| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
194 - வரதா மணி நீ (பழநி) Songs from this thalam பழநி
194 பழநி திருப்புகழ் ( குருஜி இராகவன் # 90 - வாரியார் # 184 )
வரதா மணி நீ
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனனா தனனா ...... தனதான
தனனா தனனா ...... தனதான
வரதா மணிநீ ...... யெனவோரில்
வருகா தெதுதா ...... னதில்வாரா
திரதா திகளால் ...... நவலோக
மிடவே கரியா ...... மிதிலேது
சரதா மறையோ ...... தயன்மாலும்
சகலா கமநூ ...... லறியாத
பரதே வதையாள் ...... தருசேயே
பழனா புரிவாழ் ...... பெருமாளே.
வரதா மணிநீயென ஓரில்
வருகா தெது எதுதான் அதில் வாரா(து)
இரதாதிகளால் நவலோகம்
இடவே கரியாம் இதில் ஏது
சரதா மறையோது அயன்மாலும்
சகலாகமநூல் அறியாத
பரதே வதையாள் தருசேயே
பழனா புரிவாழ் பெருமாளே.
வேண்டுபவருக்கு வேண்டும் வரங்களை அளிப்பவனும், கேட்பவருக்கு கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணியும் நீதான் என்று ஆராய்ந்து பார்த்தால் கைகூடாதது எது உண்டு? எந்தக் காரியம்தான் அவ்வாறு துதித்தால் நிறைவேறாது? பாதரசம் போன்றவைகளை வைத்துச் செய்யும் ரசவாத வித்தை மூலம் ஒன்பது லோகங்களை இட்ட கூட்டுறவால் இறுதியில் கரியாகும். இதனால் வேறு பயன் ஏது? சத்திய சொரூபனே, வேதம் ஓதும் பிரமனும் திருமாலும் எல்லா வேத ஆகம நூல்களும் அறியாத பரதேவதையாகிய பார்வதி தந்தருளிய குழந்தாய், பழனிப்பதியில் வாழ்கின்ற பெருமாளே. Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link வரதா ... வேண்டுபவருக்கு வேண்டும் வரங்களை அளிப்பவனும்,
மணிநீயென ... கேட்பவருக்கு கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணியும்
நீதான் என்று
ஓரில் ... ஆராய்ந்து பார்த்தால்
வருகா தெது ... கைகூடாதது எது உண்டு?
எதுதான் அதில் வாரா(து) ... எந்தக் காரியம்தான் அவ்வாறு
துதித்தால் நிறைவேறாது?
இரதாதிகளால் ... பாதரசம் போன்றவைகளை வைத்துச் செய்யும்
ரசவாத வித்தை மூலம்
நவலோகம் இடவே கரியாம் ... ஒன்பது லோகங்களை இட்ட
கூட்டுறவால் இறுதியில் கரியாகும்.
இதில் ஏது ... இதனால் வேறு பயன் ஏது?
சரதா ... சத்திய சொரூபனே,
மறையோது அயன்மாலும் ... வேதம் ஓதும் பிரமனும் திருமாலும்
சகலாகமநூல் அறியாத ... எல்லா வேத ஆகம நூல்களும் அறியாத
பரதே வதையாள் தருசேயே ... பரதேவதையாகிய பார்வதி தந்தருளிய
குழந்தாய்,
பழனா புரிவாழ் பெருமாளே. ... பழனிப்பதியில் வாழ்கின்ற
பெருமாளே.
1
Similar songs:
தனனா தனனா ...... தனதான
தனனா தனனா ...... தனதான
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000