![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
அதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன் அதிருங் கழல்ப ணிந்து உன்.....அடியேன் உன் 303 - அதிரும் கழல் (குன்றுதோறாடல்) Songs from this thalam குன்றுதோறாடல்
303 குன்றுதோறாடல் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 161 - வாரியார் # 434 )
அதிரும் கழல்
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனனந் தனன தந்த ...... தனதான
தனனந் தனன தந்த ...... தனதான
அபயம் புகுவ தென்று ...... நிலைகாண
இதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி ...... நடமாடும்
இறைவன் தனது பங்கி ...... லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து ...... விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த ...... பெருமாளே.
அபயம் புகுவ தென்று.....நிலைகாண
இதயந் தனிலி ருந்து.....க்ருபையாகி
இடர் சங்கைகள் கலங்க.....அருள்வாயே
எதிர் அங்கொருவர் இன்றி.....நடமாடும்
இறைவன் தனது பங்கில்.....உமை பாலா
பதியெங்கிலுமிருந்து.....விளையாடிப்
பலகுன்றிலும் அமர்ந்த.....பெருமாளே.
ஒலிக்கும் வீரக் கழல்களை அணிந்த உன் திருவடிகளை வணங்கும் நினது அடிமையாகிய யான் நீயே புகலிடம் என்று மெய்ந் நிலையை யான் காணுமாறு எனது உள்ளத்தில் வீற்றிருந்து கருணை புரிந்து துன்பங்களும் சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக. தமக்கு சமானம் ஒருவருமில்லாமல் ஆனந்தத் தாண்டவம் செய்யும் சிவபெருமானுடைய இடது பாகத்தில் விளங்கும் உமாதேவியின் திருக்குமாரனே, திருத்தலங்கள் எங்கிலும் இருந்து திருவிளையாடல்கள் புரிந்து, பல மலைகளிலும் எழுந்தருளிய பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: அதிருங் கழல்ப ணிந்து உன் அடியேன் ... ஒலிக்கும் வீரக்
கழல்களை அணிந்த உன் திருவடிகளை வணங்கும் நினது
அடிமையாகிய யான்
உன் அபயம் புகுவ தென்று ... நீயே புகலிடம் என்று
நிலைகாண ... மெய்ந் நிலையை யான் காணுமாறு
இதயந் தனிலி ருந்து க்ருபையாகி ... எனது உள்ளத்தில்
வீற்றிருந்து கருணை புரிந்து
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே ... துன்பங்களும்
சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக.
எதிர் அங்கொருவர் இன்றி ... தமக்கு சமானம் ஒருவருமில்லாமல்
நடமாடும் இறைவன் தனது ... ஆனந்தத் தாண்டவம் செய்யும்
சிவபெருமானுடைய
பங்கில் உமை பாலா ... இடது பாகத்தில் விளங்கும் உமாதேவியின்
திருக்குமாரனே,
பதியெங்கிலுமிருந்து விளையாடி ... திருத்தலங்கள் எங்கிலும்
இருந்து திருவிளையாடல்கள் புரிந்து,
பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே. ... பல மலைகளிலும்
எழுந்தருளிய பெருமாளே.
தனனந் தனன தந்த ...... தனதான
தனனந் தனன தந்த ...... தனதான