| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
கோடான மேருமலைத் ...... தனமானார் கோடு ஆன மேரு மலைத் தனம் மானார் 1286 - கோடான மேருமலை (பொதுப்பாடல்கள்) Songs from this thalam பொதுப்பாடல்கள்
1286 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( - வாரியார் # 1087 )
கோடான மேருமலை
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தானான தானதனத் ...... தனதான
கோமாள மானவலைக் ...... குழலாதே
நாடோறு மேன்மைபடைத் ...... திடவேதான்
நாயேனை யாளநினைத் ...... திடொணாதோ
ஈடேற ஞானமுரைத் ...... தருள்வோனே
ஈராறு தோள்கள்படைத் ...... திடுவோனே
மாடேறு மீசர்தமக் ...... கினியோனே
மாதானை யாறுமுகப் ...... பெருமாளே.
கோமாளம் ஆனவலைக்கு உழலாதே
நாள் தோறும் மேன்மை படைத்திடவே தான்
நாயேனை ஆள நினைத்திட ஒணாதோ
ஈடேற ஞானம் உரைத்து அருள்வோனே
ஈராறு தோள்கள் படைத்திடுவோனே
மாடு ஏறும் ஈசர் தமக்கு இனியோனே
மா தானை ஆறு முகப் பெருமாளே.
சிகரங்களைக் கொண்ட மேரு மலையை ஒத்த மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கொண்டாட்டமான வலைக்குள் பட்டுத் திரியாமல், நாளுக்கு நாள் சிறப்பும் புகழும் பெருகி உண்டாக நாய் போன்ற அடியேனை ஆட்கொள்ள நினைத்திடக் கூடாதோ? நான் ஈடேறும்படி ஞானோபதேசம் செய்து அருளியவனே, பன்னிரண்டு தோள்களைக் கொண்டவனே, ரிஷபத்தில் ஏறுகின்ற சிவபெருமானுக்கு இனியவனே, சிறந்த சேனைகளையும், ஆறு திரு முகங்களையும் கொண்ட பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Similar songs: கோடு ஆன மேரு மலைத் தனம் மானார் கோமாளம் ஆன
வலைக்கு உழலாதே ... சிகரங்களைக் கொண்ட மேரு மலையை
ஒத்த மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கொண்டாட்டமான
வலைக்குள் பட்டுத் திரியாமல்,
நாள் தோறும் மேன்மை படைத்திடவே தான் நாயேனை ஆள
நினைத்திட ஒணாதோ ... நாளுக்கு நாள் சிறப்பும் புகழும் பெருகி
உண்டாக நாய் போன்ற அடியேனை ஆட்கொள்ள நினைத்திடக்
கூடாதோ?
ஈடேற ஞானம் உரைத்து அருள்வோனே ... நான் ஈடேறும்படி
ஞானோபதேசம் செய்து அருளியவனே,
ஈராறு தோள்கள் படைத்திடுவோனே ... பன்னிரண்டு
தோள்களைக் கொண்டவனே,
மாடு ஏறும் ஈசர் தமக்கு இனியோனே ... ரிஷபத்தில் ஏறுகின்ற
சிவபெருமானுக்கு இனியவனே,
மா தானை ஆறு முகப் பெருமாளே. ... சிறந்த சேனைகளையும்,
ஆறு திரு முகங்களையும் கொண்ட பெருமாளே.
தானான தானதனத் ...... தனதான