![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: வழுவூர்
809 தருவூரிசை 810 தலை நாளில் பதம்
809
வழுவூர் தருவூரிசை தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன ...... தனதானா
தருவூரிசை யாரமு தார்நிகர்
குயிலார்மொழி தோதக மாதர்கள்
தணியாமய லாழியி லாழவு ...... மமிழாதே
தழலேபொழி கோரவி லோசன
மெறிபாசம காமுனை சூலமுள்
சமனார்முகில் மேனிக டாவினி ...... லணுகாதே
கருவூறிய நாளுமு நூறெழு
மலதேகமு மாவலு மாசைக
படமாகிய பாதக தீதற ...... மிடிதீரக்
கனிவீறிய போதமெய் ஞானமு
மியலார்சிவ நேசமு மேவர
கழல்சேரணி நூபுர தாளிணை ...... நிழல்தாராய்
புருகூதன்மி னாளொரு பாலுற
சிலைவேடுவர் மானொரு பாலுற
புதுமாமயில் மீதணை யாவரு ...... மழகோனே
புழுகார்பனிர் மூசிய வாசனை
யுரகாலணி கோலமென் மாலைய
புரிநூலுமு லாவுது வாதச ...... புயவீரா
மருவூர்குளிர் வாவிகள் சோலைகள்
செழிசாலிகு லாவிய கார்வயல்
மகதாபத சீலமு மேபுனை ...... வளமூதூர்
மகதேவர்பு ராரிச தாசிவர்
சுதராகிய தேவசி காமணி
வழுவூரில்நி லாவிய வாழ்வருள் ...... பெருமாளே.
தரு ஊர் இசையார் அமுது ஆர் நிகர்
குயிலார் மொழி தோதக மாதர்கள்
தணியா மயல் ஆழியில் ஆழவும்.....அமிழாதே
தழலே பொழி கோர விலோசனம்
எறி பாச மகா முனை சூலம் உள்
சமனார் முகில் மேனி கடாவினில்.....அணுகாதே
கரு ஊறிய நாளு மு(ந்)நூறு எழு
மல தேகமும் ஆவலும் ஆசை
கபடம் ஆகிய பாதக தீது அற.....மிடி தீர
கனி வீறிய போத(ம்) மெய் ஞானமும்
இயலார் சிவ நேசமுமே வர
கழல் சேர் அணி நூபுர தாள் இணை.....நிழல் தாராய்
புருகூதன் மி(ன்)னாள் ஒரு பால் உற
சிலை வேடுவர் மான் ஒரு பால் உற
புதுமா மயில் மீது அணையாவரும்.....அழகோனே
புழுகு ஆர் ப(ன்)னிர் மூசிய வாசனை
உர(ம்) கால் அணி கோல மென் மாலைய
புரி நூலும் உலாவ துவாதச.....புய வீரா
மருவூர் குளிர் வாவிகள் சோலைகள்
செழி சாலி குலாவிய கார் வயல்
மக தாபத சீலமுமே புனை.....வள மூதூர்
மக தேவர் புராரி சதாசிவர்
சுதர் ஆகிய தேவ சிகாமணி
வழுவூரில் நிலாவிய வாழ்வருள்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
810
வழுவூர் தலை நாளில் பதம் தனனா தத்தன தாத்த தந்தன
தனனா தத்தன தாத்த தந்தன
தனனா தத்தன தாத்த தந்தன ...... தனதான
தலைநா ளிற்பத மேத்தி யன்புற
வுபதே சப்பொரு ளூட்டி மந்திர
தவஞா னக்கட லாட்டி யென்றனை ...... யருளாலுன்
சதுரா கத்தொடு கூட்டி யண்டர்க
ளறியா முத்தமி ழூட்டி முண்டக
தளிர்வே தத்துறை காட்டி மண்டலம் ...... வலமேவும்
கலைசோ திக்கதிர் காட்டி நன்சுட
ரொளிநா தப்பர மேற்றி முன்சுழி
கமழ்வா சற்படி நாட்ட முங்கொள ...... விதிதாவிக்
கமலா லைப்பதி சேர்த்து முன்பதி
வெளியா கப்புக ஏற்றி யன்பொடு
கதிர்தோ கைப்பரி மேற்கொ ளுஞ்செயல் ...... மறவேனே
சிலைவீ ழக்கடல் கூட்ட முங்கெட
அவுணோ ரைத்தலை வாட்டி யம்பர
சிரமா லைப்புக வேற்ற வுந்தொடு ...... கதிர்வேலா
சிவகா மிக்கொரு தூர்த்த ரெந்தையர்
வரிநா கத்தொடை யார்க்கு கந்தொரு
சிவஞா னப்பொரு ளூட்டு முண்டக ...... அழகோனே
மலைமே வித்தினை காக்கு மொண்கிளி
யமுதா கத்தன வாட்டி யிந்துள
மலர்மா லைக்குழ லாட்ட ணங்கிதன் ...... மணவாளா
வரிகோ ழிக்கொடி மீக்கொ ளும்படி
நடமா டிச்சுரர் போற்று தண்பொழில்
வழுவூர் நற்பதி வீற்றி ருந்தருள் ...... பெருமாளே.
தலை நாளில் பதம் ஏத்தி அன்புற
உபதேசப் பொருள் ஊட்டி மந்திர
தவ ஞானக் கடல் ஆட்டி என்தனை.....அருளால்
உன் சதுர் ஆகத்தோடு கூட்டி அண்டர்கள்
அறியா முத்தமிழ் ஊட்டி முண்டக
தளிர் வேதத் துறை காட்டி மண்டலம்.....வலம் மேவும்
கலை சோதிக் கதிர் காட்டி நன் சுடர்
ஒளி நாதப் பரம் ஏற்றி முன் சுழி
கமழ் வாசல் படி நாட்டமும் கொள.....விதி தாவி
கமல ஆலைப் பதி சேர்த்து முன் பதி
வெளியாகப் புக ஏற்றி அன்பொடு
கதிர் தோகைப் பரி மேற் கொ(ள்)ளும் செயல்.....மறவேனே
சிலை வீழக் கடல் கூட்டமும் கெட
அவுணோரைத் தலை வாட்டி அம்பர
சிர மாலைப் புக ஏற்றவும் தொடு.....கதிர்வேலா
சிவகாமிக்கு ஒரு தூர்த்தர் எந்தையர்
வரி நாகத் தொடையார்க்கு உகந்து ஒரு
சிவ ஞானப் பொருள் ஊட்டும் முண்டக.....அழகோனே
மலை மேவித் தினை காக்கும் ஒண் கிளி
அமுது ஆகத் தன வாட்டி இந்துளம்
மலர் மாலைக் குழல் ஆட்டு அணங்கி தன்.....மணவாளா
வரி கோழிக் கொடி மீக் கொளும்படி
நடமாட சுரர் போற்று(ம்) தண் பொழில்
வழுவூர் நல் பதி வீற்றிருந்து அருள்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000