுள்ள அடியார்கள் வாழ
தஞ்சையில் வீற்றிருக்கும் பெருமாளே.
1
Similar songs:
தந்தன தானன ...... தனதான
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:48 +0000