சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
447   திருக்காளத்தி திருப்புகழ் ( குருஜி இராகவன் # 472 - வாரியார் # 593 )  

சிரத்தானத்தி

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனத்தா தத்தத் ...... தனதான
     தனத்தா தத்தத் ...... தனதான

சிரத்தா னத்திற் ...... பணியாதே
     செகத்தோர் பற்றைக் ...... குறியாதே
வருத்தா மற்றொப் ...... பிலதான
     மலர்த்தாள் வைத்தெத் ...... தனையாள்வாய்
நிருத்தா கர்த்தத் ...... துவநேசா
     நினைத்தார் சித்தத் ...... துறைவோனே
திருத்தாள் முத்தர்க் ...... கருள்வோனே
     திருக்கா ளத்திப் ...... பெருமாளே.

சிரத்தா னத்திற்பணியாதே
     செகத்தோர் பற்றைக்.....குறியாதே
வருத்தா மற்றொப்பிலதான
     மலர்த்தாள் வைத்து எத்தனை.....ஆள்வாய்
நிருத்தா கர்த்தத துவநேச
     நினைத்தார் சித்தத்து.....உறைவோனே
திருத்தாள் முத்தர்க்கு அருள்வோனே
     திருக்கா ளத்திப்.....பெருமாளே.

தலையைக் கொண்டு உன்னைப் பணியாமல் இருக்கும் யான் உலகத்தோர்தம் பாசங்களில் நோக்கம் செலுத்தாமல் இருக்கும்படியாக என்னை வருத்தி, தமக்கு வேறு நிகர் இல்லாத மலர் போன்ற உன் திருவடிகளில் சேர்த்து, ஏமாற்றுக்காரனாகிய என்னை ஆண்டருள்வாயாக. நடனம் ஆட வல்லவனே, தலைமை ஸ்தானம் வகிக்கும் நேசனே, உன்னை நினைப்பவர்களது சித்தத்தில் வீற்றிருப்பவனே, உன் திருவடிகளை ஜீவன் முக்தர்களுக்கு தந்தருள்பவனே, திருக்காளத்தியில் உள்ள பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
சிரத்தா னத்திற் பணியாதே ... தலையைக் கொண்டு உன்னைப்
பணியாமல் இருக்கும் யான்
செகத்தோர் பற்றைக் குறியாதே ... உலகத்தோர்தம் பாசங்களில்
நோக்கம் செலுத்தாமல் இருக்கும்படியாக
வருத்தா ... என்னை வருத்தி,
மற்றொப்பிலதான ... தமக்கு வேறு நிகர் இல்லாத
மலர்த்தாள் வைத்து ... மலர் போன்ற உன் திருவடிகளில் சேர்த்து,
எத்தனை ... ஏமாற்றுக்காரனாகிய என்னை
ஆள்வாய் ... ஆண்டருள்வாயாக.
நிருத்தா ... நடனம் ஆட வல்லவனே,
கர்த்தததுவ நேச ... தலைமை ஸ்தானம் வகிக்கும் நேசனே,
நினைத்தார் சித்தத்து ... உன்னை நினைப்பவர்களது சித்தத்தில்
உறைவோனே ... வீற்றிருப்பவனே,
திருத்தாள் முத்தர்க்கு ... உன் திருவடிகளை ஜீவன் முக்தர்களுக்கு
அருள்வோனே ... தந்தருள்பவனே,
திருக்கா ளத்திப் பெருமாளே. ... திருக்காளத்தியில் உள்ள
பெருமாளே.
Similar songs:

447 - சிரத்தானத்தி (திருக்காளத்தி)

தனத்தா தத்தத் ...... தனதான
     தனத்தா தத்தத் ...... தனதான

Songs from this thalam திருக்காளத்தி

446 - சரக்கு ஏறி இத்த

447 - சிரத்தானத்தி

448 - பங்கயனார்
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000