| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
கோடான மடவார்கள் ...... முலைமீதே கோடு ஆன மடவார்கள் முலை மீதே 418 - கோடு ஆன மடவார்கள் (திருவருணை) Songs from this thalam திருவருணை
418 திருவருணை திருப்புகழ் ( - வாரியார் # 534 )
கோடு ஆன மடவார்கள்
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தானான தனதான ...... தனதான
கூர்வேலை யிணையான ...... விழியூடே
ஊடாடி யவரோடு ...... முழலாதே
ஊராகத் திகழ்பாத ...... மருள்வாயே
நீடாழி சுழல்தேசம் ...... வலமாக
நீடோடி மயில்மீது ...... வருவோனே
சூடான தொருசோதி ...... மலைமேவு
சோணாடு புகழ்தேவர் ...... பெருமாளே.
கூர் வேலை இணையான விழி ஊடே
ஊடாடி அவரோடும் உழலாதே
ஊராகத் திகழ் பாதம் அருள்வாயே
நீடு ஆழி சுழல் தேசம் வலமாக
நீடு ஓடி மயில் மீது வருவோனே
சூடானது ஒரு சோதி மலை மேவு
சோணாடு புகழ் தேவர் பெருமாளே. விலைமாதர்களின் மலை போன்ற மார்பகங்களிலும், கூரிய வேலுக்குச் சமமான கண்களிலும், ஈடுபட்டுப் பழகினவனாக அவர்களுடன் திரியாமலே, (எனக்குச் சொந்த) ஊர் போல் இருப்பிடமாக விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிவாயாக. விரிந்த கடல் சூழ்ந்த உலகை வலமாக முழுதும் ஓடி, மயிலின் மேல் பறந்து வந்தவனே, நெருப்பான ஒரு ஜோதி மலையில், திருவண்ணாமலையில், வீற்றிருக்கும், சோழ நாட்டார் புகழும், தேவர்களின் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Similar songs: கோடு ஆன மடவார்கள் முலை மீதே ... விலைமாதர்களின் மலை
போன்ற மார்பகங்களிலும்,
கூர் வேலை இணையான விழி ஊடே ... கூரிய வேலுக்குச்
சமமான கண்களிலும்,
ஊடாடி அவரோடும் உழலாதே ஊராகத் திகழ் பாதம்
அருள்வாயே ... ஈடுபட்டுப் பழகினவனாக அவர்களுடன் திரியாமலே,
(எனக்குச் சொந்த) ஊர் போல் இருப்பிடமாக விளங்கும் உன்
திருவடியைத் தந்து அருள் புரிவாயாக.
நீடு ஆழி சுழல் தேசம் வலமாக நீடு ஓடி மயில் மீது
வருவோனே ... விரிந்த கடல் சூழ்ந்த உலகை வலமாக முழுதும் ஓடி,
மயிலின் மேல் பறந்து வந்தவனே,
சூடானது ஒரு சோதி மலை மேவு சோணாடு புகழ் தேவர்
பெருமாளே. ... நெருப்பான ஒரு ஜோதி மலையில்,
திருவண்ணாமலையில், வீற்றிருக்கும், சோழ நாட்டார் புகழும்,
தேவர்களின் பெருமாளே.
தானான தனதான ...... தனதான