| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
பொற்குட மொத்தகு யத்தைய சைப்பவர் பொன் குடம் ஒத்த குயத்தை அசைப்பவர் 287 - பொற்குடம் ஒத்த (திருத்தணிகை) Songs from this thalam திருத்தணிகை
287 திருத்தணிகை திருப்புகழ் ( - வாரியார் # 278 )
பொற்குடம் ஒத்த
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன ...... தானா
கைப்பொருள் புக்கிட ...... வேதான்
புட்குரல் விச்சைபி தற்றுமொ ழிச்சியர்
பொட்டணி நெற்றிய ...... ரானோர்
அற்பவி டைக்கலை சுற்றிநெ கிழ்ப்பவர்
அற்பர மட்டைகள் ...... பால்சென்
றக்கண்வ லைக்குள கப்படு புத்தியை
அற்றிட வைத்தருள் ...... வாயே
கொக்கரை சச்சரி மத்தளி யொத்துவி
டக்கைமு ழக்கொலி ...... யாலக்
கொக்கிற கக்கர மத்தம ணிக்கருள்
குத்தத ணிக்கும ...... ரேசா
சர்க்கரை முப்பழ மொத்தமொ ழிச்சிகு
றத்தித னக்கிரி ...... மேலே
தைக்கும னத்தச மர்த்தஅ ரக்கர்த
லைக்குலை கொத்திய ...... வேளே.
கைப் பொருள் புக்கிடவே தான் புள் குரல் விச்சை பிதற்றும்
மொழிச்சியர்
பொட்டு அணி நெற்றியர் ஆனோர் அற்ப இடைக்கலை சுற்றி
நெகிழ்ப்பவர்
அற்பர் அ(ம்) மட்டைகள் பால் சென்று அக் கண் வலைக்குள்
அகப்படு புத்தியை அற்றிட வைத்து அருள்வாயே
கொக்கரை சச்சரி மத்தளி ஒத்து இடக்கை முழக்கு ஒலி ஆல
கொக்கு இறகு அக்கு அர மத்தம் அணிக்கு அருள் குத்த(ம்)
தணிக் குமரேசா
சர்க்கரை முப்பழம் ஒத்த மொழிச்சி குறத்தி தனக் கிரி மேலே
தைக்கும் மனத்த சமர்த்த
அரக்கர் தலைக் குலை கொத்திய வேளே. பொன்னாலாகிய குடம் போன்ற மார்பை அசைப்பவர்கள், (வந்தவர்) கையில் உள்ள பொருள் தமக்குக் கிடைத்த பின்தான் பறவைகளின் குரலைக் காட்டி, மாய வித்தைகளை குழறிப் பேசும் பேச்சுக்களை உடையவர்கள், பொட்டு அணிந்த நெற்றியை உடையவர்கள், மெல்லிய இடையில் புடவையைச் சுற்றி அதை (காமம் மூட்டும்படி) நெகிழ்க்கவும் செய்பவர்கள், அற்பர்கள், அந்த பயனற்றவர்களாகிய பொது மகளிர் இடத்தே போய், அவர்களுடைய கண் வலைக்குள் அகப்படுகின்ற கெட்ட புத்தியை நீங்கச் செய்து அருள் புரிவாயாக. கொக்கரை, சச்சரி, மத்தளி, ஒத்து, இடக்கை ஆகிய மேளவாத்தியங்கள் முழங்கும் ஒலி ஒலிக்க, கொக்கின் இறகு, எலும்பு, பாம்பு, ஊமத்தம் பூ இவைகளை (சடையில்) அணிந்த சிவபெருமானுக்கு, ரகசிய உபதேசத்தை அருளிய திருத்தணிகை மலைக் குமரேசனே, சர்க்கரை, வாழை, மா, பலா ஆகிய முக்கனிகளுக்கு ஒப்பான பேச்சுக்களை உடைய குறப்பெண்ணாகிய வள்ளியின் மார்பகங்கள் மீது அதிகப் பற்றுள்ள சமர்த்தனே, அரக்கர்களின் தலைக் கொத்துக்களை வெட்டி அழித்த வேளே.
Add (additional) Audio/Video Link
Similar songs: பொன் குடம் ஒத்த குயத்தை அசைப்பவர் ... பொன்னாலாகிய
குடம் போன்ற மார்பை அசைப்பவர்கள்,
கைப் பொருள் புக்கிடவே தான் புள் குரல் விச்சை பிதற்றும்
மொழிச்சியர் ... (வந்தவர்) கையில் உள்ள பொருள் தமக்குக்
கிடைத்த பின்தான் பறவைகளின் குரலைக் காட்டி, மாய
வித்தைகளை குழறிப் பேசும் பேச்சுக்களை உடையவர்கள்,
பொட்டு அணி நெற்றியர் ஆனோர் அற்ப இடைக்கலை சுற்றி
நெகிழ்ப்பவர் ... பொட்டு அணிந்த நெற்றியை உடையவர்கள்,
மெல்லிய இடையில் புடவையைச் சுற்றி அதை (காமம் மூட்டும்படி)
நெகிழ்க்கவும் செய்பவர்கள்,
அற்பர் அ(ம்) மட்டைகள் பால் சென்று அக் கண் வலைக்குள்
அகப்படு புத்தியை அற்றிட வைத்து அருள்வாயே ... அற்பர்கள்,
அந்த பயனற்றவர்களாகிய பொது மகளிர் இடத்தே போய்,
அவர்களுடைய கண் வலைக்குள் அகப்படுகின்ற கெட்ட புத்தியை
நீங்கச் செய்து அருள் புரிவாயாக.
கொக்கரை சச்சரி மத்தளி ஒத்து இடக்கை முழக்கு ஒலி ஆல ...
கொக்கரை, சச்சரி, மத்தளி, ஒத்து, இடக்கை ஆகிய மேளவாத்தியங்கள்
முழங்கும் ஒலி ஒலிக்க,
கொக்கு இறகு அக்கு அர மத்தம் அணிக்கு அருள் குத்த(ம்)
தணிக் குமரேசா ... கொக்கின் இறகு, எலும்பு, பாம்பு, ஊமத்தம் பூ
இவைகளை (சடையில்) அணிந்த சிவபெருமானுக்கு, ரகசிய
உபதேசத்தை அருளிய திருத்தணிகை மலைக் குமரேசனே,
சர்க்கரை முப்பழம் ஒத்த மொழிச்சி குறத்தி தனக் கிரி மேலே
தைக்கும் மனத்த சமர்த்த ... சர்க்கரை, வாழை, மா, பலா ஆகிய
முக்கனிகளுக்கு ஒப்பான பேச்சுக்களை உடைய குறப்பெண்ணாகிய
வள்ளியின் மார்பகங்கள் மீது அதிகப் பற்றுள்ள சமர்த்தனே,
அரக்கர் தலைக் குலை கொத்திய வேளே. ... அரக்கர்களின்
தலைக் கொத்துக்களை வெட்டி அழித்த வேளே.
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன ...... தானா