மின் இடை கலாப(ம்) தொங்கல் ஒடு
அன்ன மயில் நாண விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து ஒரு தெரு மீதே மெள்ளவும் உலாவி
இங்கித சொல் குயில் குலாவி நண்பொடு வில் இயல் புரூர கண் கணை தொடு மோக கன்னியர்கள் போல்
இதம் பெறு மின் அணி க(ல்)லார(ம்) கொங்கையர் கண்ணியில் விழாமல்
அன்பொடு பத ஞான கண்ணியில் உ(ள்)ளாக சுந்தர பொன் இயல் பதாரமும் கொ(ண்)டு கண்ணுறு வராமல் இன்பமொடு எனை ஆள்வாய்
சென்னியில் உடாடு இளம் பிறை வன்னியும் அராவு(ம்) கொன்றையர் செம் மணி குலாவும் எந்தையர் குரு நாதா
செம் முக இராவணன் தலை விண்ணுறவில் வாளியும் தொடு தெய்விக பொன் ஆழி வண் கையன் மருகோனே
மின்னல் போன்ற இடையில் கலாபம் என்னும் இடை அணியும் ஆடையின் முந்தானையும் விளங்க, அன்னமும், மயிலும் வெட்கம் அடையும்படியான (சாயலும், நடை அழகும்) அவைகளின் மேம்பட்ட மாதர் கூட்டம் ஒருமித்து ஒரு தெருவிலே மெதுவாக உலாவி, இன்பகரமான சொற்களை குயில் போலக் கொஞ்சிப்பேசி விரைவில் நட்பு பாராட்டி, வில்லைப் போன்ற புருவமும், கண்கள் அம்பு போலவும் கொண்டு காமம் மிக்க பெண்கள் போல, மின்னல் போல் ஒளி வீசும் அணி கலன்களையும், செங்கழு நீர் மாலையையும் பூண்டுள்ள இன்ப நலம் பெறுகின்ற மார்பினை உடையவர்களாகிய விலைமாதர்களின் வலையில் நான் அகப்படாமல், அன்புடன் ஞான பதமான வலையினுள் அகப்படும்படி, அழகிய பொலிவு நிறைந்த தாமரைத் திருவடிகளையும் கொடுத்து, கண் திருஷ்டி வராதபடி இனிமையுடன் என்னை ஆண்டருளுக. தலையில் ஊடுருவும் இளம் பிறையையும், வன்னியையும், பாம்பையும், கொன்றை மலரையும் கொண்டவர், சிவந்த ரத்தினங்கள் விளங்கும் சடையர் எனது தந்தையாகிய சிவபெருமானின் குரு நாதனே, (ரத்தத்தால்) செந்நிறம் காட்டிய ராவணனின் தலை ஆகாயத்தில் தெறித்து விழும்படி வில்லினின்றும் அம்பைச் செலுத்தியவனும், தெய்விக பொன் மயமான (சுதர்
மின் இடை கலாப(ம்) தொங்கல் ஒடு ... மின்னல் போன்ற இடையில் கலாபம் என்னும் இடை அணியும் ஆடையின் முந்தானையும் விளங்க, அன்ன மயில் நாண விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து ஒரு தெரு மீதே மெள்ளவும் உலாவி ... அன்னமும், மயிலும் வெட்கம் அடையும்படியான (சாயலும், நடை அழகும்) அவைகளின் மேம்பட்ட மாதர் கூட்டம் ஒருமித்து ஒரு தெருவிலே மெதுவாக உலாவி, இங்கித சொல் குயில் குலாவி நண்பொடு வில் இயல் புரூர கண் கணை தொடு மோக கன்னியர்கள் போல் ... இன்பகரமான சொற்களை குயில் போலக் கொஞ்சிப்பேசி விரைவில் நட்பு பாராட்டி, வில்லைப் போன்ற புருவமும், கண்கள் அம்பு போலவும் கொண்டு காமம் மிக்க பெண்கள் போல, இதம் பெறு மின் அணி க(ல்)லார(ம்) கொங்கையர் கண்ணியில் விழாமல் ... மின்னல் போல் ஒளி வீசும் அணி கலன்களையும், செங்கழு நீர் மாலையையும் பூண்டுள்ள இன்ப நலம் பெறுகின்ற மார்பினை உடையவர்களாகிய விலைமாதர்களின் வலையில் நான் அகப்படாமல், அன்பொடு பத ஞான கண்ணியில் உ(ள்)ளாக சுந்தர பொன் இயல் பதாரமும் கொ(ண்)டு கண்ணுறு வராமல் இன்பமொடு எனை ஆள்வாய் ... அன்புடன் ஞான பதமான வலையினுள் அகப்படும்படி, அழகிய பொலிவு நிறைந்த தாமரைத் திருவடிகளையும் கொடுத்து, கண் திருஷ்டி வராதபடி இனிமையுடன் என்னை ஆண்டருளுக. சென்னியில் உடாடு இளம் பிறை வன்னியும் அராவு(ம்) கொன்றையர் செம் மணி குலாவும் எந்தையர் குரு நாதா ... தலையில் ஊடுருவும் இளம் பிறையையும், வன்னியையும், பாம்பையும், கொன்றை மலரையும் கொண்டவர், சிவந்த ரத்தினங்கள் விளங்கும் சடையர் எனது தந்தையாகிய சிவபெருமானின் குரு நாதனே, செம் முக இராவணன் தலை விண்ணுறவில் வாளியும் தொடு தெய்விக பொன் ஆழி வண் கையன் மருகோனே ... (ரத்தத்தால்) செந்நிறம் காட்டிய ராவணனின் தலை ஆகாயத்தில் தெறித்து விழும்படி வில்லினின்றும் அம்பைச் செலுத்தியவனும், தெய்விக பொன் மயமான (சுதர்