| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
உலகபசு பாச தொந்த ...... மதுவான உலகபசு பாச தொந்தம் அதுவான 122 - உலகபசு பாச (பழநி) Songs from this thalam பழநி
122 பழநி திருப்புகழ் ( குருஜி இராகவன் # 61 - வாரியார் # 131 )
உலகபசு பாச
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனதனன தான தந்த ...... தனதான
தனதனன தான தந்த ...... தனதான
உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர்
மலசலசு வாச சஞ்ச ...... லமதாலென்
மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய்
சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே
சரவணப வாமு குந்தன் ...... மருகோனே
பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே
பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.
உறவுகிளை தாயர் தந்தை மனைபாலர்
மலசல சுவாச சஞ்சலம் அதால் என்
மதிநிலை கெடாமல் உன்றன் அருள்தாராய்
சலம் அறுகு பூளை தும்பை அணிசேயே
சரவணபவா முகுந்தன் மருகோனே
பலகலை சிவாகமங்கள் பயில்வோனே
பழநிமலை வாழ வந்த பெருமாளே.
உலகத்தில் உயிர், பாசம் இவை சம்பந்தப்பட்ட உற்றோரும், சுற்றத்தாரும், தாய், தந்தை, மனைவி, மக்கள், மல, மூத்திர, மூச்சு முதலிய உபாதைகளால் எனது புத்திநிலை கெடாதவாறு உனது திருவருளைத் தந்தருள்வாயாக. கங்கை நீர், அறுகம்புல், பூளைச்செடியின் பூ, தும்பைப் பூ இவைகளை அணியும் சிவபெருமானின் குமாரனே, சரவணபவனே, திருமாலின் மருமகனே, பல கலைகளாலும், சிவாகமங்களாலும் புகழப்படுவோனே, பழனிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: உலகபசு பாச தொந்தம் அதுவான ... உலகத்தில் உயிர், பாசம்
இவை சம்பந்தப்பட்ட
உறவுகிளை தாயர் தந்தை மனைபாலர் ... உற்றோரும்,
சுற்றத்தாரும், தாய், தந்தை, மனைவி, மக்கள்,
மலசல சுவாச சஞ்சலம் அதால் ... மல, மூத்திர, மூச்சு முதலிய
உபாதைகளால்
என் மதிநிலை கெடாமல் ... எனது புத்திநிலை கெடாதவாறு
உன்றன் அருள்தாராய் ... உனது திருவருளைத் தந்தருள்வாயாக.
சலம் அறுகு பூளை தும்பை ... கங்கை நீர், அறுகம்புல்,
பூளைச்செடியின் பூ, தும்பைப் பூ
அணிசேயே ... இவைகளை அணியும் சிவபெருமானின் குமாரனே,
சரவணபவா முகுந்தன் மருகோனே ... சரவணபவனே, திருமாலின்
மருமகனே,
பலகலை சிவாகமங்கள் பயில்வோனே ... பல கலைகளாலும்,
சிவாகமங்களாலும் புகழப்படுவோனே,
பழநிமலை வாழ வந்த பெருமாளே. ... பழனிமலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.
தனதனன தான தந்த ...... தனதான
தனதனன தான தந்த ...... தனதான