தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
| மனக பாட பாடீர தனத ராத ராரூப மதன ராச ராசீப ...... சரகோப வருண பாத காலோக தருண சோபி தாகார மகளி ரோடு சீராடி ...... யிதமாடிக் குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான குறைய னேனை நாயேனை ...... வினையேனைக் கொடிய னேனை யோதாத குதலை யேனை நாடாத குருட னேனை நீயாள்வ ...... தொருநாளே அநக வாம னாகார முநிவ ராக மால்தேட அரிய தாதை தானேவ ...... மதுரேசன் அரிய சார தாபீட மதனி லேறி யீடேற அகில நாலு மாராயு ...... மிளையோனே கனக பாவ னாகார பவள கோம ளாகார கலப சாம ளாகார ...... மயிலேறுங் கடவு ளேக்ரு பாகார கமல வேத னாகார கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. |
| மனகபாட
பாடீர தன தராதரா ரூப
மதன ராச ராசீப சரகோப
வருண பாதக அலோக
தருண சோபித ஆகார
மகளிரோடு சீராடி யிதமாடிக் குனகுவேனை
நாணாது தனகுவேனை
வீணான குறையனேனை
நாயேனை வினையேனைக் கொடியனேனை
ஓதாத குதலையேனை
நாடாத குருடனேனை
நீயாள்வ தொருநாளே
அநக வாமனாகார முநிவராக மால்தேட
அரிய தாதை தானேவ மதுரேசன்
அரிய சாரதாபீடம் அதனிலேறி ஈடேற
அகில நாலும் ஆராயும் இளையோனே
கனக பாவனாகார பவள கோமளாகார
கலப சாமளாகார மயிலேறும் கடவுளே
க்ருபாகார கமல வேதனாகார
கருணை மேருவே தேவர் பெருமாளே. |
கதவால் அடைக்கப்பட்டது போன்ற ரகசிய மனம் உள்ளவர்களும், சந்தனப் பூச்சு அப்பிய மலை போன்ற மார்பகமுள்ள உருவத்தாரும், மன்மத ராஜனின் தாமரைமலர் அம்பு பாய்ந்த கோபத்துக்கு ஆளாகி, குல வேற்றுமையால் ஏற்படும் குற்றத்தைப் பாராட்டாமல் எல்லாரோடும் சேர்பவர்களும், இளமை வாய்ந்த உடலைக் காட்டிக்கொண்டு இருப்பவருமான பொது மாதர்களோடு செல்வச் செருக்குடன் விளையாடியும் இன்பத்தில் திளைத்தும் காலம் கழிப்பவனும், வெட்கம் இன்றிச் சரசம் செய்பவனும், நாளை வீணாக்கும் குறையை உடையவனும், நாயைப்போன்றவனும், கொடுவினையாளனும், பொல்லாதவனும், உன்னைப் போற்றிப் புகழாது வெறும் கொச்சை மொழி பேசித் திரிபவனும், உன்னை விரும்பித் தேடாத குருடனுமான என்னையும் நீ ஆண்டருளும்படியான நாள் ஒன்று உண்டா? பாவமற்ற குறுமுநி வாமனராக அவதாரம் செய்த திருமால் (சிவனாரின்) பாதத்தைத் தேட அவருக்கு எட்டாதவராய் நின்ற உன் தந்தை மதுரைச் சொக்கநாதனால் (பாண்டிய மன்னனுக்கு) அளிக்கப்பட்ட அருமையான ரஸ்வதியின் இருப்பிடமான சங்கப்பலகையில் ஏறி, நான்கு திக்கிலும் உள்ள உலகத்து உயிர்களை எல்லாம் ஆராய்ந்து காக்கும் இளையோனே, பொன் போன்ற தூய உடம்பினனே, பவளம் போன்ற அழகிய சிவந்த மேனியனே, தோகை உடையதும், பச்சை நிறமானதுமான மயிலின் மீது ஏறும் கடவுளே, அருள்வடிவோனே, இதயத் தாமரையில் பொருந்திய ஞான சொரூபனே, கருணைப் பெருமலையே, தேவர்களின் பெருமாளே. |
|
| Audio/Video Link(s) |
மனகபாட ... கதவால் அடைக்கப்பட்டது போன்ற ரகசிய மனம் உள்ளவர்களும், பாடீர தன தராதரா ரூப ... சந்தனப் பூச்சு அப்பிய மலை போன்ற மார்பகமுள்ள உருவத்தாரும், மதன ராச ராசீப சரகோப ... மன்மத ராஜனின் தாமரைமலர் அம்பு பாய்ந்த கோபத்துக்கு ஆளாகி, வருண பாதக அலோக ... குல வேற்றுமையால் ஏற்படும் குற்றத்தைப் பாராட்டாமல் எல்லாரோடும் சேர்பவர்களும், தருண சோபித ஆகார ... இளமை வாய்ந்த உடலைக் காட்டிக்கொண்டு இருப்பவருமான மகளிரோடு சீராடி யிதமாடிக் குனகுவேனை ... பொது மாதர்களோடு செல்வச் செருக்குடன் விளையாடியும் இன்பத்தில் திளைத்தும் காலம் கழிப்பவனும், நாணாது தனகுவேனை ... வெட்கம் இன்றிச் சரசம் செய்பவனும், வீணான குறையனேனை ... நாளை வீணாக்கும் குறையை உடையவனும், நாயேனை வினையேனைக் கொடியனேனை ... நாயைப்போன்றவனும், கொடுவினையாளனும், பொல்லாதவனும், ஓதாத குதலையேனை ... உன்னைப் போற்றிப் புகழாது வெறும் கொச்சை மொழி பேசித் திரிபவனும், நாடாத குருடனேனை ... உன்னை விரும்பித் தேடாத குருடனுமான என்னையும் நீயாள்வ தொருநாளே ... நீ ஆண்டருளும்படியான நாள் ஒன்று உண்டா? அநக வாமனாகார முநிவராக மால்தேட ... பாவமற்ற குறுமுநி வாமனராக அவதாரம் செய்த திருமால் (சிவனாரின்) பாதத்தைத் தேட அரிய தாதை தானேவ மதுரேசன் ... அவருக்கு எட்டாதவராய் நின்ற உன் தந்தை மதுரைச் சொக்கநாதனால் (பாண்டிய மன்னனுக்கு) அளிக்கப்பட்ட அரிய சாரதாபீடம் அதனிலேறி ஈடேற ... அருமையான ரஸ்வதியின் இருப்பிடமான சங்கப்பலகையில் ஏறி, அகில நாலும் ஆராயும் இளையோனே ... நான்கு திக்கிலும் உள்ள உலகத்து உயிர்களை எல்லாம் ஆராய்ந்து காக்கும் இளையோனே, கனக பாவனாகார பவள கோமளாகார ... பொன் போன்ற தூய உடம்பினனே, பவளம் போன்ற அழகிய சிவந்த மேனியனே, கலப சாமளாகார மயிலேறும் கடவுளே ... தோகை உடையதும், பச்சை நிறமானதுமான மயிலின் மீது ஏறும் கடவுளே, க்ருபாகார கமல வேதனாகார ... அருள்வடிவோனே, இதயத் தாமரையில் பொருந்திய ஞான சொரூபனே, கருணை மேருவே தேவர் பெருமாளே. ... கருணைப் பெருமலையே, தேவர்களின் பெருமாளே.
|
|
Similar songs:
244 - உடலி னூடு (திருத்தணிகை)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
435 - புலையனான (திருவருணை)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
577 - கரிபுராரி காமாரி (விராலிமலை)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
637 - அலகின் மாறு (கதிர்காமம்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
694 - கடிய வேக (திருமயிலை)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
765 - இரதமான தேன் (சீகாழி)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
912 - திரு உரூப நேராக (வயலூர்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1043 - அகல நீளம் (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1044 - அடை படாது (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1045 - அமல வாயு (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1046 - அயிலின் வாளி (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1047 - இரதமான வாய் ஊறல் (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1048 - குருதி தோலினால் (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1049 - சுருதி ஊடு கேளாது (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1050 - தொட அடாது (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1051 - நிலவில் மாரன் (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1052 - மன கபாட (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1053 - அதல சேடனாராட (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1054 - குருதி மூளை (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
Songs from this thalam பொதுப்பாடல்கள்