| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
அபகார நிந்தைபட் ...... டுழலாதே அபகார நிந்தைபட்டு உழலாதே 107 - அபகார நிந்தை (பழநி) Songs from this thalam பழநி
107 பழநி திருப்புகழ் ( குருஜி இராகவன் # 57 - வாரியார் # 110 )
அபகார நிந்தை
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனதான தந்தனத் ...... தனதான
தனதான தந்தனத் ...... தனதான
அறியாத வஞ்சரைக் ...... குறியாதே
உபதேச மந்திரப் ...... பொருளாலே
உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ
இபமாமு கன்தனக் ...... கிளையோனே
இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா
ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.
அறியாத வஞ்சரை குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ?
இபமா முகன் தனக் கிளையோனே
இமவான் மடந்தை உத்தமிபாலா
ஜெபமாலை தந்த சற் குருநாதா
திருவாவினன் குடி பெருமாளே.
பிறர்க்குச் செய்த தீமைகளினால் நிந்தனைக்கு ஆளாகி அலையாமலும், நன்னெறியை அறியாத வஞ்சகர்களிடம் சேராமலும், நீ எனக்கருளிய உபதேச மந்திரத்தின் பொருளையே துணையாகக் கொண்டு உன்னையே நான் நினைந்து உன் திருவருளைப் பெற மாட்டேனோ? யானையின் சிறந்த முகத்தை உடைய வினாயகன் தனக்குத் தம்பியானவனே இமயராஜன் மகளாம் (பார்வதி என்னும்) உத்தமியின் பிள்ளையே ஜெபம் செய்யக்கூடிய மாலையை எனக்களித்த நல்ல குரு நாதனே திருவாவினன்குடி என்னும் பதிக்குப் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: அபகார நிந்தைபட்டு ... பிறர்க்குச் செய்த தீமைகளினால்
நிந்தனைக்கு ஆளாகி
உழலாதே ... அலையாமலும்,
அறியாத வஞ்சரை ... நன்னெறியை அறியாத வஞ்சகர்களிடம்
குறியாதே ... சேராமலும்,
உபதேச மந்திரப் பொருளாலே ... நீ எனக்கருளிய உபதேச
மந்திரத்தின் பொருளையே துணையாகக் கொண்டு
உனை நான் நினைந்து ... உன்னையே நான் நினைந்து
அருள் பெறுவேனோ? ... உன் திருவருளைப் பெற மாட்டேனோ?
இபமா முகன் ... யானையின் சிறந்த முகத்தை உடைய வினாயகன்
தனக் கிளையோனே ... தனக்குத் தம்பியானவனே
இமவான் மடந்தை ... இமயராஜன் மகளாம் (பார்வதி என்னும்)
உத்தமிபாலா ... உத்தமியின் பிள்ளையே
ஜெபமாலை தந்த ... ஜெபம் செய்யக்கூடிய மாலையை எனக்களித்த
சற் குருநாதா ... நல்ல குரு நாதனே
திருவாவினன் குடி பெருமாளே. ... திருவாவினன்குடி என்னும்
பதிக்குப் பெருமாளே.
தனதான தந்தனத் ...... தனதான
தனதான தந்தனத் ...... தனதான
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000