சிவய.திருக்கூட்டம்
sivaya.org



Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: விருத்தாசலம்
750   குடத் தாமரையாம்     751   திருமொழி     752   பசை அற்ற உடல்    
750   விருத்தாசலம்   குடத் தாமரையாம்  
தனத்தானன தானன தானன
     தனத்தானன தானன தானன
          தனத்தானன தானன தானன ...... தனதான

குடத்தாமரை யாமென வேயிரு
     தனத்தார்மதி வாணுத லாரிருள்
          குழற்காடின மாமுகில் போல்முது ...... கலைமோதக்
குலக்கார்மயி லாமென வேகயல்
     விழித்தார்கர மேல்கொடு மாமுலை
          குடத்தியாழ்கிளி யாமென வேகுயில் ...... குரலோசை
படித்தார்மயி லாமென வேநடை
     நெளித்தார்பல காமுகர் வார்கலை
          பழிப்பாரவ ராசையை மேல்கொடு ...... விலைமாதர்
படிக்கார்மின லாமென வேநகை
     புரித்தார்பலர் வாயிதழ் சேர்பொருள்
          பறிப்பார்பழி காரிகள் நாரிக ...... ளுறவாமோ
அடைத்தார்கட லோர்வலி ராவண
     குலத்தோடரி யோர்சர னார்சின
          மழித்தார்முகி லேய்நிற ராகவர் ...... மருகோனே
அறுத்தாரய னார்தலை யேபுர
     மெரித்தாரதி லேபுல னாருயி
          ரளித்தாருடல் பாதியி லேயுமை ...... அருள்பாலா
விடத்தாரசு ரார்பதி வேரற
     அடித்தாய்கதிர் வேல்கொடு சேவகம்
          விளைத்தாய்குடி வாழம ரோர்சிறை ...... மிடிதீர
விழித்தாமரை போலழ காகுற
     மகட்கானவ ணாஎன தாயுறை
          விருத்தாசலம் வாழ்மயில் வாகன ...... பெருமாளே.


குடத் தாமரையாம் எனவே இரு
     தனத்தார் மதி வாள் நுதலார் இருள்
        குழல் காடின மா முகில் போல் முதுகு.....அலைமோத
குலக் கார் மயிலாம் எனவே கயல்
     விழித் தார் கரம் மேல் கொடு மா முலை
        குடத்து யாழ் கிளியாம் எனவே குயில்.....குரலோசை
படித்தார் மயிலாம் எனவே நடை
     நெளித்தார் பல காமுகர் வார் கலை
        பழிப்பாரவர் ஆசையை மேல்கொடு.....விலைமாதர்
படிக் கார் மி(ன்)னலாம் எனவே நகை
     புரித்தார் பலர் வாய் இதழ் சேர் பொருள்
        பறிப்பார் பழிகாரிகள் நாரிகள்.....உறவாமோ
அடைத்தார் கடல் ஓர் வலி ராவண
     குலத்தோடு அரி ஓர் சரனார் சினம்
        அழித்தார் முகில் ஏய் நிற ராகவர்.....மருகோனே
அறுத்தார் அயனார் தலையே புரம்
     எரித்தார் அதிலே புலனார் உயிர்
        அளித்தார் உடல் பாதியிலே உமை.....அருள்பாலா
விடத்தார் அசுரார் பதி வேர் அற
     அடித்தாய் கதிர் வேல் கொடு சேவகம்
        விளைத்தாய் குடி வாழ அமரோர் சிறை.....மிடி தீர
விழித் தாமரை போல் அழகா குற
     மகட்கு ஆன வ(ண்)ணா என(து) தாய் உறை
        விருத்தாசலம் வாழ் மயில் வாகன.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

751   விருத்தாசலம்   திருமொழி  
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான

திருமொழி யுரைபெற அரனுன துழிபணி
     செயமுன மருளிய ...... குளவோனே
திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு
     தெறிபட மறுகிட ...... விடுவோனே
ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி
     னுறுபட ருறுமெனை ...... யருள்வாயோ
உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில்
     ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா
கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்
     கணினெதிர் தருவென ...... முனமானாய்
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
     கருணையில் மொழிதரு ...... முதல்வோனே
முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட
     முரணுறு மசுரனை ...... முனிவோனே
முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்
     முதுகிரி வலம்வரு ...... பெருமாளே.


திருமொழி யுரைபெற அரன் உனதுழி பணி
     செய முனம் அருளிய.....குளவோனே
திறலுயர் மதுரையில் அமணரை உயிர்கழு
     தெறிபட மறுகிட.....விடுவோனே
ஒருவு அரும் உனதருள் பரிவிலர் அவர்களின்
     உறு படர் உறுமெனை.....யருள்வாயோ
உலகினில் அனைவர்கள் புகழ்வுற அருணையில்
     ஒருநொடி தனில்வரு.....மயில்வீரா
கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்
     கணினெதிர் தருவென.....முனமானாய்
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
     கருணையில் மொழிதரு.....முதல்வோனே
முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட
     முரணுறு மசுரனை.....முனிவோனே
முடிபவர் வடிவறு சுசிகர முறை
     தமிழ் முதுகிரி வலம்வரு.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Tk8dbT1WM10
Add (additional) Audio/Video Link

Back to Top

752   விருத்தாசலம்   பசை அற்ற உடல்  
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
     தனதத்த தனதத்த ...... தனதான

பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி
     பறியக்கை சொறியப்பல் ...... வெளியாகிப்
படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க
     பழமுற்று நரைகொக்கி ...... னிறமாகி
விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு
     மெலிவுற்று விரல்பற்று ...... தடியோடே
வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை
     விடுவித்து னருள்வைப்ப ...... தொருநாளே
அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி
     னடல்வஜ்ர கரன்மற்று ...... முளவானோர்
அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய்
     அதுலச்ச மரவெற்றி ...... யுடையோனே
வசையற்று முடிவற்று வளர்பற்றி னளவற்ற
     வடிவுற்ற முகில்கிட்ணன் ...... மருகோனே
மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர்
     வளர் விர்த்த கிரியுற்ற ...... பெருமாளே.


பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி
     பறியக் கை சொறியப் பல்.....வெளியாகி
படலைக்கு விழி கெட்ட குருடு உற்று மிக நெக்க
     பழம் உற்று நரை கொக்கின்.....நிறமாகி
விசை பெற்று வரு பித்தம் வளியைக் கண் நிலை கெட்டு
     மெலிவு உற்று விரல் பற்று.....தடியோடே
வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை
     விடுவித்து உன் அருள் வைப்பது.....ஒரு நாளே
அசைவு அற்ற நிருதர்க்கு மடி உற்ற பிரியத்தில்
     அடல் வஜ்ர கரன் மற்றும்.....உள வானோர்
அளவு அற்ற மலர் விட்டு நிலம் உற்று மறையச் செய்
     அதுலச் சமர வெற்றி.....உடையோனே
வசை அற்று முடிவு அற்று வளர் பற்றின் அளவு அற்ற
     வடிவு உற்ற முகில் கிட்ணன்.....மருகோனே
மதுரச் செம் மொழி செப்பி அருள் பெற்ற சிவ பத்தர்
     வளர் விர்த்த கிரி உற்ற.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Wed, 24 Jun 2026 06:31:58 +0000