| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
முட்டுப் பட்டுக் ...... கதிதோறும் முட்டுப் பட்டுக்.....கதிதோறும் 330 - முட்டுப் பட்டு (காஞ்சீபுரம்) Songs from this thalam காஞ்சீபுரம்
330 காஞ்சீபுரம் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 439 - வாரியார் # 478 )
முட்டுப் பட்டு
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தத்தத் தத்தத் ...... தனதான
தத்தத் தத்தத் ...... தனதான
முற்றச் சுற்றிப் ...... பலநாளும்
தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச்
சற்றுப் பற்றக் ...... கருதாதோ
வட்டப் புட்பத் ...... தலமீதே
வைக்கத் தக்கத் ...... திருபாதா
கட்டத் தற்றத் ...... தருள்வோனே
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
முற்றச் சுற்றிப்.....பலநாளும்
தட்டுப் பட்டுச் சுழல்வேனை
சற்றுப் பற்றக்.....கருதாதோ
வட்டப் புட்பத் தலமீதே
வைக்கத் தக்கத்.....திருபாதா
கட்டத்து அற்றத்து அருள்வோனே
கச்சிச் சொக்கப்.....பெருமாளே. சங்கடப்பட்டு, தேவ, மனித, நரக, விலங்கு என்ற நால்வகை கதிகளிலும் முழுவதுமாக அலைந்து திரிந்து பல பிறவியிலும் தடுமாற்றம் அடைந்து சுழல்கின்ற என்னை சிறிதாவது கவனித்துக்கொள்ள நினைத்தலாகாதோ? வட்டமாகிய என் இதயகமல பீடத்தின் மேலே வைத்துப் பூஜிக்கத்தக்க திருவடிகளை உடையவனே, துன்பமுறும் சமயத்தில் வந்து அருள் புரிபவனே, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: முட்டுப் பட்டுக் கதிதோறும் ... சங்கடப்பட்டு, தேவ, மனித, நரக,
விலங்கு என்ற நால்வகை கதிகளிலும்
முற்றச் சுற்றிப் பலநாளும் ... முழுவதுமாக அலைந்து திரிந்து பல
பிறவியிலும்
தட்டுப் பட்டுச் சுழல்வேனை ... தடுமாற்றம் அடைந்து சுழல்கின்ற
என்னை
சற்றுப் பற்றக் கருதாதோ ... சிறிதாவது கவனித்துக்கொள்ள
நினைத்தலாகாதோ?
வட்டப் புட்பத் தலமீதே ... வட்டமாகிய என் இதயகமல பீடத்தின்
மேலே
வைக்கத் தக்கத் திருபாதா ... வைத்துப் பூஜிக்கத்தக்க திருவடிகளை
உடையவனே,
கட்டத்து அற்றத்து அருள்வோனே ... துன்பமுறும் சமயத்தில் வந்து
அருள் புரிபவனே,
கச்சிச் சொக்கப் பெருமாளே. ... காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும்
அழகிய பெருமாளே.
தத்தத் தத்தத் ...... தனதான
தத்தத் தத்தத் ...... தனதான
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000