| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
பகலிரவினிற் ...... றடுமாறா பகலிரவினில் தடுமாறா 557 - பகலிரவினில் (சென்னிமலை) Songs from this thalam சென்னிமலை
557 சென்னிமலை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 174 - வாரியார் # 338 )
பகலிரவினில்
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனதனதனத் ...... தனதான
தனதனதனத் ...... தனதான
பதிகுருவெனத் ...... தெளிபோத
ரகசியமுரைத் ...... தநுபூதி
ரதநிலைதனைத் ...... தருவாயே
இகபரமதற் ...... கிறையோனே
இயலிசையின்முத் ...... தமிழோனே
சகசிரகிரிப் ...... பதிவேளே
சரவணபவப் ...... பெருமாளே.
பதிகுருவெனத் தெளிபோத
ரகசியமுரைத்து அநுபூதி
ரதநிலைதனைத் தருவாயே
இகபரமதற்கு இறையோனே
இயலிசையின் முத்தமிழோனே
சகசிரகிரிப் பதிவேளே
சரவணபவப் பெருமாளே.
நினைவு, மறப்பு என்ற நிலைகளிலே தடுமாறாது, முருகனே குருநாதன் என்று தெளிகின்ற ஞானத்தின் பரம ரகசியத்தை அடியேனுக்கு உபதேசித்து, ஒன்றுபடும் ரசமான பேரின்ப நிலையினைத் தந்தருள்வாயாக. இம்மைக்கும் மறுமைக்கும் தலைவனாக விளங்குபவனே, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் உரியவனே, இவ்வுலகில் மேலான திருச்சிரா மலையின் செவ்வேளே, சரவணபவப் பரம்பொருளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: பகலிரவினில் தடுமாறா ... நினைவு, மறப்பு என்ற நிலைகளிலே
தடுமாறாது,
பதிகுருவெனத் தெளிபோத ... முருகனே குருநாதன் என்று
தெளிகின்ற ஞானத்தின்
ரகசியமுரைத்து ... பரம ரகசியத்தை அடியேனுக்கு உபதேசித்து,
அநுபூதி ரதநிலைதனைத் தருவாயே ... ஒன்றுபடும் ரசமான
பேரின்ப நிலையினைத் தந்தருள்வாயாக.
இகபரமதற்கு இறையோனே ... இம்மைக்கும் மறுமைக்கும்
தலைவனாக விளங்குபவனே,
இயலிசையின் முத்தமிழோனே ... இயல், இசை, நாடகம் என்ற
முத்தமிழுக்கும் உரியவனே,
சகசிரகிரிப் பதிவேளே ... இவ்வுலகில் மேலான திருச்சிரா
மலையின் செவ்வேளே,
சரவணபவப் பெருமாளே. ... சரவணபவப் பரம்பொருளே.
தனதனதனத் ...... தனதான
தனதனதனத் ...... தனதான
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000