சிவய.திருக்கூட்டம்
sivaya.org



Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: வேதாரணியம்
839   சூழும்வினை     840   சேலை உடுத்து     841   நூலினை ஒத்த    
839   வேதாரணியம்   சூழும்வினை  
தானன தத்தத் தந்தன தந்தன ...... தனதான
சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி ...... கழிகாமஞ்
சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு ...... துணையாதே
ஏழையெ னித்துக் கங்களு டன்தின ...... முழல்வேனோ
ஏதம கற்றிச் செம்பத சிந்தனை ...... தருவாயே
ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை ...... யெழுநாளே
ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல் ...... மருகோனே
வேழமு கற்கு தம்பியெ னுந்திரு ...... முருகோனே
வேதவ னத்திற் சங்கரர் தந்தருள் ...... பெருமாளே.


சூழும்வினைக் கட்டுன்ப நெடும்பிணி.....கழிகாமஞ்
     சோரம் இதற்கு சிந்தை நினைந்து உறு.....துணையாதே
ஏழையென் இத்துக்கங்களுடன் தினம்.....உழல்வேனோ
     ஏதம் அகற்றிச் செம்பத சிந்தனை.....தருவாயே
ஆழியடைத்து இலங்கையை.....யெழுநாளே
     ஆண்மைசெலுத்தி தன்கைக் கொண்ட கரும்புயல்.....மருகோனே
வேழமுகற்கு தம்பியெனுந் திரு.....முருகோனே
     வேதவனத்திற் சங்கரர் தந்தருள்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=rI7Tro0tkyo
Add (additional) Audio/Video Link

Back to Top

840   வேதாரணியம்   சேலை உடுத்து  
தான தனத்தன தந்த தான தனத்தன தந்த
     தான தனத்தன தந்த ...... தனதான

சேலை யுடுத்துந டந்து மாலை யவிழ்த்துமு டிந்து
     சீத வரிக்குழல் கிண்டி ...... யளிமூசத்
தேனி லினிக்கமொ ழிந்து காமு கரைச்சிறை கொண்டு
     தேச மனைத்தையும் வென்ற ...... விழிமானார்
மாலை மயக்கில்வி ழுந்து காம கலைக்குளு ளைந்து
     மாலி லகப்பட நொந்து ...... திரிவேனோ
வால ரவிக்கிர ணங்க ளாமென வுற்றப தங்கள்
     மாயை தொலைத்திட வுன்ற ...... னருள்தாராய்
பாலை வனத்தில்ந டந்து நீல அரக்கியை வென்று
     பார மலைக்குள கன்று ...... கணையாலேழ்
பார மரத்திரள் மங்க வாலி யுரத்தையி டந்து
     பால்வ ருணத்தலை வன்சொல் ...... வழியாலே
வேலை யடைத்துவ ரங்கள் சாடி யரக்கரி லங்கை
     வீட ணருக்கருள் கொண்டல் ...... மருகோனே
மேவு திருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து
     வேத வனத்தில மர்ந்த ...... பெருமாளே.


சேலை உடுத்து நடந்து மாலை அவிழ்த்து முடிந்து
     சீத வரிக் குழல் கிண்டி.....அளி மூச
தேனின் இனிக்க மொழிந்து காமுகரைச் சிறை கொண்டு
     தேசம் அனைத்தையும் வென்ற.....விழி மானார்
மாலை மயக்கில் விழுந்து காம கலைக்குள் உளைந்து
     மாலில் அகப்பட நொந்து.....திரிவேனோ
வால ரவிக் கிரணங்களாம் என உற்ற பதங்கள்
     மாயை தொலைத்திட உன்றன்.....அருள் தாராய்
பாலை வனத்தில் நடந்து நீல அரக்கியை வென்று
     பார மலைக்குள் அகன்று.....கணையாலே
ஏழ் பார மரத் திரள் மங்க வாலி உரத்தை இடந்து
     பால் வருணத் தலைவன் சொல்.....வழியாலே
வேலை அடைத்து வரங்கள் சாடி அரக்கர் இலங்கை
     வீடணருக்கு அருள் கொண்டல்.....மருகோனே
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து
     வேதவனத்தில் அமர்ந்த.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

841   வேதாரணியம்   நூலினை ஒத்த  
தானன தத்த தனந்த தானன தத்த தனந்த
     தானன தத்த தனந்த ...... தனதான

நூலினை யொத்த மருங்குல் தேரினை யொத்த நிதம்பம்
     நூபுர மொய்த்த பதங்கள் ...... இவையாலும்
நூறிசை பெற்ற பதங்கொள் மேருவை யொத்த தனங்கள்
     நூல்வல்ம லர்ப்பொ ருதுண்டம் ...... அவையாலும்
சேலினை யொத்தி டுகண்க ளாலும ழைத்தி டுபெண்கள்
     தேனிதழ் பற்று மொரின்ப ...... வலைமூழ்கிச்
சீலம னைத்து மொழிந்து காமவி தத்தி லழுந்தி
     தேறுத வத்தை யிழந்து ...... திரிவேனோ
வாலஇ ளப்பி றைதும்பை யாறுக டுக்கை கரந்தை
     வாசுகி யைப்பு னைநம்பர் ...... தருசேயே
மாவலி யைச்சி றைமண்ட ஓரடி யொட்டி யளந்து
     வாளிப ரப்பி யிலங்கை ...... யரசானோன்
மேல்முடி பத்து மரிந்து தோளிரு பத்து மரிந்து
     வீரமி குத்த முகுந்தன் ...... மருகோனே
மேவுதி ருத்த ணிசெந்தில் நீள்பழ நிக்கு ளுகந்து
     வேதவ னத்தி லமர்ந்த ...... பெருமாளே.


நூலினை ஒத்த மருங்குல் தேரினை ஒத்த நிதம்பம்
     நூபுரம் மொய்த்த பதங்கள்.....இவையாலும்
நூறு இசை பெற்ற பதம் கொள் மேருவை ஒத்த தனங்கள்
     நூல் வல் மலர்ப் பொரு துண்டம்.....அவையாலும்
சேலினை ஒத்திடு கண்களாலும் அழைத்திடு(ம்) பெண்கள்
     தேன் இதழ் பற்றும் ஒர் இன்ப.....வலை மூழ்கிச்
சீலம் அனைத்தும் ஒழிந்து காம விதத்தில் அழுந்தி
     தேறு தவத்தை இழந்து.....திரிவேனோ
வால இளப் பிறை தும்பை ஆறு கடுக்கை கரந்தை
     வாசுகியைப் புனை நம்பர்.....தரு சேயே
மாவலியைச் சிறை மண்ட ஓர் அடி ஒட்டி அளந்து
     வாளி பரப்பி இலங்கை.....அரசானோன்
மேல் முடி பத்தும் அரிந்து தோள் இரு பத்தும் அரிந்து
     வீரம் மிகுத்த முகுந்தன்.....மருகோனே
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து
     வேத வனத்தில் அமர்ந்த.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top


This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group