சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
388   திருவருணை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 449 - வாரியார் # 582 )  

இரவியும் மதியும்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதன தனனம் தனதன தனனம்
     தனதன தனனம் ...... தனதான


இரவியு மதியுந் தெரிவுற எழுமம்
     புவிதனி லினமொன் ...... றிடுமாதும்
எழில்புதல் வருநின் றழுதுள முருகும்
     மிடர்கொடு நடலம் ...... பலகூறக்
கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்
     டுயிரினை நமனுங் ...... கருதாமுன்
கலைகொடு பலதுன் பமுமக லிடநின்
     கழலிணை கருதும் ...... படிபாராய்
திருமரு வியதிண் புயனயன் விரியெண்
     டிசைகிடு கிடவந் ...... திடுசூரன்
திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ்
     சிடவலி யொடுகன் ...... றிடும்வேலா
அருமறை யவரந் தரமுறை பவரன்
     புடையவ ருயஅன் ...... றறமேவும்
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
     கருணையி லுறையும் ...... பெருமாளே.

இரவியு மதியுந் தெரிவுற எழும் அம்புவிதனில்
இனம் ஒன்றிடுமாதும் எழில்புதல்வரும்
நின்றழுது உளமுருகும்
இடர்கொடு நடலம் பலகூற
கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்டு
உயிரினை நமனுங் கருதாமுன்
கலைகொடு பல துன்பமும் அகலிட
நின் கழலிணை கருதும் படிபாராய்
திருமருவியதிண் புயன் அயன்
விரியெண்டிசை கிடுகிட வந்திடுசூரன்
திணிபுயமது சிந்திட அலை கடலஞ்சிட
வலியொடு கன்றிடும்வேலா
அருமறையவர் அந்தரம் உறைபவர்
அன்புடையவர் உ(ய்)ய
அன்று அறமேவும் அரிவையும்
ஒருபங்கு இடமுடை யவர்தங்கு
அருணையி லுறையும் பெருமாளே.
சூரியனும், சந்திரனும் தெரியும்படி விளங்கும் இப்பூமியில் சுற்றம் என்று பொருந்திவரும் மனைவியும் அழகிய மக்களும் உடன் நின்று அழுது, உள்ளம் உருகும்படியான வருத்தத்துடன் துன்ப மொழிகள் பல சொல்ல, கறுத்த உருவமும் நெருப்பு வீசும் கண்களுடனும் உள்ள யமனும் என் உயிரைக் கவர்ந்து செல்லக் கருதி வருவதற்கு முன்பாக, யான்கற்ற பல கலைகளும், என் துயரங்களும் ஒருங்கே நீங்கிட உன் திருவடிகளையே யான் தியானிக்கும்படி கண்பார்த்தருள்வாயாக. திருமகளை மார்பில் வைத்த திண்ணிய தோளினன் திருமாலும், பிரமனும், பரந்த எண்திசையிலுள்ள யாவரும் நடுநடுங்க வந்த சூரனுடைய வலிய புயங்கள் அறுபட்டு விழ, அலை வீசும் கடல் பயப்படுமாறு வலிமையோடு கோபித்த வேலனே, அரிய வேதங்களில் வல்லவரும், வானில் உறையும் தேவர்களும், உன்னிடம் அன்பு மிகுந்த அடியார்களும் பிழைக்கும் வண்ணம், அன்று முப்பத்திரண்டு அறங்களையும் விரும்பிச் செய்த தேவி பார்வதியை தம் ஒரு பாகத்தில் இடப்பக்கமாகக் கொண்டவரான சிவபிரான் தங்கும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
இரவியு மதியுந் தெரிவுற எழும் அம்புவிதனில் ... சூரியனும்,
சந்திரனும் தெரியும்படி விளங்கும் இப்பூமியில்
இனம் ஒன்றிடுமாதும் எழில்புதல்வரும் ... சுற்றம் என்று
பொருந்திவரும் மனைவியும் அழகிய மக்களும்
நின்றழுது உளமுருகும் ... உடன் நின்று அழுது, உள்ளம்
உருகும்படியான
இடர்கொடு நடலம் பலகூற ... வருத்தத்துடன் துன்ப
மொழிகள் பல சொல்ல,
கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்டு ... கறுத்த
உருவமும் நெருப்பு வீசும் கண்களுடனும் உள்ள
உயிரினை நமனுங் கருதாமுன் ... யமனும் என் உயிரைக்
கவர்ந்து செல்லக் கருதி வருவதற்கு முன்பாக,
கலைகொடு பல துன்பமும் அகலிட ... யான்கற்ற பல
கலைகளும், என் துயரங்களும் ஒருங்கே நீங்கிட
நின் கழலிணை கருதும் படிபாராய் ... உன் திருவடிகளையே
யான் தியானிக்கும்படி கண்பார்த்தருள்வாயாக.
திருமருவியதிண் புயன் அயன் ... திருமகளை மார்பில் வைத்த
திண்ணிய தோளினன் திருமாலும், பிரமனும்,
விரியெண்டிசை கிடுகிட வந்திடுசூரன் ... பரந்த எண்திசையிலுள்ள
யாவரும் நடுநடுங்க வந்த சூரனுடைய
திணிபுயமது சிந்திட அலை கடலஞ்சிட ... வலிய புயங்கள்
அறுபட்டு விழ, அலை வீசும் கடல் பயப்படுமாறு
வலியொடு கன்றிடும்வேலா ... வலிமையோடு கோபித்த வேலனே,
அருமறையவர் அந்தரம் உறைபவர் ... அரிய வேதங்களில்
வல்லவரும், வானில் உறையும் தேவர்களும்,
அன்புடையவர் உ(ய்)ய ... உன்னிடம் அன்பு மிகுந்த அடியார்களும்
பிழைக்கும் வண்ணம்,
அன்று அறமேவும் அரிவையும் ... அன்று முப்பத்திரண்டு
அறங்களையும் விரும்பிச் செய்த தேவி பார்வதியை
ஒருபங்கு இடமுடை யவர்தங்கு ... தம் ஒரு பாகத்தில்
இடப்பக்கமாகக் கொண்டவரான சிவபிரான் தங்கும்
அருணையி லுறையும் பெருமாளே. ... திருவண்ணாமலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs:

388 - இரவியும் மதியும் (திருவருணை)

தனதன தனனம் தனதன தனனம்
     தனதன தனனம் ...... தனதான

389 - விரகொடு வளை (திருவருணை)

தனதன தனனம் தனதன தனனம்
     தனதன தனனம் ...... தனதான

Songs from this thalam திருவருணை

6 - முத்தைத்தரு

367 - குமர குருபர குணதர

368 - அருவ மிடையென

369 - கருணை சிறிதும்

370 - துகிலு ம்ருகமத

371 - மகர மெறிகடல்

372 - முகிலை யிகல்

373 - முருகு செறிகுழல் சொரு

374 - விடமும் அமுதமும்

375 - கமரி மலர்குழல்

376 - கயல் விழித்தேன்

377 - கறுவு மிக்கு ஆவி

378 - பரியகைப் பாசம்

379 - தருண மணி

380 - முழுகிவட

381 - வடவை அனல் ஊடு

382 - ஆலவிழி நீல

383 - பேதக விரோத

384 - அமுதம் ஊறு சொல்

385 - உருகும் மாமெழுகாக

386 - கரி உரி அரவம்

387 - கனை கடல் வயிறு

388 - இரவியும் மதியும்

389 - விரகொடு வளை

390 - இடம் அடு சுறவை

391 - கெஜ நடை மடவார்

392 - அருக்கார் நலத்தை

393 - அருமா மதனை

394 - அழுதும் ஆவா

395 - ஆனை வரிக் கோடு

396 - இடருக்கு இடர்

397 - இமராஜன் நிலாவது

398 - இரத சுரதமுலை

399 - இரவுபகற் பலகாலும்

400 - இருவர் மயலோ

401 - இருவினை அஞ்ச

402 - இருவினை ஊண்

403 - இருளளகம் அவிழ

404 - இறுகு மணி முலை

405 - உலையிலனல்

406 - கடல்பரவு தரங்க

407 - கமலமுகப் பிறை

408 - கமல மொட்டை

409 - கரிமுகக் கடகளிறு

410 - கரு நிறம் சிறந்து

411 - காணாத தூர நீள்

412 - காராடக் குழல்

413 - காரும் மருவும்

414 - கீத விநோத மெச்சு

415 - குரவ நறும் அளக

416 - குழவியுமாய் மோகம்

417 - கேதகையபூ முடித்த

418 - கோடு ஆன மடவார்கள்

419 - கோடு செறி

420 - சிலைநுதல் வைத்து

421 - சிவமாதுடனே

422 - சினமுடுவல் நரிகழுகு

423 - சுக்கிலச் சுரொணித

424 - செஞ்சொற் பண்

425 - செயசெய அருணா

426 - தமரம் குரங்களும்

427 - தமிழோதிய குயிலோ

428 - தலையை மழித்து

429 - திருட்டு வாணிப

430 - தேதென வாச முற்ற

431 - தோதகப் பெரும்

432 - பாண மலரது

433 - பாலாய் நூலாய்

434 - புணர்முலை மடந்தை

435 - புலையனான

436 - போக கற்ப

437 - மானை விடத்தை

438 - முகத் துலக்கிகள்

439 - மேக மொத்தகுழலார்

440 - மொழிய நிறம்

441 - வலிவாத பித்தமொடு

442 - விடு மதவேள்

443 - விதி அதாகவே

444 - விந்துப் புளகித

445 - வீறு புழுகான பனி

1328 - ஏறுமயிலேறி

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 388