| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: விராலிமலை
568 சீரான கோல கால 569 பாதாள மாதி லோக 570 இலாபமில் 571 நிராமய புராதன 572 இதமுறு விரைபுனல் 573 உருவேறவே ஜெபித்து 574 எதிரெதிர் கண்டோடி 575 ஐந்து பூதமும் 576 கரதல முங்குறி 577 கரிபுராரி காமாரி 578 காம அத்திரமாகி 579 கொடாதவனை 580 மாயா சொரூபம் 581 மாலாசை கோபம் 582 மேகம் எனும் குழல் 583 மோதி இறுகி
568
விராலிமலை சீரான கோல கால தானான தான தான தனதன
தானான தான தான தனதன
தானான தான தான தனதன ...... தனதான
சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ...... ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர ...... குருநாதா
கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மாறு பாநு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு ...... மருகோனே
கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே.
சீரான கோலகால நவ மணி
மால் அபிஷேக பார வெகு வித
தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளும் நீளும் வரி அளி
சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும்
ஆராத காதல் வேடர் மட மகள்
ஜீமூதம் ஊர் வலாரி மட மகள்
ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும்
ஆராயும் நீதி வேலும் மயிலும் மெய்ஞ்
ஞான அபிராம தாப வடிவமும்
ஆபாதனேனும் நாளும் நினைவது பெற வேணும்
ஏர் ஆரும் மாட கூட மதுரையில்
மீது ஏறி மாறி ஆடும் இறையவர்
ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம்
ஈடாய ஊமர் போல வணிகரில்
ஊடாடி ஆலவாயில் விதி செய்த
லீலா விசார தீர வரதர குருநாதா
கூர் ஆழியால் முன் வீய நினைபவன்
ஈடேறு மாறு பாநு மறைவு செய்
கோபாலராய நேயம் உள திரு மருகோனே
கோடாமல் ஆரவார அலை எறி
காவேரி ஆறு பாயும் வயலியில்
கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=DcmTxBCt4bE
Add (additional) Audio/Video Link
569
விராலிமலை பாதாள மாதி லோக தானான தான தான தனதன
தானான தான தான தனதன
தானான தான தான தனதன ...... தனதான
பாதாள மாதி லோக நிகிலமு
மாதார மான மேரு வெனவளர்
பாடீர பார மான முலையினை ...... விலைகூறிப்
பாலோடு பாகு தேனெ னினியசொ
லாலேய நேக மோக மிடுபவர்
பாதாதி கேச மாக வகைவகை ...... கவிபாடும்
வேதாள ஞான கீனன் விதரண
நாதானி லாத பாவி யநிஜவன்
வீணாள்ப டாத போத தவமிலி ...... பசுபாச
வ்யாபார மூடன் யானு முனதிரு
சீர்பாத தூளி யாகி நரகிடை
வீழாம லேசு வாமி திருவருள் ...... புரிவாயே
தூதாள ரோடு காலன் வெருவிட
வேதாமு ராரி யோட அடுபடை
சோராவ லாரி சேனை பொடிபட ...... மறைவேள்விச்
சோமாசி மார்சி வாய நமவென
மாமாய வீர கோர முடனிகல்
சூர்மாள வேலை யேவும் வயலியி ...... லிளையோனே
கூதாள நீப நாக மலர்மிசை
சாதாரி தேசி நாம க்ரியைமுதல்
கோலால நாத கீத மதுகர ...... மடர்சோலை
கூராரல் தேரு நாரை மருவிய
கானாறு பாயு மேரி வயல்பயில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே.
பாதாளம் ஆதி லோக நிகிலமும்
ஆதாரமான மேரு என வளர்
பாடீர பாரமான முலையினை விலை கூறி
பாலோடு பாகு தேன் என இனிய சொ(ல்)
லாலே அநேக மோகம் இடுபவர்
பாத(ம்) ஆதி கேசமாக வகை வகை கவி பாடும்
வேதாளன் ஞான கீனன் விதரண
நா தான் இலாத பாவி அநிஜவன்
வீண் நாள் படாத போத தவம் இலி பசுபாச
வ்யாபார மூடன் யானும் உனது இரு
சீர் பாத தூளியாகி நரகு இடை
வீழாமலே சுவாமி திருவருள் புரிவாயே
தூதாளர் ஓடு காலன் வெருவிட
வேதா முராரி ஓட அடு படை
சோரா வலாரி சேனை பொடி பட மறை வேள்வி
சோமாசிமார் சிவாய நம என
மா மாய வீர கோரமுடன் இகல்
சூர் மாள வேலை ஏவும் வயலியில் இளையோனே
கூதாள நீப நாக மலர் மிசை
சாதாரி தேசி நாமக்ரியை முதல்
கோலால நாத கீத மதுகரம் அடர் சோலை
கூர் ஆரல் தேரு(ம்) நாரை மருவிய
கான் ஆறு பாயும் ஏரி வயல் பயில்
கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே.
Add (additional) Audio/Video Link
570
விராலிமலை இலாபமில் தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதன தனாதனன ...... தனதான
இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன
ரியாவரு மிராவுபக ...... லடியேனை
இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு
மிலானிவ னுமாபுருஷ ...... னெனஏய
சலாபவ மலாகர சசீதர விதாரண
சதாசிவ மயேசுரச ...... கலலோக
சராசர வியாபக பராபர மநோலய
சமாதிய நுபூதிபெற ...... நினைவாயே
நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன
நியாயப ரிபாலஅர ...... நதிசூடி
நிசாசர குலாதிப திராவண புயாரிட
நிராமய சரோருகர ...... னருள்பாலா
விலாசுகம் வலாரெனு முலாசவி தவாகவ
வியாதர்கள் விநோதமகள் ...... மணவாளா
விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை
விராலிம லைமீதிலுறை ...... பெருமாளே.
இலாபமில் பொ(ல்)லாவுரை சொலாமன தபோதனர்
இயாவரும் இராவுபகல் அடியேனை
இராகமும் விநோதமும் உலோபமுடன்மோகமும்
இலான் இவனு மாபுருஷன் எனஏய
சலாப அமலாகர சசீதர விதாரண
சதாசிவ மயேசுர சகலலோக சராசர வியாபக
பராபர மநோலய சமாதி யநுபூதிபெற நினைவாயே
நிலாவிரி நிலாமதி நிலாத அநில அசன
நியாயப ரிபாலஅர
நதிசூடி
நிசாசர குலாதிபதி ராவண புயாரிட
நிராமய சரோருக அரன் அருள்பாலா
வில் ஆசுகம் வலாரெனும் உலாச இத ஆகவ
வியாதர்கள் விநோதமகள் மணவாளா
விராவு வயலார்புரி சிராமலை பிரான்மலை
விராலிமலைமீதிலுறை பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=tEILBLs6HOg
Add (additional) Audio/Video Link
571
விராலிமலை நிராமய புராதன தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதன தனாதனத் ...... தனதான
நிராமய புராதன பராபர வராம்ருத
நிராகுல சிராதிகப் ...... ப்ரபையாகி
நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய
நிராயுத புராரியச் ...... சுதன்வேதா
சுராலய தராதல சராசர பிராணிகள்
சொரூபமி வராதியைக் ...... குறியாமே
துரால்புகழ் பராதின கராவுள பராமுக
துரோகரை தராசையுற் ...... றடைவேனோ
இராகவ இராமன்முன் இராவண இராவண
இராவண இராஜனுட் ...... குடன்மாய்வென்
றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை
யிராஜசொ லவாரணர்க் ...... கிளையோனே
விராகவ சுராதிப பொராதுத விராதடு
விராயண பராயணச் ...... செருவூரா
விராவிய குராவகில் பராரைமு திராவளர்
விராலிம லைராஜதப் ...... பெருமாளே.
நிராமய புராதன பராபர வராம்ருத
நிராகுல சிராதிகப் ப்ரபையாகி
நிராச சிவராஜ தவராஜர்கள் பராவிய
நிராயுத புர அரி அச்சுதன்வேதா
சுராலய தராதல சர அசர பிராணிகள்
சொரூபமிவர் ஆதியைக் குறியாமே
துரால்புகழ் பர ஆதின கராவுள பராமுக
துரோகரை தராசையுற்று அடைவேனோ
இராகவ இராமன் முன் இராவண இராவண
இராவண இராஜன் உட்குடன்மாய் வென்ற
இராகன்மலர் ஆள் நிஜ புராணர் குமரா
கலை இராஜ சொலவாரணர்க்கு இளையோனே
விராகவ சுராதிப பொராது தவிராது அடு
விராயண பராயண செருவூரா
விராவிய குராவகில் பராரை முதிராவளர்
விராலிமலை ராஜதப் பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=GdpDAhT95tU
https://www.youtube.com/watch?v=8HXfCAvv7Y8
Add (additional) Audio/Video Link
572
விராலிமலை இதமுறு விரைபுனல் தனதன தனதன தனன தனதன
தனதன தனதன தனன தனதன
தத்ததன தந்ததன தத்ததன தந்ததன
தனதன தனதன தனன தனதன
தனதன தனதன தனன தனதன
தத்ததன தந்ததன தத்ததன தந்ததன
தனதன தனதன தனன தனதன
தனதன தனதன தனன தனதன
தத்ததன தந்ததன தத்ததன தந்ததன ...... தனதான
இதமுறு விரைபுனல் முழுகி யகில்மண
முதவிய புகையினி லளவி வகைவகை
கொத்தலர்க ளின்தொடையல் வைத்துவளர் கொண்டலென
அறலென இசையளி யெனந ளிருளென
நிறமது கருகிநெ டுகிநெ றிவுபட
நெய்த்துமுசு வின்திரிகை யொத்தசுருள் குந்தளமும்
இலகிய பிறையென எயினர் சிலையென
விலகிய திலதநு தலும திமுகமும்
உற்பலமும் வண்டுவடு விற்கணைய மன்படரு ...... முனைவாளும்
இடர்படு கவுநடு வனும்வ லடல்பொரு
கடுவது மெனநெடி தடுவ கொடியன
இக்குசிலை கொண்டமதன் மெய்த்தவநி றைந்தவிழி
தளவன முறுவலு மமுத குமுதமும்
விளைநற வினியமொ ழியுமி னையதென
ஒப்பறுந கங்கள்விரல் துப்பெனவு றைந்துகமு
கிடியொடி படவினை செயும்வின் மதகலை
நெடியக வுடியிசை முரலு சுரிமுக
நத்தனைய கண்டமும்வெண் முத்துவிளை விண்டனைய ...... எழில்தோளும்
விதரண மனவித னமதை யருள்வன
சததள மறைமுகி ழதனை நிகர்வன
புத்தமிர்து கந்தகுடம் வெற்பெனநி ரம்புவன
இமசல ம்ருகமத களப பரிமள
தமனிய ப்ரபைமிகு தருண புளகித
சித்ரவர மங்கலவி சித்ரவிரு துங்ககன
விகலித மிருதுள ம்ருதுள நவமணி
முகபட விகடின தனமு முயர்வட
பத்திரமி ருந்தகடி லொத்தசுழி யுந்தியுள ...... மதியாத
விபரித முடையிடை யிளைஞர் களைபட
அபகட மதுபுரி யரவ சுடிகைய
ரத்நபண மென்பவழ குற்றவரை யும்புதிய
நுணியத ளிரெனவு லவிய பரிபுர
அணிநட னபதமு முடைய வடிவினர்
பொற்கலவி யின்பமதி துக்கமென லன்றியவர்
விரகினி லெனதுறு மனம துருகிய
பிரமையு மறவுன தருள்கை வரவுயர்
பத்திவழி யும்பரம முத்திநெறி யுந்தெரிவ ...... தொருநாளே
தததத தததத ததத தததத
திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி
தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி
டகுடகு டிகுடிகு டகுகு டிகுடிகு
டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு
தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு
தமிதமி தமிதக தமித திமிதக
திமிதிமி செககண திமித திகதிக
தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி ...... யெனவேதான்
தபலைகு டமுழவு திமிலை படகம
தபுதச லிகைதவில் முரசு கரடிகை
மத்தளித வண்டையற வைத்தகுணி துந்துமிகள்
மொகுமொகு மொகுவென அலற விருதுகள்
திகுதிகு திகுவென அலகை குறளிகள்
விக்கிடநி ணம்பருக பக்கியுவ ணங்கழுகு
சதிர்பெற அதிர்தர உததி சுவறிட
எதிர்பொரு நிருதர்கள் குருதி பெருகிட
வப்புவின்மி தந்தெழுப தற்புதக வந்தமெழ ...... வெகுகோடி
மதகஜ துரகர தமுமு டையபுவி
யதலமு தல்முடிய இடிய நெடியதொர்
மிக்கொலிமு ழங்கஇரு ளக்கணம்வி டிந்துவிட
இரவியு மதியமு நிலைமை பெறஅடி
பரவிய அமரர்கள் தலைமை பெறஇயல்
அத்திறல ணங்குசெய சத்திவிடு கந்ததிரு
வயலியி லடிமைய குடிமை யினலற
மயலொடு மலமற அரிய பெரியதி
ருப்புகழ்வி ளம்புவென்மு னற்புதமெ ழுந்தருள்கு ...... கவிராலி
மலையுறை குரவந லிறைவ வருகலை
பலதெரி விதரண முருக சரவண
உற்பவக்ர வுஞ்சகிரி நிக்ரகஅ கண்டமய
நிருபவி மலசுக சொருப பரசிவ
குருபர வெளிமுக டுருவ வுயர்தரு
சக்ரகிரி யுங்குலைய விக்ரமந டம்புரியு
மரகத கலபமெ ரிவிடு மயில்மிசை
மருவியெ யருமைய இளமை யுருவொடு
சொர்க்கதல மும்புலவர் வர்க்கமும்வி ளங்கவரு ...... பெருமாளே.
இதம் உறு விரை புனல் முழுகிய அகில் மணம் உதவிய
புகையினில் அளவி வகை வகை கொத்து அலர்களின்
தொடையல் வைத்து
வளர் கொண்டல் என அறல் என இசை அளி என நள் இருள்
என நிறம் அது கருகி நெடுகி நெறிவு பட நெய்த்து முசுவின்
திரிகை ஒத்த சுருள் குந்தளமும்
இலகிய பிறை என எயினர் சிலை என விலகிய திலத
நுதலு(ம்) மதி முகமும் உற்பலமும்
வண்டு வடு வில் கணை யமன் படரு(ம்) முனை வாளும் இடர்
படு(க்)கவு(ம்) நடுவனும் வல் அடல் பொரு கடுவதும் என
நெடிது அடுவ கொடியன இக்கு சிலை கொண்ட மதன் மெய்த்
தவநிறைந்த விழி
தளவன முறுவலும் அமுத குமுதமும் விளை நறவு இனிய
மொழியும் இனையது என ஒப்பு அற நகங்கள் விரல் துப்பு
என உறைந்து
கமுகு இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய
கவுடி இசை முரலும் சுரி முக நத்து அனைய கண்டமும்
வெண்முத்து விளை விண்டு அனைய எழில் தோளும்
விதரண(ம்) மன விதனம் அதை அருள்வன சத தள மறை
முகிழ் அதனை நிகர்வன புத்த அமிர்து கந்த குடம் வெற்பு
என நிரம்புவன
இமம் சலம் ம்ருகமத களப பரிமள தமனிய ப்ரபை மிகு தருண
புளகித சித்ர வர மங்கல விசித்ர இரு துங்க கன விகலித
மிருதுள ம்ருதுள நவ மணி முக பட விகடின தனமும்
உயர் வட பத்திரம் இருந்த அகடில் ஒத்த சுழி உந்தி உள
மதியாத விபரிதம் உடை இடை இளைஞர் களை பட
அபகடம் அது புரி அரவ சுடிகைய ரத்ன பணம் என்ப
அழகுற்ற அரையும் புதிய நு(ண்)ணிய தளிர் என உலவிய
பரிபுர(ம்) அணி நடன பதமும் உடைய வடிவினர் பொன்
கலவி இன்பம் அதி துக்கம் எனல் அன்றி
அவர் விரகினில் எனது உறு மனம் அது உருகிய பிரமையும்
அற உனது அருள் கை வர உயர் பத்தி வழியும் பரம முத்தி
நெறியும் தெரிவது ஒரு நாளே
தததத தததத ததத தததத
திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி
தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி
டகுடகு டிகுடிகு டகுகு டிகுடிகு
டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு
தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு
தமிதமி தமிதக தமித திமிதக
திமிதிமி செககண திமித திகதிக
தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி ......
எனவேதான்
தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத ச(ல்)லிகை
தவில் முரசு கரடிகை மத்தளி தவண்டை அறவைத் தகுணி
துந்துமிகள் மொகுமொகு மொகு என அலற
விருதுகள் திகுதிகு திகு என அலகை குறளிகள் விக்கிட
நிணம் பருக பக்கி உவணம் கழுகு சதிர் பெற அதிர் தர உததி
சுவறிட எதிர் பொரு நிருதர்கள் குருதி பெருகிட
அப்புவின் மிதந்து எழுபது அற்புத கவந்தம் எழ வெகு கோடி
மத கஜ துரக ரதமும் உடைய புவி அதல முதல் முடிய இடிய
நெடியது ஒர் மிக்க ஒலி முழங்க இருள் அக்கணம் விடிந்து
விட
இரவியும் மதியமும் நிலைமை பெற அடி பரவிய அமரர்கள்
தலைமை பெற இயல் அத்திறல் அணங்கு செய சத்தி விடு
கந்த
திருவயலியில் அடிமைய குடிமை இ(ன்)னல் அற மயலொடு
மலம் அற அரிய பெரிய திருப்புகழ் விளம்பு என் முன்
அற்புதம் எழுந்தருள் குக
விராலி மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி
விதரண முருக சரவண உற்பவ க்ரவுஞ்ச கிரி நிக்ரக அகண்ட
மய நிருப விமல சுக சொருப பரசிவ குருபர
வெளி முகடு உருவ உயர் தரு சக்ர கிரியும் குலைய விக்ரம
நடம் புரியு(ம்) மரகத கலபம் எரி விடு மயில் மிசை
மருவியெ
அருமைய இளமை உருவொடு சொர்க்க தலமும் புலவர்
வர்க்கமும் விளங்க வரு பெருமாளே. Add (additional) Audio/Video Link
573
விராலிமலை உருவேறவே ஜெபித்து தனதான தான தத்த தனதான தான தத்த
தனதான தான தத்த ...... தந்ததான
உருவேற வேஜெ பித்து வொருகோடி யோம சித்தி
யுடனாக ஆக மத்து ...... கந்துபேணி
உணர்வாசை யாரி டத்து மருவாது வோரெ ழுத்தை
யொழியாது வூதை விட்டி ...... ருந்துநாளும்
தரியாத போத கத்தர் குருவாவ ரோரொ ருத்தர்
தருவார்கள் ஞான வித்தை ...... தஞ்சமாமோ
தழலாடி வீதி வட்ட மொளிபோத ஞான சித்தி
தருமாகி லாகு மத்தை ...... கண்டிலேனே
குருநாடி ராச ரிக்கர் துரியோத னாதி வர்க்க
குடிமாள மாய விட்டு ...... குந்திபாலர்
குலையாமல் நீதி கட்டி யெழுபாரை யாள விட்ட
குறளாக னூறில் நெட்டை ...... கொண்டஆதி
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர
மலைமே லுலாவு சித்த ...... அங்கைவேலா
மதுரா புரேசர் மெய்க்க அரசாளு மாறன் வெப்பு
வளைகூனை யேநி மிர்த்த ...... தம்பிரானே.
உரு ஏறவே ஜெபித்து ஒரு கோடி ஓமம் சித்தி உடனாக
ஆகமத்து உகந்து பேணி உணர்வு ஆசை யாரிடத்தும்
மருவாது
ஓர் எழுத்தை ஒழியாது ஊதை விட்டு இருந்து நாளும்
தரியாத போதகத்தர் குருவாவர்
ஓரொருத்தர் தருவார்கள் ஞான வித்தை தஞ்சம் ஆமோ
தழலாடி வீதி வட்டம் ஒளி போத ஞான சித்தி தருமாகில்
ஆகும் அத்தை கண்டு இலேனே
குரு நாடி இராசரிக்கர் துரியோதனாதி வர்க்க குடிமாள மாய
விட்டு
குந்தி பாலர் குலையாமல் நீதி கட்டி எழு பாரை ஆள விட்ட
குறளாக(ன்) ஊறு இல் நெட்டை கொண்ட ஆதி மருகா
புராரி சித்தன் மகனே விராலி சித்ர மலை மேல் உலாவு சித்த
அம் கை வேலா
மதுராபுரேசர் மெய்க்க அரசாளும் மாறன் வெப்பு
வளை கூனையே நிமிர்த்த தம்பிரானே. Add (additional) Audio/Video Link
574
விராலிமலை எதிரெதிர் கண்டோடி தனதனனந் தான தாத்த தனதனனந் தான தாத்த
தனதனனந் தான தாத்த ...... தனதான
எதிரெதிர்கண் டோடி யாட்கள் களவதறிந் தாசை பூட்டி
இடறிவிழும் பாழி காட்டு ...... மடமாதர்
இறைவைகொளுங் கூவல் மூத்த கறையொழுகுந் தாரை பார்க்கி
லிளமைகொடுங் காத லாற்றில் ...... நிலையாத
அதிவிகடம் பீழ லாற்ற அழுகிவிழும் பீற லூத்தை
அடையுமிடஞ் சீலை தீற்று ...... கருவாயில்
அருவிசலம் பாயு மோட்டை அடைவுகெடுந் தூரை பாழ்த்த
அளறிலழுந் தாம லாட்கொ ...... டருள்வாயே
விதுரனெடுந் த்ரோண மேற்று எதிர்பொருமம் பாதி யேற்றி
விரகினெழுந் தோய நூற்று ...... வருமாள
விரவுஜெயன் காளி காட்டில் வருதருமன் தூத னீற்ற
விஜயனெடும் பாக தீர்த்தன் ...... மருகோனே
மதியணையுஞ் சோலை யார்த்து மதிவளசந் தான கோட்டின்
வழியருளின் பேறு காட்டி ...... யவிராலி
மலைமருவும் பாதி யேற்றி கடிகமழ்சந் தான கோட்டில்
வழியருளின் பேறு காட்டு ...... பெருமாளே.
எதிர் எதிர் கண்டு ஓடி ஆட்கள் களவு அது அறிந்து ஆசை
பூட்டி இடறி விழும் பாழி காட்டு(ம்) மடமாதர் இறைவை
கொளும் கூவல்
மூத்த கறை ஒழுகும் தாரை பார்க்கில் இளமை கொடும் காதல்
ஆற்றில் நிலையாத அதி விகடம் பீழல் ஆற்ற அழுகிவிடும்
பீறல் ஊத்தை அடையும் இடம்
சீலை தீற்று(ம்) கரு வாயில் அருவி சலம் பாயும் ஓட்டை
அடைவு கெடும் தூரை பாழ்த்த அளறில் அழுந்தாமல் ஆட்
கொ(ண்)டு அருள்வாயே
விதுரன் நெடும் த்ரோணம் ஏற்று எதிர் பொரும் அம்பு ஆதி
ஏற்றி விரகின் எழுந்து ஓய நூற்றுவரு(ம்) மாள விரவு ஜெயன்
காளி காட்டில் வரு தருமன் தூதன் நீற்ற விஜயன் நெடும்
பாக தீர்த்தன் மருகோனே
மதி அணையும் சோலை ஆர்த்தும் அதி வள சந்தான
கோட்டின் வழி அருளி இன் பேறு காட்டிய விராலி மலை
மருவும்
பாதி ஏற்றி கடி கமழ் சந்தான கோட்டில் வழி அருளின் பேறு
காட்டு(ம்) பெருமாளே. Add (additional) Audio/Video Link
575
விராலிமலை ஐந்து பூதமும் தந்த தானன தான தனதன
தந்த தானன தான தனதன
தந்த தானன தான தனதன ...... தனதான
ஐந்து பூதமு மாறு சமயமு
மந்த்ர வேதபு ராண கலைகளும்
ஐம்ப தோர்வித மான லிபிகளும் ...... வெகுரூப
அண்ட ராதிச ராச ரமுமுயர்
புண்ட ரீகனு மேக நிறவனும்
அந்தி போலுரு வானு நிலவொடு ...... வெயில்காலும்
சந்த்ர சூரியர் தாமு மசபையும்
விந்து நாதமு மேக வடிவம
தன்சொ ரூபம தாக வுறைவது ...... சிவயோகம்
தங்க ளாணவ மாயை கருமம
லங்கள் போயுப தேச குருபர
சம்ப்ர தாயமொ டேயு நெறியது ...... பெறுவேனோ
வந்த தானவர் சேனை கெடிபுக
இந்த்ர லோகம்வி பூதர் குடிபுக
மண்டு பூதப சாசு பசிகெட ...... மயிடாரி
வன்கண் வீரிபி டாரி ஹரஹர
சங்க ராஎன மேரு கிரிதலை
மண்டு தூளெழ வேலை யுருவிய ...... வயலூரா
வெந்த நீறணி வேணி யிருடிகள்
பந்த பாசவி கார பரவச
வென்றி யானச மாதி முறுகுகல் ...... முழைகூடும்
விண்டு மேல்மயி லாட இனியக
ளுண்டு காரளி பாட இதழிபொன்
விஞ்ச வீசுவி ராலி மலையுறை ...... பெருமாளே.
ஐந்து பூதமும்
ஆறு சமயமு
மந்த்ர வேத புராண கலைகளும்
ஐம்பதோர்விதமான லிபிகளும்
வெகுரூப அண்டர் ஆதி சராசரமும்
உயர் புண்டரீகனு மேக நிறவனும்
அந்தி போலுருவானு
நிலவொடு வெயில்காலும்
சந்த்ர சூரியர் தாமும்
அசபையும்
விந்து நாதமும்
ஏக வடிவம்
அதன்சொரூபம் அதாக வுறைவது சிவயோகம்
தங்கள் ஆணவ மாயை கரும மலங்கள் போய்
உப தேச குருபர சம்ப்ரதாயமொடு
ஏயு நெறியது பெறுவேனோ
வந்த தானவர் சேனை கெடிபுக
இந்த்ர லோகம் விபூதர் குடிபுக
மண்டு பூத பசாசு பசிகெட
மயிடாரி வன்கண் வீரி பிடாரி
ஹரஹர சங்கராஎன
மேரு கிரிதலை மண்டு தூளெழ
வேலை யுருவிய வயலூரா
வெந்த நீறணி வேணி யிருடிகள்
பந்த பாச விகார பரவச வென்றியான
ச மாதி முறுகுகல் முழைகூடும்
விண்டு மேல்மயி லாட
இனியகள் உண்டு காரளி பாட
இதழிபொன் விஞ்ச வீசு
விராலி மலையுறை பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=8qcWTFkOcwY
Add (additional) Audio/Video Link
576
விராலிமலை கரதல முங்குறி தனதன தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன ...... தனதான
கரதல முங்குறி கொண்ட கண்டமும்
விரவியெ ழுந்துசு ருண்டு வண்டடர்
கனவிய கொண்டைகு லைந்த லைந்திட ...... அதிபாரக்
களபசு கந்தமி குந்த கொங்கைக
ளிளகமு யங்கிம யங்கி யன்புசெய்
கனியித ழுண்டுது வண்டு பஞ்சணை ...... மிசைவீழா
இரதம ருந்தியு றுங்க ருங்கயல்
பொருதுசி வந்துகு விந்தி டும்படி
யிதவிய வுந்தியெ னுந்த டந்தனி ...... லுறமூழ்கி
இனியதொ ரின்பம்வி ளைந்த ளைந்துபொய்
வனிதையர் தங்கள்ம ருங்கி ணங்கிய
இளமைகி ழம்படு முன்ப தம்பெற ...... வுணர்வேனோ
பரதசி லம்புபு லம்பு மம்பத
வரிமுக எண்கினு டன்கு ரங்கணி
பணிவிடை சென்றுமு யன்ற குன்றணி ...... யிடையேபோய்ப்
பகடியி லங்கைக லங்க அம்பொனின்
மகுடசி ரந்தச முந்து ணிந்தெழு
படியுந டுங்கவி ழும்ப னம்பழ ...... மெனவாகும்
மருதமு தைந்தமு குந்த னன்புறு
மருககு விந்தும லர்ந்த பங்கய
வயலியில் வம்பவிழ் சண்ப கம்பெரி ...... யவிராலி
மலையில்வி ளங்கிய கந்த என்றுனை
மகிழ்வொடு வந்திசெய் மைந்த னென்றனை
வழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள் ...... பெருமாளே.
கரதலமும் குறி கொண்ட கண்டமும் விரவி எழுந்து சுருண்டு
வண்டு அடர் கனவிய கொண்டை குலைந்து அலைந்திட
அதி பாரக் களப சுகந்த மிகுந்த கொங்கைகள் இளக முயங்கி
மயங்கி அன்பு செய் கனி இதழ் உண்டு துவண்டு பஞ்சணை
மிசை வீழா
இரதம் அருந்தி உறும் கரும் கயல் பொருது சிவந்து
குவிந்திடும் படி இதவிய உந்தி எனும் தடம் தனில் உற
மூழ்கி
இனியது ஒர் இன்பம் விளைந்து அளைந்து பொய் வனிதையர்
தங்கள் மருங்கி இணங்கிய இளமை கிழம் படும் முன் பதம்
பெற உணர்வேனோ
பரத சிலம்பு புலம்பும் அம் பத வரி முக எண்கினுடன் குரங்கு
அணி பணிவிடை சென்று முயன்ற குன்று அணி இடையே
போய்
பகடி இலங்கை கலங்க அம் பொனின் மகுட சிரம் தசமும்
துணிந்து எழு படியும் நடுங்க விழும் பனம் பழம் எனவாகும்
மருதம் உதைந்த முகுந்தன் அன்புறு மருக
குவிந்து மலர்ந்த பங்கய வயலியில் அம்பு அவிழ் சண்பகம்
பெரிய விராலி மலையில் விளங்கிய கந்த
என்று உனை மகிழ்வொடு வந்தி செய் மைந்தன் என்றனை
வழி வழி அன்பு செய் தொண்டு கொண்டு அருள்
பெருமாளே. Add (additional) Audio/Video Link
577
விராலிமலை கரிபுராரி காமாரி தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி ...... கழையோனி
கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி
கணமொ டாடி காயோகி ...... சிவயோகி
பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி
பகரொ ணாத மாஞானி ...... பசுவேறி
பரத மாடி கானாடி பரவ யோதி காதீத
பரம ஞான வூர்பூத ...... அருளாயோ
சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவி
துரக கோப மீதோடி ...... வடமேரு
சுழல வேலை தீமூள அழுத ளாவி வாய்பாறி
சுரதி னோடு சூர்மாள ...... வுலகேழும்
திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள
திரளி னோடு பாறோடு ...... கழுகாடச்
செருவி னாடு வானீப கருணை மேரு வேபார
திருவி ராலி யூர்மேவு ...... பெருமாளே.
கரிபுராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி கழையோனி
கர உதாசன ஆசாரி பரசு பாணி பானாளி
கணமொ டாடி காயோகி சிவயோகி
பரம யோகி மாயோகி பரி அரா ஜடாசூடி
பகரொணாத மாஞானி பசுவேறி
பரதம் ஆடி கானாடி பர வயோதிக அதீத
பரம ஞான வூர் பூத அருளாயோ
சுருதி யாடி தாதா வி வெருவி யோட மூதேவி
துரக கோப மீதோடி வடமேரு
சுழல வேலை தீமூள அழுது அளாவி வாய்பாறி
சுரதினோடு சூர் மாள உலகேழும்
திகிரி மாதிர ஆவார திகிரி சாய வேதாள
திரளினோடு பாறோடு கழுகாட
செருவில் நாடு வான் நீப கருணை மேருவே பார
திருவி ராலியூர்மேவு பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=HElKIgulY9I
Add (additional) Audio/Video Link
578
விராலிமலை காம அத்திரமாகி தானாத்தன தான தனதன
தானாத்தன தான தனதன
தானாத்தன தான தனதன ...... தனதான
காமாத்திர மாகி யிளைஞர்கள்
வாழ்நாட்கொடு போகி யழகிய
காதாட்டிய பார இருகுழை ...... யளவோடிக்
கார்போற்றவ ழோதி நிழல்தனி
லார்வாட்கடை யீடு கனகொடு
காலேற்றுவை வேலின் முனைகடை ...... யமதூதர்
ஏமாப்பற மோக வியல்செய்து
நீலோற்பல ஆசில் மலருட
னேராட்டவி நோத மிடும்விழி ...... மடவார்பால்
ஏகாப்பழி பூணு மருளற
நீதோற்றிமு னாளு மடிமையை
யீடேற்றுத லாலுன் வலிமையை ...... மறவேனே
சீமாட்டியு மாய திரிபுரை
காலாக்கினி கோப பயிரவி
சீலோத்தமி நீலி சுரதிரி ...... புவநேசை
சீகார்த்திகை யாய அறுவகை
மாதாக்கள்கு மார னெனவெகு
சீராட்டொடு பேண வடதிசை ...... கயிலாசக்
கோமாற்குப தேச முபநிட
வேதார்த்தமெய்ஞ் ஞான நெறியருள்
கோதாட்டிய ஸ்வாமி யெனவரு ...... மிளையோனே
கோடாச்சிவ பூஜை பவுருஷ
மாறாக்கொடை நாளு மருவிய
கோனாட்டுவி ராலி மலையுறை ...... பெருமாளே.
காம அத்திரமாகி இளைஞர்கள் வாழ் நாள் கொடு போகி
அழகிய காது ஆட்டிய பார இரு குழை அளவோடி
கார் போல் தவழ் ஓதி நிழல் தனில் ஆர் வாள் கடை ஈடு
கன(ம்) கொ(ண்)டு
கால் ஏற்று வை வேலின் முனைக் கடை யம தூதர் ஏமாப்பு
அற மோக இயல் செய்து
நீலோற்பல ஆசு இல் மலருடன் நேர் ஆட்டம் விநோதமிடும்
விழி மடவார் பால் ஏகாப் பழி பூணும் மருள் அற
நீ தோற்றி மு(ன்)னாளும் அடிமையை ஈடேற்றுதலால் உன்
வலிமையை மறவேனே
சீமாட்டியும் ஆய திரி புரை காலாக்கினி கோப பயிரவி
சீல உத்தமி நீலி சுர திரி புவன ஈசை
சீ(ர்) கார்த்திகையாய அறு வகை மாதாக்கள் குமாரன் என
வெகு சீராட்டொடு பேண
வட திசை கயிலாச கோமாற்கு உபதேசம் உபநிட வேத
அர்த்த மெய்ஞ் ஞான நெறி அருள்
கோது ஆட்டிய ஸ்வாமி என வரும் இளையோனே
கோடாச் சிவ பூஜை பவுருஷ மாறாக் கொடை நாளும்
மருவிய
கோனாட்டு விராலி மலை உறை பெருமாளே. Add (additional) Audio/Video Link
579
விராலிமலை கொடாதவனை தனாதனன தான தந்த தனாதனன தான தந்த
தனாதனன தான தந்த ...... தனதான
கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து
குலாவியவ மேதி ரிந்து ...... புவிமீதே
எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து
எலாவறுமை தீர அன்று ...... னருள்பேணேன்
சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி
சுகாதரம தாயொ ழுங்கி ...... லொழுகாமல்
கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து
கிலாதவுட லாவி நொந்து ...... மடியாமுன்
தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல்
சொலேழுலக மீனு மம்பை ...... யருள்பாலா
நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப
நபோமணி சமான துங்க ...... வடிவேலா
படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து
பசேலெனவு மேத ழைந்து ...... தினமேதான்
விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு
விராலிமலை மீது கந்த ...... பெருமாளே.
கொடாதவனையே புகழ்ந்து
குபேரனெனவே மொழிந்து
குலாவி யவமே திரிந்து
புவிமீதே எடாதசுமையே சுமந்து
எணாதகலியால் மெலிந்து
எலாவறுமை தீர
அன்றுனருள்பேணேன்
சுடாத தனமான கொங்கைகளால்
இதயமே மயங்கி
சுகாதரமதாய் ஒழுங்கில் ஒழுகாமல்
கெடாத தவமே மறைந்து
கிலேசமதுவே மிகுந்து
கிலாத உடல் ஆவி நொந்து மடியாமுன்
தொடாய்மறலியே நி யென்ற சொல் ஆகியது
உன் நா வருங்கொல் சொல்
ஏழுலகம் ஈனும் அம்பை யருள்பாலா
நடாதசுழி மூல விந்து
நள் ஆவி விளை ஞான நம்ப
நபோமணி சமான துங்க வடிவேலா
படாதகுளிர் சோலை
அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து
பசேலெனவ மே தழைந்து தினமேதான்
விடாதுமழை மாரி சிந்த
அநேகமலர் வாவி பொங்கு
விராலிமலை மீது உகந்த பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=3YN1d0noAds
Add (additional) Audio/Video Link
580
விராலிமலை மாயா சொரூபம் தானா தனான தனத்த தத்தன
தானா தனான தனத்த தத்தன
தானா தனான தனத்த தத்தன ...... தனதான
மாயா சொரூப முழுச்ச மத்திகள்
ஓயா வுபாய மனப்ப சப்பிகள்
வாணா ளையீரும் விழிக்க டைச்சிகள் ...... முநிவோரும்
மாலா கிவாட நகைத்து ருக்கிகள்
ஏகா சமீது தனத்தி றப்பிகள்
வாரீ ரிரீரென் முழுப்பு ரட்டிகள் ...... வெகுமோகம்
ஆயா தவாசை யெழுப்பு மெத்திகள்
ஈயா தபோதி லறப்பி ணக்கிகள்
ஆவே சநீருண் மதப்பொ றிச்சிகள் ...... பழிபாவம்
ஆமா றெணாத திருட்டு மட்டைகள்
கோமா ளமான குறிக்க ழுத்திகள்
ஆசா ரவீன விலைத்த னத்திய ...... ருறவாமோ
காயா தபால்நெய் தயிர்க்கு டத்தினை
ஏயா வெணாம லெடுத்தி டைச்சிகள்
காணா தவாறு குடிக்கு மப்பொழு ...... துரலோடே
கார்போ லுமேனி தனைப்பி ணித்தொரு
போர்போ லசோதை பிடித்த டித்திட
காதோ டுகாது கையிற்பி டித்தழு ...... தினிதூதும்
வேயா லநேக விதப்ப சுத்திரள்
சாயா மல்மீள அழைக்கு மச்சுதன்
வீறா னமாம னெனப்ப டைத்தருள் ...... வயலூரா
வீணாள் கொடாத படைச்செ ருக்கினில்
சூர்மா ளவேலை விடுக்கும் அற்புத
வேலா விராலி மலைத்த லத்துறை ...... பெருமாளே.
மாயா சொரூப முழுச் சமத்திகள் ஓயா உபாய மனப் பசப்பிகள்
வாழ் நாளை ஈரும் விழிக் கடைச்சிகள் முநிவோரும் மால்
ஆகி வாட நகைத்து உருக்கிகள்
ஏகாசம் மீது தனம் திறப்பிகள் வாரீர் இரீர் என் முழுப்
புரட்டிகள் வெகு மோகம் ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்
ஈயாத போதில் அறப் பிணக்கிகள்
ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள் பழி பாவம் ஆ(கு)மாறு
எ(ண்)ணாத திருட்டு மட்டைகள் கோமாளமான குறிக்
கழுத்திகள் ஆசார ஈன விலைத் தனத்தியர் உறவாமோ
காயாத பால் நெய் தயிர்க் குடத்தினை ஏயா எண்ணாமல்
எடுத்து இடைச்சிகள் காணாதவாறு குடிக்கும் அப்பொழுது
உரலோடே கார் போலு மேனிதனைப் பிணித்து ஒரு போர்
போல் அசோதை பிடித்து அடித்திட காதோடு காது கையில்
பிடித்து அழுது
இனிது ஊதும் வேயால் அநேக விதப் பசுந் திரள் சாயாமல்
மீள அழைக்கும் அச்சுதன் வீறான மாமன் எனப் படைத்து
அருள் வயலூரா
வீணாள் கொடாத படைச் செருக்கினில் சூர் மாள வேலை
விடுக்கும் அற்புத வேலா விராலி மலைத் தலத்து உறை
பெருமாளே. Add (additional) Audio/Video Link
581
விராலிமலை மாலாசை கோபம் தானான தான தானான தான
தானான தான ...... தனதான
மாலாசை கோப மோயாதெ நாளு
மாயா விகார ...... வழியேசெல்
மாபாவி காளி தானேனு நாத
மாதா பிதாவு ...... மினிநீயே
நாலான வேத நூலாக மாதி
நானோதி னேனு ...... மிலைவீணே
நாள்போய் விடாம லாறாறு மீதில்
ஞானோப தேச ...... மருள்வாயே
பாலா கலார ஆமோத லேப
பாடீர வாக ...... அணிமீதே
பாதாள பூமி யாதார மீன
பானீய மேலை ...... வயலூரா
வேலா விராலி வாழ்வே சமூக
வேதாள பூத ...... பதிசேயே
வீரா கடோர சூராரி யேசெ
வேளே சுரேசர் ...... பெருமாளே.
மாலாசை கோபம்
ஓயாதெ நாளும்
மாயா விகார வழியேசெல்
மாபாவி காளி தானேனு
நாத மாதா பிதாவு மினிநீயே
நாலான வேத நூல்
ஆக மாதி
நானோதி னேனு மிலை
வீணே நாள்போய் விடாமல்
ஆறாறு மீதில்
ஞானோபதேசம் அருள்வாயே
பாலா கலார ஆமோத
அணிமீதே லேப பாடீர வாக
பாதாள பூமி யாதார
மீன பானீய
மேலை வயலூரா
வேலா விராலி வாழ்வே
சமூக வேதாள பூத பதி
சேயே
வீரா கடோர சூராரியே
செவேளே சுரேசர் பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=AebmblmE5jw
Add (additional) Audio/Video Link
582
விராலிமலை மேகம் எனும் குழல் தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
தானன தந்தன தாத்தன ...... தனதான
மேகமெ னுங்குழல் சாய்த்திரு கோகன கங்கொடு கோத்தணை
மேல்விழு கின்றப ராக்கினி ...... லுடைசோர
மேகலை யுந்தனி போய்த்தனி யேகர ணங்களு மாய்க்கயல்
வேல்விழி யுங்குவி யாக்குரல் ...... மயில்காடை
கோகில மென்றெழ போய்க்கனி வாயமு துண்டுரு காக்களி
கூரவு டன்பிரி யாக்கல ...... வியின்மூழ்கிக்
கூடிமு யங்கிவி டாய்த்திரு பாரத னங்களின் மேற்றுயில்
கூரினு மம்புய தாட்டுணை ...... மறவேனே
மோகர துந்துமி யார்ப்பவி ராலிவி லங்கலின் வீட்டதில்
மூவுல குந்தொழு தேத்திட ...... வுறைவோனே
மூதிசை முன்பொரு காற்றட மேருவை யம்பினில் வீழ்த்திய
மோகன சங்கரி வாழ்த்திட ...... மதியாமல்
ஆகம டிந்திட வேற்கொடு சூரனை வென்றடல் போய்த்தணி
யாமையின் வென்றவ னாற்பிற ...... கிடுதேவர்
ஆதி யிளந்தலை காத்தர சாள அவன்சிறை மீட்டவ
னாளுல கங்குடி யேற்றிய ...... பெருமாளே.
மேகம் எனும் குழல் சாய்த்து இரு கோகனகம் கொடு
கோத்து
அணை மேல் விழுகின்ற பராக்கினில் உடை சோர
மேகலையும் தனி போய்த் தனியே கரணங்களும் ஆய்க் கயல்
வேல் விழியும் குவியா
குரல் மயில் காடை கோகிலம் என்று எழ போய்க் கனி வாய்
அமுது உண்டு
உருகாக் களி கூர உடன் பிரியாக் கலவியில் மூழ்கிக் கூடி
முயங்கி
விடாய்த்து இரு தனங்களின் மேல் துயில் கூரினும் அம்புய
தாள்துணை மறவேனே
மோகர துந்துமி ஆர்ப்ப விராலி விலங்கலின் வீட்டதில் மூ
உலகும் தொழுது ஏத்திட உறைவோனே
மூ திசை முன்பு ஒரு கால் தட மேருவை அம்பினில் வீழ்த்திய
மோகன
சங்க அரி வாழ்த்திட மதியாமல் ஆகம் மடிந்திட வேல்
கொண்டு சூரனை வென்று
அடல் போய்த் தணியாமையின் வென்று
அவனால் பிறகிடு தேவர் ஆதி இளந்தலை காத்து அரசாள
அவன் சிறை மீட்டு
அவன் ஆள் உலகம் குடி ஏற்றிய பெருமாளே. Add (additional) Audio/Video Link
583
விராலிமலை மோதி இறுகி தான தனதனன தான தனதனன
தான தனதனன ...... தந்ததான
மோதி யிறுகிவட மேரு வெனவளரு
மோக முலையசைய ...... வந்துகாயம்
மோச மிடுமவர்கள் மாயை தனில்முழுகி
மூட மெனஅறிவு ...... கொண்டதாலே
காதி வருமியம தூதர் கயிறுகொடு
காலி லிறுகஎனை ...... வந்திழாதே
காவ லெனவிரைய வோடி யுனதடிமை
காண வருவதினி ...... யெந்தநாளோ
ஆதி மறையவனு மாலு முயர்சுடலை
யாடு மரனுமிவ ...... ரொன்றதான
ஆயி யமலைதிரி சூலி குமரிமக
மாயி கவுரியுமை ...... தந்தவாழ்வே
சோதி நிலவுகதிர் வீசு மதியின்மிசை
தோய வளர்கிரியி ...... னுந்திநீடு
சோலை செறிவுளவி ராலி நகரில்வளர்
தோகை மயிலுலவு ...... தம்பிரானே.
மோதி இறுகி வட மேரு என வளரும் மோக முலை அசைய
வந்து
காயம் மோசம் இடும் அவர்கள் மாயை தனில் முழுகி மூடம்
என அறிவு கொண்டதாலே
காதி வரும் இயம தூதர் கயிறு கொடு காலில் இறுக எனை
வந்து இழாதே
காவல் என விரைய ஓடி உனது அடிமை காண வருவது இனி
எந்த நாளோ
ஆதி மறையவனும் மாலும் உயர் சுடலை ஆடும் அரனும் இவர்
ஒன்று அதான ஆயி
அமலை திரி சூலி குமரி மகமாயி கவுரி உமை தந்த வாழ்வே
சோதி நிலவு கதிர் வீசும் மதியின் மிசை தோய வளர் கிரியின்
உந்தி நீடுசோலை செறிவு(ள்)ள
விராலி நகரில் வளர் தோகை மயில் உலவு தம்பிரானே. Add (additional) Audio/Video Link