![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
இருவினையின் மதிம யங்கித் ...... திரியாதே இருவினையின் மதிம யங்கி திரியாதே 451 - இருவினையின் மதி (சிதம்பரம்) Songs from this thalam சிதம்பரம் 515 - பரமகுரு நாத
451 சிதம்பரம் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 475 - வாரியார் # 619 )
இருவினையின் மதி
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனதனன தனன தந்தத் ...... தனதானா
தனதனன தனன தந்தத் ...... தனதானா
எழுநரகி லுழலு நெஞ்சுற் ...... றலையாதே
பரமகுரு அருள்நி னைந்திட் ...... டுணர்வாலே
பரவுதரி சனையை யென்றெற் ...... கருள்வாயே
தெரிதமிழை யுதவு சங்கப் ...... புலவோனே
சிவனருளு முருக செம்பொற் ...... கழலோனே
கருணைநெறி புரியு மன்பர்க் ...... கெளியோனே
கனகசபை மருவு கந்தப் ...... பெருமாளே.
எழுநரகில் உழலும் நெஞ்சுற்று.....அலையாதே
பரமகுரு அருள்நினைந்திட்டு உணர்வாலே
பரவுதரி சனையை என்று எற்கு.....அருள்வாயே
தெரிதமிழை உதவு சங்கப் புலவோனே
சிவனருளு முருக செம்பொற்.....கழலோனே
கருணைநெறி புரியும் அன்பர்க் கெளியோனே
கனகசபை மருவு கந்தப்.....பெருமாளே.
நல்வினை, தீவினை என்ற இரண்டு வினைகளினால் என்னறிவு மயக்கமடைந்து அலைந்து திரியாமல், ஏழு நரகங்களிலும் கலங்கக்கூடிய நெஞ்சத்தைப் படைத்து நான் அலையாமல், சிறந்த குருவாகிய உன் அருளை நினைவில் வைத்து, ஞானத் தெளிவு பெற்று, போற்றுதற்குரிய உன் தரிசனக் காட்சியை என்றைக்கு எனக்கு அருளப்போகிறாய்? யாவரும் தெரிந்து மகிழும்படி தமிழை ஆராய்ந்து உதவிய சங்கப் புலவனாக வந்தவனே, சிவபெருமான் பெற்றருளிய முருகனே, செம்பொன்னாலான வீரக் கழலை அணிந்தவனே, அருள் நெறியை அனுஷ்டிக்கும் உன் அன்பர்க்கு எளிமையானவனே, கனகசபையில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: இருவினையின் ... நல்வினை, தீவினை என்ற இரண்டு
வினைகளினால்
மதிம யங்கி ... என்னறிவு மயக்கமடைந்து
திரியாதே ... அலைந்து திரியாமல்,
எழுநரகில் உழலும் ... ஏழு நரகங்களிலும் கலங்கக்கூடிய
நெஞ்சுற்று அலையாதே ... நெஞ்சத்தைப் படைத்து நான்
அலையாமல்,
பரமகுரு அருள்நினைந்திட்டு ... சிறந்த குருவாகிய உன்
அருளை நினைவில் வைத்து,
உணர்வாலே ... ஞானத் தெளிவு பெற்று,
பரவுதரி சனையை ... போற்றுதற்குரிய உன் தரிசனக் காட்சியை
என்று எற்கு அருள்வாயே ... என்றைக்கு எனக்கு
அருளப்போகிறாய்?
தெரிதமிழை ... யாவரும் தெரிந்து மகிழும்படி தமிழை
உதவு சங்கப் புலவோனே ... ஆராய்ந்து உதவிய சங்கப்
புலவனாக வந்தவனே,
சிவனருளு முருக ... சிவபெருமான் பெற்றருளிய முருகனே,
செம்பொற் கழலோனே ... செம்பொன்னாலான வீரக் கழலை
அணிந்தவனே,
கருணைநெறி புரியும் ... அருள் நெறியை அனுஷ்டிக்கும்
அன்பர்க் கெளியோனே ... உன் அன்பர்க்கு எளிமையானவனே,
கனகசபை மருவு ... கனகசபையில் வீற்றிருக்கும்
கந்தப் பெருமாளே. ... கந்தப் பெருமாளே.
தனதனன தனன தந்தத் ...... தனதானா
தனதனன தனன தந்தத் ...... தனதானா
This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this
WhatsApp Group