சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: வள்ளிமலை
530   அல்லி விழியாலும்     531   ஐயுமுறு நோயும்     532   கை ஒத்து வாழும்     533   முல்லைக்கும் மாரன்     534   கள்ளக் குவால் பை     535   வெல்லிக்கு வீக்கும்     536   ககனமும் அநிலமும்     537   அல் அசல் அடைந்த     538   குடிவாழ்க்கை     539   சிரம் அங்கம் அம் கை     540   வரைவில் பொய்    
530   வள்ளிமலை   அல்லி விழியாலும்  
தய்யதன தான தய்யதன தான
     தய்யதன தானத் ...... தனதான

அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
     மல்லல்பட ஆசைக் ...... கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
     முள்ளவினை யாரத் ...... தனமாரும்
இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
     வல்லெருமை மாயச் ...... சமனாரும்
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
     உய்யவொரு நீபொற் ...... கழல்தாராய்
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
     சொல்லுமுப தேசக் ...... குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
     வெள்ளிவன மீதுற் ...... றுறைவோனே
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
     வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
     வள்ளிமண வாளப் ...... பெருமாளே.


அல்லிவிழியாலும் முல்லைநகையாலும்
     அல்லல்பட ஆசைக்.....கடல் ஈயும்
அள்ள இனிதாகி நள்ளிரவு போலும்
     உள்ளவினையார் அத்.....தனம் ஆரும்
இல்லும் இளையோரு மெல்ல அயலாக
     வல்லெருமை மாயச்.....சமனாரும்
எள்ளி யெனதாவி கொள்ளைகொளு நாளில்
     உய்யவொரு நீபொற்.....கழல்தாராய்
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
     சொல்லும் உபதேசக்.....குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
     எள்ளிவன மீதுற்று.....உறைவோனே
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ
     வல்லைவடி வேலைத்.....தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
     வள்ளிமண வாளப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=FpEXkpTy0zQ
Add (additional) Audio/Video Link

Back to Top

531   வள்ளிமலை   ஐயுமுறு நோயும்  
தய்யதன தான தய்யதன தான
     தய்யதன தானத் ...... தனதான

ஐயுமுறு நோயு மையலும வாவி
     னைவருமு பாயப் ...... பலநூலின்
அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு
     முள்ளமுமில் வாழ்வைக் ...... கருதாசைப்
பொய்யுமக லாத மெய்யைவள ராவி
     உய்யும்வகை யோகத் ...... தணுகாதே
புல்லறிவு பேசி யல்லல் படு வேனை
     நல்லஇரு தாளிற் ...... புணர்வாயே
மெய்யபொழில் நீடு தையலைமு நாலு
     செய்யபுய மீதுற் ...... றணைவோனே
வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ
     வெள்ளமுது மாவைப் ...... பொருதோனே
வையமுழு தாளு மையமயில் வீர
     வல்லமுரு காமுத் ...... தமிழ்வேளே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
     வள்ளிமண வாளப் ...... பெருமாளே.


ஐயும் உறு நோயும் மையலும் அவாவின்
     ஐவரும் உபாயப்.....பலநூலின்
அள்ளல் கடவாது துள்ளியதில் மாயும்
     உள்ளமும் இல் வாழ்வைக்.....கருதாசைப்
பொய்யும் அகலாத மெய்யைவளர் ஆவி
     உய்யும்வகை யோகத்து.....அணுகாதே
புல்லறிவு பேசி யல்லல் படு வேனை
     நல்லஇரு தாளிற்.....புணர்வாயே
மெய்ய பொழில் நீடு தையலை மு(ந்)நாலு
     செய்யபுய மீதுற்று.....அணைவோனே
வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ
     வெள்ள முது மாவைப்.....பொருதோனே
வையமுழுதாளும் ஐய மயில் வீர
     வல்லமுருகா முத்.....தமிழ்வேளே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
     வள்ளி மணவாளப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=cW4mY9jnIX0
Add (additional) Audio/Video Link

Back to Top

532   வள்ளிமலை   கை ஒத்து வாழும்  
தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த
     தய்யத்த தான தந்த ...... தனதான

கையொத்து வாழு மிந்த மெய்யொத்த வாழ்வி கந்து
     பொய்யொத்த வாழ்வு கண்டு ...... மயலாகிக்
கல்லுக்கு நேரும் வஞ்ச வுள்ளத்தர் மேல்வி ழுந்து
     கள்ளப்ப யோத ரங்க ...... ளுடன்மேவி
உய்யப்ப டாமல் நின்று கையர்க்கு பாய மொன்று
     பொய்யர்க்கு மேய யர்ந்து ...... ளுடைநாயேன்
உள்ளப்பெ றாக நின்று தொய்யப்ப டாம லென்று
     முள்ளத்தின் மாய்வ தொன்றை ...... மொழியாயோ
ஐயப்ப டாத ஐந்து பொய்யற்ற சோலை தங்கு
     தெய்வத்தெய் வானை கொங்கை ...... புணர்வோனே
அல்லைப்பொ றாமு ழங்கு சொல்லுக்ர சேவ லொன்று
     வெல்லப்ப தாகை கொண்ட ...... திறல்வேலா
வையத்தை யோடி யைந்து கையற்கு வீசு தந்தை
     மெய்யொத்த நீதி கண்ட ...... பெரியோனே
வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
     வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே.


கை ஒத்து வாழும் இந்த மெய் ஒத்த வாழ்வு இகந்து
     பொய் ஒத்த வாழ்வு கண்டு.....மயலாகி
கல்லுக்கு நேரும் வஞ்ச உள்ளத்தர் மேல் விழுந்து
     கள்ளப் பயோதரங்கள்.....உடன் மேவி
உய்யப் படாமல் நின்று கையர்க்கு உபாயம் ஒன்று
     பொய்யர்க்குமே அயர்ந்து உள்.....உடை நாயேன்
உள்ளப் பெறாக நின்று தொய்யப்படாமல் என்றும்
     உள்ளத்தின் மாய்வது ஒன்றை.....மொழியாயோ
ஐயப் படாத ஐந்து பொய் அற்ற சோலை தங்கு
     தெய்வத் தெய்வானை கொங்கை.....புணர்வோனே
அல்லைப் பொறா முழங்கு சொல் உக்ர சேவல் ஒன்று
     வெல்லப் பதாகை கொண்ட.....திறல் வேலா
வையத்தை ஓடி ஐந்து கையற்கு வீசு தந்தை
     மெய் ஒத்த நீதி கண்ட.....பெரியோனே
வள்ளிக் குழாம் அடர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
     வள்ளிக்கு வேடை கொண்ட.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

533   வள்ளிமலை   முல்லைக்கும் மாரன்  
தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த
     தய்யத்த தான தந்த ...... தனதான

முல்லைக்கு மார னங்கை வில்லுக்கு மாதர் தங்கள்
     பல்லுக்கும் வாடி யின்ப ...... முயலாநீள்
முள்ளுற்ற கால்ம டிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து
     பள்ளத்தில் வீழ்வ தன்றி ...... யொருஞான
எல்லைக்கு மார ணங்கள் சொல்லித்தொ ழாவ ணங்கு
     மெல்லைக்கும் வாவி நின்ற ...... னருள்நாமம்
எள்ளற்கு மால யர்ந்து வுள்ளத்தி லாவ என்று
     முள்ளப்பெ றாரி ணங்கை ...... யொழிவேனோ
அல்லைக்க வானை தந்த வல்லிக்கு மார்பி லங்க
     அல்லிக்கொள் மார்ப லங்கல் ...... புனைவோனே
அள்ளற்ப டாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி
     மெள்ளச்ச ரோரு கங்கள் ...... பயில்நாதா
வல்லைக்கு மார கந்த தில்லைப்பு ராரி மைந்த
     மல்லுப்பொ ராறி ரண்டு ...... புயவீரா
வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
     வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே.


முல்லைக்கும் மாரன் அம் கை வில்லுக்கும் மாதர் தங்கள்
     பல்லுக்கும் வாடி இன்பம்.....முயலா நீள்
முள் உற்ற கால் மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து
     பள்ளத்தில் வீழ்வது அன்றி.....ஒரு ஞான
எல்லைக்கும் ஆரணங்கள் சொல்லித் தொழா வணங்கும்
     எல்லைக்கும் வாவி நின்றன்.....அருள் நாமம்
எள்ளற்கு மால் அயர்ந்து உள்ளத்தில் ஆவ என்றும்
     உள்ளப் பெறா இணங்கை.....ஒழிவேனோ
அல்லைக்கு அவ் ஆனை தந்த வல்லிக்கு மார்பு இலங்க
     அல்லிக் கொள் மார்பு அலங்கல்.....புனைவோனே
அள்ளல் படாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி
     மெள்ளச்சரோருகங்கள்.....பயில் நாதா
வல்லைக் குமார கந்த தில்லைப் புராரி மைந்த
     மல்லுப் பொரு ஆறிரண்டு.....புய வீரா
வள்ளிக் குழாம் அடர்ந்த வள்ளிக் கல் மீது சென்று
     வள்ளிக்கு வேடை கொண்ட.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

534   வள்ளிமலை   கள்ளக் குவால் பை  
தய்யத்த தாத்த தய்யத்த தாத்த
     தய்யத்த தாத்த ...... தனதான

கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை
     துள்ளிக்க னார்க்க ...... யவுகோப
கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை
     கொள்ளைத்து ராற்பை ...... பசுபாச
அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை
     வெள்ளிட்ட சாப்பி ...... சிதமீரல்
அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்
     கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ
தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்
     வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே
சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்
     புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே
வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க
     வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே
வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த
     வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.


கள்ளக் குவால் பை தொள்ளைப் புலால் பை
     துள் இக்கனார்க்கு.....அயவு கோப
கள் வைத்த தோல் பை பொள்ளுற்ற கால் பை
     கொள்ளைத் துரால் பை.....பசு பாச
அள்ளல் பை மால் பை ஞெள்ளல் பை சீப் பை
     வெள்ளிட்ட அசாபி.....சிதம் ஈரல்
அள்ளச் சுவாக்கள் சள்ளிட்டு இழா பல்
     கொள்ளப்படு யாக்கை.....தவிர்வேனோ
தெள் அத்தி சேர்ப்ப வெள் அத்தி மாற்கும்
     வெள் உத்தி மாற்கும்.....மருகோனே
சிள் இட்ட காட்டில் உள்ளக் கிரார் கொல்
     புள் அத்த மார்க்கம்.....வருவோனே
வள்ளிச் சன்மார்க்கம் விள் ஐக்கு நோக்க
     வல்லைக்குள் ஏற்றும்.....இளையோனே
வள்ளிக் குழாத்து வள்ளிக் கல் காத்த
     வள்ளிக்கு வாய்த்த.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

535   வள்ளிமலை   வெல்லிக்கு வீக்கும்  
தய்யத்த தாத்த தய்யத்த தாத்த
     தய்யத்த தாத்த ...... தனதான

வெல்லிக்கு வீக்கு முல்லைக்கை வீக்கு
     வில்லிக்க தாக்க ...... ருதும்வேளால்
வில்லற்ற வாக்கொள் சொல்லற்று காப்பொய்
     யில்லத்து றாக்க ...... வலைமேவு
பல்லத்தி வாய்க்க அல்லற்ப டாக்கை
     நல்லிற்பொ றாச்ச ...... மயமாறின்
பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர்
     கல்விக்க லாத்த ...... லையலாமோ
அல்லைக்கொல் வார்த்தை சொல்லிக்கி தோத்து
     சொல்குக்கு டார்த்த ...... இளையோனே
அல்லுக்கு மாற்றி னெல்லுக்கு மேற்புல்
     கெல்லைப்ப டாக்க ...... ருணைவேளே
வல்லைக்கு மேற்றர் தில்லைக்கு மேற்றர்
     வல்லிக்கு மேற்ற ...... ரருள்வோனே
வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த
     வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.


வெல்லிக் கு(வீ)க்கும் முல்லைக் கை வீக்கு
     வில் இக்கு அதாக்.....கருதும் வேளால்
வில் அற்ற அவாக் கொள் சொல் அற்று உகாப் பொய்
     இல்லத்து உறாக்.....கவலை மேவு
பல் அத்தி வாய்க்க அல்லல் படு ஆக்கை
     நல்லில் பொறாச்.....சமயம் ஆறின்
பல் அத்த மார்க்க வல் அர்க்கர் மூர்க்கர்
     கல்விக் கலாத்து.....அலையலாமோ
அல்லைக் கொல் வார்த்தை சொல்லிக்கு இத(ம்) ஒத்து
     சொல் குக்குட(ம்) ஆர்த்த.....இளையோனே
அல்லுக்கும் ஆற்றின் எல்லுக்கும் மேல் புல்கு
     எல்லைப் படாக்.....கருணை வேளே
வல் ஐக்கும் ஏற்றர் தில்லைக்கும் ஏற்றர்
     வல்லிக்கும் ஏற்றர்.....அருள்வோனே
வள்ளிக் குழாத்து வள்ளிக் கல் காத்த
     வள்ளிக்கு வாய்த்த.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

536   வள்ளிமலை   ககனமும் அநிலமும்  
தனதன தனதன தனதன தனதன
     தய்யத்த தாத்த ...... தனதான

ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை
     கள்ளப் புலாற்கி ...... ருமிவீடு
கனலெழ மொழிதரு சினமென மதமிகு
     கள்வைத்த தோற்பை ...... சுமவாதே
யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள்
     உள்ளக்க ணோக்கு ...... மறிவூறி
ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
     லுள்ளத்தை நோக்க ...... அருள்வாயே
ம்ருகமத பரிமள விகசித நளினநள்
     வெள்ளைப்பி ராட்டி ...... இறைகாணா
விடதர குடிலச டிலமிசை வெகுமுக
     வெள்ளத்தை யேற்ற ...... பதிவாழ்வே
வகுளமு முகுளித வழைகளு மலிபுன
     வள்ளிக்கு லாத்தி ...... கிரிவாழும்
வனசரர் மரபினில் வருமொரு மரகத
     வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.


ககனமும் அநிலமும் அனல்புனல் நிலம் அமை
     கள்ளப் புலாற்.....கிருமிவீடு
கனலெழ மொழிதரு சினமென மதமிகு
     கள்வைத்த தோற்பை.....சுமவாதே
யுகஇறுதிகளிலும் இறுதியில் ஒருபொருள்
     உள்ளக்கண் நோக்கும்.....அறிவூறி
ஒளிதிகழ் அருவுருவெனு மறை யிறுதியில்
     உள்ளத்தை நோக்க.....அருள்வாயே
ம்ருகமத பரிமள விகசித நளினநள்
     வெள்ளைப்பிராட்டி.....இறைகாணா
விடதர குடில சடிலமிசை வெகுமுக
     வெள்ளத்தை யேற்ற.....பதிவாழ்வே
வகுளமு முகுளித வழைகளு மலி புன
     வள்ளிக் குலாத்தி.....கிரிவாழும்
வனசரர் மரபினில் வருமொரு மரகத
     வள்ளிக்கு வாய்த்த.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=PKvm81IufFQ
Add (additional) Audio/Video Link

Back to Top

537   வள்ளிமலை   அல் அசல் அடைந்த  
தய்யதன தந்த தய்யதன தந்த
     தய்யதன தந்த ...... தனதான

அல்லசல டைந்த வில்லடல நங்கன்
     அல்லிமல ரம்பு ...... தனையேவ
அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற
     லையமது கிண்ட ...... அணையூடே
சொல்லுமர விந்த வல்லிதனி நின்று
     தொல்லைவினை யென்று ...... முனியாதே
துய்யவரி வண்டு செய்யமது வுண்டு
     துள்ளியக டம்பு ...... தரவேணும்
கல்லசல மங்கை யெல்லையில்வி ரிந்த
     கல்விகரை கண்ட ...... புலவோனே
கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று
     கல்லலற வொன்றை ...... யருள்வோனே
வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச
     வல்லமைதெ ரிந்த ...... மயில்வீரா
வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று
     வள்ளியைம ணந்த ...... பெருமாளே.


அல் அசல் அடைந்த வில் அடல் அநங்கன்
     அல்லி மலர் அம்பு.....தனை ஏவ
அள்ளி எரி சிந்த பிள்ளை மதி தென்றல்
     ஐயம் அது கிண்ட.....அணையூடே
சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று
     தொல்லை வினை என்று முனியாதே
துய்ய வரி வண்டு செய்ய மது உண்டு
     துள்ளிய கடம்பு.....தரவேணும்
கல் அசல மங்கை எல்லையில் விரிந்த
     கல்வி கரை கண்ட.....புலவோனே
கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று
     கல்லல் அற ஒன்றை.....அருள்வோனே
வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச
     வல்லமை தெரிந்த.....மயில்வீரா
வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று
     வள்ளியை மணந்த.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

538   வள்ளிமலை   குடிவாழ்க்கை  
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
     தனதாத்த தய்ய ...... தனதான

குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
     குயில்போற்ப்ர சன்ன ...... மொழியார்கள்
குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன
     குருவார்த்தை தன்னை ...... யுணராதே
இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய
     இடர்கூட்ட இன்னல் ...... கொடுபோகி
இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
     னிருதாட்கள் தம்மை ...... யுணர்வேனோ
வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி
     மயில்மேற்றி கழ்ந்த ...... குமரேசா
வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
     மலைகாத்த நல்ல ...... மணவாளா
அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை
     யருள்போற்றும் வண்மை ...... தரும்வாழ்வே
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
     அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.


குடிவாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை
     குயில் போல் ப்ரசன்ன.....மொழியார்கள்
குலம் வாய்த்த நல்ல தனம் வாய்த்த தென்ன
     குருவார்த்தை தன்னை.....உணராதே
இட நாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய
     இடர்கூட்ட இன்னல்.....கொடுபோகி
இடுகாட்டில் என்னை எரியூட்டு முன்
     உன் இருதாட்கள் தம்மை.....உணர்வேனோ
வடநாட்டில் வெள்ளி மலை காத்து புள்ளி
     மயில்மேல் திகழ்ந்த.....குமரேசா
வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
     மலை காத்த நல்ல.....மணவாளா
அடி நாட்கள் செய்த பிழை நீக்கி என்னை
     அருள்போற்றும் வண்மை.....தரும்வாழ்வே
அடிபோற்றி அல்லி முடிசூட்ட வல்ல
     அடியார்க்கு நல்ல.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=LduoZqUJ4xA
Add (additional) Audio/Video Link

Back to Top

539   வள்ளிமலை   சிரம் அங்கம் அம் கை  
தனதந்த தந்தனம் தனதந்த தந்தனம்
     தனதந்த தந்தனம் ...... தனதான

சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ்
     சலமென்பு திண்பொருந் ...... திடுமாயம்
சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந்
     தழலிண்கண் வெந்துசிந் ...... திடஆவி
விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந்
     துயர்கொண்ட லைந்துலைந் ...... தழியாமுன்
வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்
     வினவென்று அன்புதந் ...... தருள்வாயே
அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கண்
     டமரஞ்ச மண்டிவந் ...... திடுசூரன்
அகலம்பி ளந்தணைந் தகிலம்ப ரந்திரங்
     கிடஅன்று டன்றுகொன் ...... றிடும்வேலா
மரைவெங்க யம்பொருந் திடவண்டி னங்குவிந்
     திசையொன்ற மந்திசந் ...... துடனாடும்
வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம்
     வரநின்று கும்பிடும் ...... பெருமாளே.


சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு
     செம்சலம் என்பு திண் பொருந்.....திடு மாயம்
சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு
     செம் தழலின் கண் வெந்து.....சிந்திட ஆவி
விரைவின் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம்
     துயர் கொண்டு அலைந்து.....அழியா முன்
வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம்
     வினவ என்று அன்பு தந்து.....அருள்வாயே
அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல் அண்டர்கண்டு
     அமர் அஞ்ச மண்டி வந்திடு.....சூரன்
அகலம் பிளந்து அணைந்து அகிலம் பரந்து இரங்கிட
     அன்று உடன்று கொன்றிடும்.....வேலா
மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து
     இசை ஒன்ற மந்தி சந்துடன்.....ஆடும்
வரையின் கண் வந்து வண் குற மங்கை பங்கயம்
     வர நின்று கும்பிடும்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=y-wUNNBDPtg
Add (additional) Audio/Video Link

Back to Top

540   வள்ளிமலை   வரைவில் பொய்  
தனதன தந்தன தந்த தந்தன
     தனதன தந்தன தந்த தந்தன
          தனதன தந்தன தந்த தந்தன ...... தனதான

வரைவில்பொய் மங்கையர் தங்க ளஞ்சன
     விழியையு கந்துமு கந்து கொண்டடி
          வருடிநி தம்பம ளைந்து தெந்தென ...... அளிகாடை
மயில்குயி லன்றிலெ னும்பு ளின்பல
     குரல்செய்தி ருந்துபி னுந்தி யென்கிற
          மடுவில்வி ழுந்துகி டந்து செந்தழல் ...... மெழுகாகி
உருகியு கந்திதழ் தின்று மென்றுகை
     யடியின கங்கள்வ ரைந்து குங்கும
          உபயத னங்கள்த தும்ப அன்புட ...... னணையாமஞ்
சுலவிய கொண்டைகு லைந்த லைந்தெழ
     அமளியில் மின்சொல்ம ருங்கி லங்கிட
          உணர்வழி யின்பம றந்து நின்றனை ...... நினைவேனோ
விரவி நெருங்குகு ரங்கி னங்கொடு
     மொகுமொகெ னுங்கட லுங்க டந்துறு
          விசைகொடி லங்கைபு குந்த ருந்தவர் ...... களிகூர
வெயில்நில வும்பரு மிம்ப ரும்படி
     ஜெயஜெய வென்றுவி டுங்கொ டுங்கணை
          விறல்நிரு தன்தலை சிந்தி னன்திரு ...... மருகோனே
அருகர்க ணங்கள்பி ணங்கி டும்படி
     மதுரையில் வெண்பொடி யும்ப ரந்திட
          அரகர சங்கர வென்று வென்றருள் ...... புகழ்வேலா
அறம்வளர் சுந்தரி மைந்த தண்டலை
     வயல்கள்பொ ருந்திய சந்த வண்கரை
          யரிவைவி லங்கலில் வந்து கந்தருள் ...... பெருமாளே.


வரைவில் பொய் மங்கையர் தங்கள் அஞ்சன
     விழியை உகந்து முகந்து கொண்டு அடி
        வருடி நிதம்பம் அளைந்து தெந்தென.....அளிகாடை
மயில் குயில் அன்றில் எனும் பு(ள்)ளின் பல
     குரல் செய்து இருந்து பின் உந்தி என்கிற
        மடுவில் விழுந்து கிடந்து செம் தழல்.....மெழுகாகி
உருகி உகந்து இதழ் தின்று மென்று கை
     யடியில் நகங்கள் வரைந்து குங்கும
        உபய தனங்கள் ததும்ப அன்புடன்.....அணையா மஞ்சு
உலவிய கொண்டை குலைந்து அலைந்து எழ
     அமளியில் மின் சொல் மருங்குல் இலங்கிட
        உணர்வு அழி இன்பம் மறந்து நின் தனை.....நினைவேனோ
விரவி நெருங்கு குரங்கு இனம் கொடு
     மொகுமொகு எனும் கடலும் கடந்து உறு
        விசை கொடு இலங்கை புகுந்து அரும் தவர்.....களி கூர
வெயில் நிலவு உம்பரும் இம்பரும் படி
     ஜெயஜெய என்று விடும் கொடும் கணை
        விறல் நிருதன் தலை சிந்தினன் திரு.....மருகோனே
அருகர் கணங்கள் பிணங்கிடும்படி
     மதுரையில் வெண் பொடியும் பரந்திட
        அரகர சங்கர என்று வென்று அருள்.....புகழ்வேலா
அறம் வளர் சுந்தரி மைந்த தண்டலை
     வயல்கள் பொருந்திய சந்த வண் கரை
        அரிவை விலங்கலில் வந்து உகந்து அருள்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000