|
655
வயிரவிவனம் அருவரை எடுத்த |
தனதன தனத்த தான தனதன தனத்த தான தனதன தனத்த தான ...... தனதான |
அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு மரனிட மிருக்கு மாயி ...... யருள்வோனே அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு மணிமயில் நடத்து மாசை ...... மருகோனே பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப னிருகர மிகுத்த பார ...... முருகாநின் பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள் பணியவு மெனக்கு ஞானம் ...... அருள்வாயே சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக் குளாதி சொலுவென வுரைத்த ஞான ...... குருநாதா சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள துணிபட அரக்கர் மாள ...... விடும்வேலா மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும் வயல்புடை கிடக்கு நீல ...... மலர்வாவி வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவி வனத்தில் மேவு ...... பெருமாளே.
|
அருவரை யெடுத்த வீரன்
நெரிபட விரற்கள் ஊணும்
அரனிட மிருக்கு மாயி யருள்வோனே
அலைகட லடைத்த ராமன்
மிகமன மகிழ்ச்சி கூரும்
அணிமயில் நடத்தும் ஆசை மருகோனே
பருதியி னொளிக்கண் வீறும்
அறுமுக நிரைத்த தோள்பனிருகர
மிகுத்த பார முருகா
நின்பதமல ருளத்தி னாளு நினைவுறு
கருத்தர் தாள்கள் பணியவும்
எனக்கு ஞானம் அருள்வாயே
சுருதிகளுரைத்த வேதன் உரைமொழி தனக்குள் ஆதி
சொலுவென வுரைத்த ஞானகுருநாதா
சுரர்பதி தழைத்து வாழ
அமர்சிறை யனைத்து மீள
துணிபட அரக்கர் மாள விடும்வேலா
மருமலர் மணக்கும் வாச நிறைதரு
தருக்கள் சூழும் வயல்புடை கிடக்கு
நீல மலர்வாவி வளமுறு தடத்தினோடு
சரஸ்வதி நதிக்கண் வீறு |
| Audio/Video Link(s) |
|
https://www.youtube.com/watch?v=jX-yoHxvQzE
|
Add (additional) Audio/Video Link
|