This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
தனனா தனனா தனனா தனனா தனனா தனனா ...... தனதான
சிவமா துடனே அநுபோ கமதாய் சிவஞா னமுதே ...... பசியாறித் திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய் திசைலோ கமெலா ...... மநுபோகி இவனே யெனமா லயனோ டமரோ ரிளையோ னெனவே ...... மறையோத இறையோ னிடமாய் விளையா டுகவே யியல்வே லுடன்மா ...... அருள்வாயே தவலோ கமெலா முறையோ வெனவே தழல்வேல் கொடுபோ ...... யசுராரைத் தலைதூள் படஏழ் கடல்தூள் படமா தவம்வாழ் வுறவே ...... விடுவோனே கவர்பூ வடிவாள் குறமா துடன்மால் கடனா மெனவே ...... அணைமார்பா கடையேன் மிடிதூள் படநோய் விடவே கனல்மால் வரைசேர் ...... பெருமாளே.
சிவமா துடனே அநுபோ கமதாய்
சிவஞா னமுதே பசியாறி
திகழ்வோ டிருவோர் ஒருரூபமதாய்
திசைலோ கமெலாம் அநுபோகி
இவனே யெனமா லயனோ டமரோர்
இளையோ னெனவே மறையோத
இறையோ னிடமாய் விளையா டுகவே
இயல்வே லுடன்மா அருள்வாயே
தவலோ கமெலாம் முறையோ வெனவே
தழல்வேல் கொடுபோய் அசுராரைத்
தலைதூள் பட ஏழ் கடல்தூள் பட
மாதவம்வாழ் வுறவே விடுவோனே
கவர்பூ வடிவாள் குறமா துடன் மால்
கடனா மெனவே அணைமார்பா
கடையேன் மிடிதூள் பட நோய் விடவே
கனல்மால் வரைசேர் பெருமாளே.
சிவம் என்கின்ற தலைவியுடன் இன்ப நுகர்ச்சி கொண்டவனாக, சிவஞானம் என்ற அமுதத்தை உண்டு அதனால் அறிவுப் பசி தீர்ந்து, விளங்கும் தலைவன் - தலைவி என்ற ஈருருவமும் ஒரே உருவமாய் எட்டுத் திசையிலுள்ளவர் சுகித்து உணர்பவன் இவன்தான் என்று திருமால், பிரமன், தேவர்கள் அனைவரும் கூறி, இவன் இளையவன் (முருகன்) என வியந்து கூற, வேதமும் அவ்வாறே என்று ஆமோதித்துக் கூற, சிவபிரானிடத்தில் வேண்டி, யான் (உன்னைப் போல்) விளையாடுவதற்காக அழகிய வேலும் மயிலும் தந்தருள்வாயாக. மிகவும் உலகங்கள் யாவும் இது முறையாகுமா என்று ஓலமிட, நெருப்பை வீசும் வேலுடன் சென்று அசுரர்களின் தலைகள் பொடிபடும்படி, ஏழு கடல்களும் தூள்படும்படி, சிறந்த தவத்தினர் வாழ்வுறுமாறு அந்த வேலைச் செலுத்தியவனே, மனம் கவரும் மலரின் அழகுடையவளும், குறப்பெண்ணும் ஆகிய வள்ளியிடம் ஆசை கொள்வது உன் கடமை என்று அவளை அணைந்த மார்பனே, கடைப்பட்டவனாகிய என் துன்பம் தூள்படவும், என் நோய் தொலையவும் (அருளி), அக்கினிப் பெருமலையாம் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
Audio/Video Link(s)
சிவமா துடனே ... சிவம் என்கின்ற தலைவியுடன்அநுபோ கமதாய் ... இன்ப நுகர்ச்சி கொண்டவனாக,சிவஞா னமுதே ... சிவஞானம் என்ற அமுதத்தை உண்டுபசியாறி ... அதனால் அறிவுப் பசி தீர்ந்து,திகழ்வோ டிருவோர் ... விளங்கும் 'தலைவன் - தலைவி' என்ற ஈருருவமும்ஒருரூபமதாய் ... ஒரே உருவமாய்திசைலோ கமெலாம் அநுபோகி ... எட்டுத் திசையிலுள்ளவர் சுகித்து உணர்பவன்இவனே யெனமா லயனோ டமரோர் ... இவன்தான் என்று திருமால், பிரமன், தேவர்கள் அனைவரும் கூறி,இளையோ னெனவே ... இவன் இளையவன் (முருகன்) என வியந்து கூற,மறையோத ... வேதமும் அவ்வாறே என்று ஆமோதித்துக் கூற,இறையோ னிடமாய் ... சிவபிரானிடத்தில் வேண்டி,விளையா டுகவே ... யான் (உன்னைப் போல்) விளையாடுவதற்காகஇயல்வே லுடன்மா அருள்வாயே ... அழகிய வேலும் மயிலும் தந்தருள்வாயாக.தவலோ கமெலாம் ... மிகவும் உலகங்கள் யாவும்முறையோ வெனவே ... இது முறையாகுமா என்று ஓலமிட,தழல்வேல் கொடுபோய் ... நெருப்பை வீசும் வேலுடன் சென்றுஅசுராரைத் தலைதூள் பட ... அசுரர்களின் தலைகள் பொடிபடும்படி,ஏழ் கடல்தூள் பட ... ஏழு கடல்களும் தூள்படும்படி,மாதவம்வாழ் வுறவே ... சிறந்த தவத்தினர் வாழ்வுறுமாறுவிடுவோனே ... அந்த வேலைச் செலுத்தியவனே,கவர்பூ வடிவாள் ... மனம் கவரும் மலரின் அழகுடையவளும்,குறமா துடன் ... குறப்பெண்ணும் ஆகிய வள்ளியிடம்மால் கடனா மெனவே ... ஆசை கொள்வது உன் கடமை என்றுஅணைமார்பா ... அவளை அணைந்த மார்பனே,கடையேன் மிடிதூள் பட ... கடைப்பட்டவனாகிய என் துன்பம் தூள்படவும்,நோய் விடவே ... என் நோய் தொலையவும் (அருளி),கனல்மால் வரைசேர் பெருமாளே. ... அக்கினிப் பெருமலையாம் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs: 421 - சிவமாதுடனே (திருவருணை)
தனனா தனனா தனனா தனனா தனனா தனனா ...... தனதான
830 - விழுதாதெனவே (நாகப்பட்டினம்)
தனனா தனனா தனனா தனனா தனனா தனனா ...... தனதான
847 - எருவாய் கருவாய் (திருவீழிமிழலை)
தனனா தனனா தனனா தனனா தனனா தனனா ...... தனதான
Songs from this thalam திருவருணை
847 - எருவாய் கருவாய்
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000