| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
சருவிய சாத்திரத் ...... திரளான சருவிய சாத்திரத் திரளான 1288 - சருவிய சாத்திர (பொதுப்பாடல்கள்) Songs from this thalam பொதுப்பாடல்கள்
1288 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 363 - வாரியார் # 1089 )
சருவிய சாத்திர
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனதன தாத்தனத் ...... தனதான
சடுதிக ழாஸ்பதத் ...... தமையாத
அருமறை யாற்பெறற் ...... கரிதாய
அனிதய வார்த்தையைப் ...... பெறுவேனோ
நிருதரை மூக்கறுத் ...... தெழுபார
நெடுதிரை யார்ப்பெழப் ...... பொருதோனே
பொருளடி யாற்பெறக் ...... கவிபாடும்
புலவரு சாத்துணைப் ...... பெருமாளே.
சடுதிகழ் ஆஸ்பதத்து அமையாத
அருமறையாற் பெறற்கு அரிதாய
அனிதய வார்த்தையைப் பெறுவேனோ
நிருதரை மூக்கறுத்து
எழுபார நெடுதிரை யார்ப்பெழப் பொருதோனே
பொருள் அடியாற் பெறக் கவிபாடும்
புலவர் உசாத்துணைப் பெருமாளே. அது நன்கு பழக்கமான எல்லாச் சாத்திரங்களின் திரண்ட சாராம்சப் பொருளானது. ஆறு என்று விளங்குகின்ற ஆதாரங்களில் பொருந்தி அடங்காதது அது. அரிய வேதங்களால் பெறுவதற்கு அரிதானது அது. இதயத்துக்கு எட்டாத அந்த உபதேச மொழியைப் பெறுகின்ற பாக்கியம் எனக்குக் கிட்டுமா? அரக்கர்களை அவமானம் செய்து, ஏழு பெரிய கடல்களிலும் பேரொலி உண்டாகுமாறு போர் செய்தவனே, உண்மைப் பொருளை உன் திருவடித் துணையால் பெறுவதற்காக பாடல்களைப் பாடும் புலவர்களுக்கு உற்ற துணைவனான பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: சருவிய சாத்திரத் திரளான ... அது நன்கு பழக்கமான எல்லாச்
சாத்திரங்களின் திரண்ட சாராம்சப் பொருளானது.
சடுதிகழ் ஆஸ்பதத்து அமையாத ... ஆறு என்று விளங்குகின்ற
ஆதாரங்களில் பொருந்தி அடங்காதது அது.
அருமறையாற் பெறற்கு அரிதாய ... அரிய வேதங்களால்
பெறுவதற்கு அரிதானது அது.
அனிதய வார்த்தையைப் பெறுவேனோ ... இதயத்துக்கு எட்டாத
அந்த உபதேச மொழியைப் பெறுகின்ற பாக்கியம் எனக்குக் கிட்டுமா?
நிருதரை மூக்கறுத்து ... அரக்கர்களை அவமானம் செய்து,
எழுபார நெடுதிரை யார்ப்பெழப் பொருதோனே ... ஏழு பெரிய
கடல்களிலும் பேரொலி உண்டாகுமாறு போர் செய்தவனே,
பொருள் அடியாற் பெறக் கவிபாடும் ... உண்மைப் பொருளை
உன் திருவடித் துணையால் பெறுவதற்காக பாடல்களைப் பாடும்
புலவர் உசாத்துணைப் பெருமாளே. ... புலவர்களுக்கு உற்ற
துணைவனான பெருமாளே.
தனதன தாத்தனத் ...... தனதான