சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
249   திருத்தணிகை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 123 - வாரியார் # 298 )  

எனக்கென யாவும்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான

எனக்கென யாவும் படைத்திட நாளும்
     இளைப்பொடு காலந் ...... தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
     இலச்சையி லாதென் ...... பவமாற
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
     உரைத்திடு வார்தங் ...... குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
     பொலச்சர ணானுந் ...... தொழுவேனோ
வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
     விழக்கொடு வேள்கொன் ...... றவனீயே
விளப்பென மேலென் றிடக்கய னாரும்
     விருப்புற வேதம் ...... புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
     சிரத்தினை மாறும் ...... முருகோனே
தினைப்புன மோவுங் குறக்கொடி யோடுந்
     திருத்தணி மேவும் ...... பெருமாளே.

எனக்கென யாவும் படைத்திட நாளும்
     இளைப்பொடு காலந்.....தனிலோயா
எடுத்திடு காயத் தனைக்கொடு மாயும்
     இலச்சை இலாதென்.....பவமாற
உனைப்பல நாளுந் திருப்புகழாலும்
     உரைத்திடுவார் தங்.....குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரியாது ஒண்
     பொலச் சரண் நானுந்.....தொழுவேனோ?
வினைத்திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன்
     விழக்கொடு வேள் கொன்றவன்.....நீயே
விளப்பென மேலென்றிட அயனாரும்
     விருப்புற வேதம்.....புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
     சிரத்தினை மாறும்.....முருகோனே
தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந்
     திருத்தணி மேவும்.....பெருமாளே.

எனக்கென்றே எல்லாம் சேகரிக்க வேண்டி தினந்தோறும் இளைப்பு உண்டாகும்படியாக பலகாலமாய் ஓய்ச்சல் இல்லாமல் எடுக்கின்ற தேகங்களுடன் பிறந்து (பின்னர் அவை) இறந்து போகும் வெட்கம் இல்லாத என் பிறப்பு ஓய்வு பெற, உன்னை பலகாலமும் திருப்புகழ் பாடிப் புகழ்கின்றவர்கள் அவர்களது இருப்பிடம் சென்றடைந்து விளக்கும் அறிவுரையை விட்டுவிலகாது ஒளி பொருந்திய உன் திருவடியை நான் தொழும் பாக்கியம் பெறுவேனோ? தன் தொழிலில் திறமையுடன் அன்றொருநாள் எதிர்த்துவந்து அம்பு எய்த வீரனாம் (மன்மதன்) வெந்து விழும்படி அந்த மன்மதனைக் கொன்றவனாகிய சிவன் நீயே (பிரணவப் பொருளை) இனி உரைப்பாயாக என்று கூறிட பிரமனும் விரும்பி மகிழ, வேதப் பொருளை உரைத்தவனே கோபத்துடன் சூரனைக் கடுமைகொண்ட வேலால் (அவனது) சிரத்தை அறுத்த முருகோனே தினைப்புனத்தில் வாசம் செய்த குறப்பெண் வள்ளியுடன் திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
எனக்கென யாவும் படைத்திட ... எனக்கென்றே எல்லாம் சேகரிக்க
வேண்டி
நாளும் இளைப்பொடு ... தினந்தோறும் இளைப்பு உண்டாகும்படியாக
காலந் தனிலோயா ... பலகாலமாய் ஓய்ச்சல் இல்லாமல்
எடுத்திடு காயத் தனைக்கொடு ... எடுக்கின்ற தேகங்களுடன்
பிறந்து
மாயும் ... (பின்னர் அவை) இறந்து போகும்
இலச்சை இலாதென் பவமாற ... வெட்கம் இல்லாத என் பிறப்பு
ஓய்வு பெற,
உனைப்பல நாளுந் திருப்புகழாலும் உரைத்திடுவார் ... உன்னை
பலகாலமும் திருப்புகழ் பாடிப் புகழ்கின்றவர்கள்
தங் குளிமேவி ... அவர்களது இருப்பிடம் சென்றடைந்து
உணர்த்திய போதந் தனைப்பிரியாது ... விளக்கும் அறிவுரையை
விட்டுவிலகாது
ஒண்பொலச் சரண் நானுந் தொழுவேனோ? ... ஒளி பொருந்திய
உன் திருவடியை நான் தொழும் பாக்கியம் பெறுவேனோ?
வினைத்திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன் ... தன் தொழிலில்
திறமையுடன் அன்றொருநாள் எதிர்த்துவந்து அம்பு எய்த வீரனாம்
(மன்மதன்)
விழக்கொடு வேள் கொன்றவன் ... வெந்து விழும்படி அந்த
மன்மதனைக் கொன்றவனாகிய சிவன்
நீயே விளப்பென மேலென்றிட ... நீயே (பிரணவப் பொருளை)
இனி உரைப்பாயாக என்று கூறிட
அயனாரும் விருப்புற வேதம் புகல்வோனே ... பிரமனும் விரும்பி
மகிழ, வேதப் பொருளை உரைத்தவனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின் ... கோபத்துடன்
சூரனைக் கடுமைகொண்ட வேலால்
சிரத்தினை மாறும் முருகோனே ... (அவனது) சிரத்தை அறுத்த
முருகோனே
தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந் ... தினைப்புனத்தில்
வாசம் செய்த குறப்பெண் வள்ளியுடன்
திருத்தணி மேவும் பெருமாளே. ... திருத்தணிகையில்
வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs:

249 - எனக்கென யாவும் (திருத்தணிகை)

தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான

284 - பெருக்க உபாயம் (திருத்தணிகை)

தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான

289 - மருக்குல மேவும் (திருத்தணிகை)

தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான

301 - வினைக்கு இனமாகும் (திருத்தணிகை)

தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான

Songs from this thalam திருத்தணிகை

239 - அமைவுற்று அடைய

240 - அரகர சிவன் அரி

241 - அருக்கி மெத்தென

242 - இருப்பவல் திருப்புகழ்

243 - இருமலு ரோக

244 - உடலி னூடு

245 - உடையவர்கள் ஏவர்

246 - உய்யஞானத்து நெறி

247 - எத்தனை கலாதி

248 - எலுப்பு நாடிகள்

249 - எனக்கென யாவும்

250 - எனை அடைந்த

251 - ஏது புத்தி

252 - ஓலை இட்ட

253 - கச்சணி இளமுலை

254 - கடற்செகத் தடக்கி

255 - கரிக்குழல் விரித்தும்

256 - கலை மடவார்தம்

257 - கவடுற்ற சித்தர்

258 - கனத்த அற

259 - கனைத்து அதிர்க்கும்

260 - கிரி உலாவிய

261 - கிறி மொழி

262 - குயில் ஒன்று

263 - குருவி என

264 - குலைத்து மயிர்

265 - குவளைக் கணை

266 - கூந்தல் அவிழ்த்து

267 - கூர்வேல் பழித்த

268 - கொந்துவார் குரவடி

269 - சினத்தவர் முடிக்கும்

270 - சினத் திலத் தினை

271 - சொரியும் முகிலை

272 - தாக்கு அமருக்கு

273 - திருட்டு நாரிகள்

274 - துப் பார் அப்பு

275 - தொக்கறாக் குடில்

276 - தொடத்துளக்கிகள்

277 - நிலையாத சமுத்திர

278 - நினைத்தது எத்தனை

279 - பகல் இராவினும்

280 - பருத்தபற் சிரத்தினை

281 - பழமை செப்பிய

282 - புருவ நெறித்து

283 - பூசலிட்டு

284 - பெருக்க உபாயம்

285 - பொரியப் பொரிய

286 - பொருவிக் கந்தொடு

287 - பொற்குடம் ஒத்த

288 - பொற் பதத்தினை

289 - மருக்குல மேவும்

290 - மலை முலைச்சியர்

291 - முகத்தை மினுக்கி

292 - முகிலும் இரவியும்

293 - முடித்த குழலினர்

294 - முத்துத் தெறிக்க

295 - முலைபுளகம் எழ

296 - மொகுமொகு என

297 - வங்கம் பெறு

298 - வட்ட வாள் தன

299 - வரிக் கலையின்

300 - வார் உற்று எழும்

301 - வினைக்கு இனமாகும்

302 - வெற்றி செயவுற்ற
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000