சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
689   திருமயிலை திருப்புகழ் ( - வாரியார் # 697 )  

அயில் ஒத்து எழும்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனனத் தனதன ...... தனதான

அயிலொத் தெழுமிரு ...... விழியாலே
அமுதொத் திடுமரு ...... மொழியாலே
சயிலத் தெழுதுணை ...... முலையாலே
தடையுற் றடியனு ...... மடிவேனோ
கயிலைப் பதியரன் ...... முருகோனே
கடலக் கரைதிரை ...... யருகேசூழ்
மயிலைப் பதிதனி ...... லுறைவோனே
மகிமைக் கடியவர் ...... பெருமாளே.

அயில் ஒத்து எழும் இரு விழியாலே
     அமுது ஒத்திடும் அரு.....மொழியாலே
சயிலத்து எழு துணை முலையாலே
     தடையுற்று அடியனு(ம்).....மடிவேனோ
கயிலைப் பதி அரன் முருகோனே
     கடல் அக் கரை திரை.....யருகே சூழ்
மயிலைப் பதிதனில் உறைவோனே
     மகிமைக்கு அடியவர்.....பெருமாளே.

வேலை நிகர்த்து எழுந்துள்ள இரண்டு கண்களாலும், அமுதத்துக்கு ஒப்பான அருமையான பேச்சினாலும், மலைக்கு இணையாக எழுந்துள்ள இரு மார்பகங்களாலும், வாழ்க்கை தடைப்பட்டு, அடியேனும் இறந்து படுவேனோ? கயிலைப்பதியில் வீற்றிருக்கும் சிவபிரானின் குழந்தை முருகனே, கடலின் கரையும், அலையும் அருகிலே சூழ்ந்திருக்கும் திருமயிலைப்பதியில் வீற்றிருப்பவனே, பெருமை பொருந்திய அடியவர்களின் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
அயில் ஒத்து எழும் இரு விழியாலே ... வேலை நிகர்த்து எழுந்துள்ள
இரண்டு கண்களாலும்,
அமுது ஒத்திடும் அரு மொழியாலே ... அமுதத்துக்கு ஒப்பான
அருமையான பேச்சினாலும்,
சயிலத்து எழு துணை முலையாலே ... மலைக்கு இணையாக
எழுந்துள்ள இரு மார்பகங்களாலும்,
தடையுற்று அடியனு(ம்) மடிவேனோ ... வாழ்க்கை தடைப்பட்டு,
அடியேனும் இறந்து படுவேனோ?
கயிலைப் பதி அரன் முருகோனே ... கயிலைப்பதியில் வீற்றிருக்கும்
சிவபிரானின் குழந்தை முருகனே,
கடல் அக் கரை திரையருகே சூழ் ... கடலின் கரையும், அலையும்
அருகிலே சூழ்ந்திருக்கும்
மயிலைப் பதிதனில் உறைவோனே ... திருமயிலைப்பதியில்
வீற்றிருப்பவனே,
மகிமைக்கு அடியவர் பெருமாளே. ... பெருமை பொருந்திய
அடியவர்களின் பெருமாளே.
Similar songs:

689 - அயில் ஒத்து எழும் (திருமயிலை)

தனனத் தனதன ...... தனதான

Songs from this thalam திருமயிலை

688 - அமரும் அமரர்

689 - அயில் ஒத்து எழும்

690 - அறமிலா அதி

691 - இகல வருதிரை

692 - இணையது இலதாம்

693 - களபம் மணி ஆரம்

694 - கடிய வேக

695 - திரைவார் கடல்

696 - நிரைதரு மணியணி

697 - வரும் மயில் ஒத்தவர்
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000