| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
பட்டுப் படாத ...... மதனாலும் பட்டுப் படாத மதனாலும் 1297 - பட்டுப் படாத (பொதுப்பாடல்கள்) Songs from this thalam பொதுப்பாடல்கள்
1297 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 394 - வாரியார் # 1098 )
பட்டுப் படாத
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தத்தத் தனான ...... தனதான
பக்கத்து மாதர் ...... வசையாலும்
சுட்டுச் சுடாத ...... நிலவாலும்
துக்கத்தி லாழ்வ ...... தியல்போதான்
தட்டுப் படாத ...... திறல்வீரா
தர்க்கித்த சூரர் ...... குலகாலா
மட்டுப் படாத ...... மயிலோனே
மற்றொப்பி லாத ...... பெருமாளே.
பக்கத்து மாதர் வசையாலும்
சுட்டுச் சுடாத நிலவாலும்
துக்கத்தில் ஆழ்வது இயல்போதான்
தட்டுப் படாத திறல்வீரா
தர்க்கித்த சூரர் குலகாலா
மட்டுப் படாத மயிலோனே
மற்றொப்பி லாத பெருமாளே. என்னை மலர்ப் பாணங்களினால் தாக்கியும் தாக்காததுபோல மறைந்திருக்கும் மன்மதனாலும், அண்டை அயலிலுள்ள பெண்களின் பழிச்சொற்களினாலும், தன் கிரணங்களினால் எரித்தும் எரிக்காதது போல விளங்கும் நிலவினாலும், நான் விரக வேதனையில் மூழ்கித் தவிப்பது தகுதியாகுமா? குறையொன்றும் இல்லாத பராக்கிரமம் உடைய வீரனே, உன்னுடன் வாதிட்டு எதிர்த்த சூரனின் குலத்துக்கே யமனாக வந்து வாய்ந்தவனே, அடக்க முடியாத வீரம் செறிந்த மயிலை வாகனமாகக் கொண்டோனே, வேறு யாரையும் உனக்கு ஒப்பாகச் சொல்லமுடியாத பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: பட்டுப் படாத மதனாலும் ... என்னை மலர்ப் பாணங்களினால்
தாக்கியும் தாக்காததுபோல மறைந்திருக்கும் மன்மதனாலும்,
பக்கத்து மாதர் வசையாலும் ... அண்டை அயலிலுள்ள பெண்களின்
பழிச்சொற்களினாலும்,
சுட்டுச் சுடாத நிலவாலும் ... தன் கிரணங்களினால் எரித்தும்
எரிக்காதது போல விளங்கும் நிலவினாலும்,
துக்கத்தில் ஆழ்வது இயல்போதான் ... நான் விரக வேதனையில்
மூழ்கித் தவிப்பது தகுதியாகுமா?
தட்டுப் படாத திறல்வீரா ... குறையொன்றும் இல்லாத பராக்கிரமம்
உடைய வீரனே,
தர்க்கித்த சூரர் குலகாலா ... உன்னுடன் வாதிட்டு எதிர்த்த சூரனின்
குலத்துக்கே யமனாக வந்து வாய்ந்தவனே,
மட்டுப் படாத மயிலோனே ... அடக்க முடியாத வீரம் செறிந்த
மயிலை வாகனமாகக் கொண்டோனே,
மற்றொப்பி லாத பெருமாளே. ... வேறு யாரையும் உனக்கு ஒப்பாகச்
சொல்லமுடியாத பெருமாளே.
தத்தத் தனான ...... தனதான